புதிய உலகம்

புதிய உலகம் (New World) மேற்கு அரைக்கோளத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும்; குறிப்பாக கரீபியன், பெர்முடா போன்ற அண்மையத் தீவுகள் உள்ளிட்ட அமெரிக்காக்களை குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. சில நேரங்களில் ஓசியானியாவும் (ஆஸ்திரலேசியா) இதில் உள்ளடங்கும்.

1540இல் முதன்முதலாக பதிப்பிக்கப்பட்ட புதிய உலகத்தின் நிலப்படம் - செபாஸ்டியன் முன்ஸ்டர்
அமெரிக்காக்கள், ஓசியானியா அடங்கிய புதிய உலகம். "பழைய உலகத்தில்" ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா அடங்கின.

16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், கண்டுபிடிப்புக் காலத்தில், பிற்காலத்தில் அமெரிக்காக்கள் எனப்படுகின்ற நிலத்தில் ஐரோப்பியர்கள் கால் பதித்தபோது இச்சொல் புழக்கத்திற்கு வந்தது. கிரேக்க-ரோமானிய நிலவியலாளர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்கள் மட்டுமே உலகம் என கருதியிருந்தனர்; இவை கூட்டாக பழைய உலகம் (அல்லது ஆப்பிரிக்க-யூரேசியா) எனப்பட்டது. செவ்வியல் புவியியலை விரிவாக்கும் வண்ணம் புதிதாகக் கண்டறிந்த நிலப்பகுதிகள் புதிய உலகம் எனப்பட்டன.

இச்சொல்லை முதலில் பிளாரென்சு தேடலியலாளர் அமெரிகோ வெஸ்புச்சி பயன்படுத்தினார். பின்னாளில் அமெரிக்காக்களுக்கு இவரது பெயரே சூட்டப்பட்டது.

தவிர அமெரிக்காக்கள் "உலகின் நான்காவது பகுதி" எனவும் குறிப்பிடப்படுகின்றன.[1]

தொடர்புடைய பக்கங்கள் தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. M.H.Davidson (1997) Columbus Then and Now, a life re-examined. Norman: University of Oklahoma Press, p.417)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_உலகம்&oldid=2070051" இலிருந்து மீள்விக்கப்பட்டது