புன்டசுலீகா

புன்டசுலீகா (The Fußball-Bundesliga [ˈfuːsbal ˈbʊndəsˌliːɡa]; Bundesliga) என்பது செருமனியின் முதல்நிலைக் கால்பந்துக் கூட்டிணைவுத் தொடராகும். இதுவே உலக அளவில் இரசிகர்கள் வருகை தரும் விளையாட்டுக் கூட்டிணைவாகும். செருமனியின் கால்பந்துக் கூட்டிணைவு அமைப்பின் உயர்மட்ட நிலையாக உள்ள இதுவே, செருமனியின் முதன்மையான கால்பந்துப் போட்டித்தொடர் ஆகும். இதில் 18 அணிகள் பங்கேற்கும். 2. புன்டசுலீகா-வுடன் அணிகள்-தகுதிக் குறைப்பு-தகுதியுயர்வு முறைமையில் செயல்படுகிறது. ஒவ்வொரு பருவமும் ஆகத்து மாதம் தொடங்கி மே-மாதம் முடிவடைகிறது. சில போட்டிகள் தவிர்த்து, பெருமளவிலான போட்டிகள் வார-இறுதி நாட்களில் நடத்தப்படுகின்றன. அனைத்து புன்டசுலீகா அணிகளும் செருமன் கால்பந்துச் சங்கக் கோப்பைக்குத் (DFB-Pokal) தகுதிபெறும். புன்டசுலீகா வாகையாளர் செருமானிய உன்னதக் கோப்பைக்குத் (DFL-Supercup) தகுதிபெறுவர்.

புன்டசுலீகா
நாடுகள்செருமனி
கால்பந்து
ஒன்றியம்
யூஈஎஃப்ஏ
தோற்றம்1963
அணிகளின்
எண்ணிக்கை
20
Levels on pyramid1
தகுதியிறக்கம்2. புன்டசுலீகா
உள்நாட்டுக்
கோப்பை(கள்)
செருமன் கால்பந்துச் சங்கக் கோப்பை
செருமானிய உன்னதக் கோப்பை
சர்வதேச
கோப்பை(கள்)
யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு
யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு
தற்போதைய
வாகையர்
பேயர்ன் மியூனிக் (22வது புன்டசுலீகா பட்டம்)
(2018–19 புன்டசுலீகா)
அதிகமுறை
வாகைசூடியோர்
பேயர்ன் மியூனிக் (22 புன்டசுலீகா பட்டங்கள்)
தொலைக்காட்சி
பங்குதாரர்கள்
Sky Deutschland
ARD
ZDF
Sport1
இணையதளம்bundesliga.com
2019–20 Bundesliga

1963-ஆம் ஆண்டில் புன்டசுலீகா தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தமாக 52 அணிகள் பங்கேற்று இருக்கின்றன. பேயர்ன் மியூனிக் அணி அதிகபட்சமாக 22 முறை புன்டசுலீகா வாகையர் பட்டத்தை வென்றிருக்கிறது. பொருசியா டார்ட்மண்ட், ஹாம்பர்க், வெர்டர் பிரமன், பொருசியா மொன்சன்கிளாட்பாச் மற்றும் ஸ்டுட்கார்ட் போன்ற அணிகளும் புன்டசுலீகா பட்டத்தை வென்றுள்ளன. தேசிய கால்பந்துக் கூட்டிணைவுகளில் புன்டசுலீகா, முக்கியமான ஒன்றாகும். அண்மைக்கால செயல்பாடுகளின் அடிப்படையில் யூஈஎஃப்ஏ கூட்டிணைவுக் குணக தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.[1] உலகிலேயே அதிக அரங்க-பார்வையாளர்களைக் கொண்ட கால்பந்துக் கூட்டிணைவாக புன்டசுலீகா விளங்குகிறது; 2011-12 பருவத்தின் போதான சராசரி பார்வையாளர் வருகை 45,134-ஆனது (அனைத்து விளையாட்டுகளிலும்) உலகிலேயே இரண்டாவது அதிகபட்ச வருகைப்பதிவாகும்.[2] மேலும், 200-க்கும் அதிகமான நாடுகளில் புன்டசுலீகா ஒளிபரப்பப்படுகிறது.[3]

1962-ஆம் ஆண்டில் டார்ட்மண்டில் புன்டசுலீகா கருத்துருப் பெற்று, முதல் பருவம் 1963-இல் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை பல்வேறு விதமான அமைப்பு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் செருமானிய கால்பந்துச் சங்கத்தினால் தொடங்கப்பட்ட புன்டசுலீகா, தற்போது செருமன் கால்பந்துக் கூட்டிணைவினால் நிர்வகித்து நடத்தப்படுகிறது.

குறிப்புதவிகள் தொகு

  1. "UEFA Country Ranking 2011". பார்க்கப்பட்ட நாள் 5 November 2011.
  2. Cutler, Matt (15 June 2010). "Bundesliga attendance reigns supreme despite decrease". Sport Business. பார்க்கப்பட்ட நாள் 4 January 2012.
  3. "TV BROADCASTERS WORLDWIDE" இம் மூலத்தில் இருந்து 2013-05-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130520041934/http://www.bundesliga.com/en/watch/broadcasters/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்டசுலீகா&oldid=3221892" இலிருந்து மீள்விக்கப்பட்டது