பீதர் கலன் (Bidriware, கன்னடம்: ಬಿದ್ರಿ ಕಲೆ ) பீதரின் சிறப்பு மிக்க மாழை கைவினைப் பொருளாகும். கிபி 14ஆம் நூற்றாண்டில் பாமினி சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் இது உருவானது.[1] இந்த சிறப்புமிக்க மாழைகலன்கள் பெரும்பான்மையாக பீதர் நகரில் தயாரிக்கப்படுவதால் 'பீதர் கலன்' என அழைக்கப்படுகின்றன.[2] இதன் தனித்துவமான உட்செருகு கலைநயத்தால் இந்தியக் கைவினைப் பொருட்களில் முதன்மை ஏற்றுமதிப் பொருளாக விளங்குகின்றது. செல்வச்செழிப்பின் அடையாளமாக இதனை வாங்குவோரும் உண்டு. கருநிறமாக்கிய துத்தநாக செப்பு கலந்த கலப்புலோகத்தில் தூய வெள்ளியை உட்செருகி இது உருவாக்கப்படுகின்றது.[2] இந்தக் கைவினைக் கலைப் பொருளுக்கு புவிசார் குறியீடு (GI) கிடைத்துள்ளது.[3]

பீதர் கலன், ஹுக்கா

காட்சியகம் தொகு

மேற்சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீதர்_கலன்&oldid=3856537" இலிருந்து மீள்விக்கப்பட்டது