புரந்தர் உடன்படிக்கை (1665)

புரந்தர் உடன்படிக்கை (Treaty of Purandar (மராத்தி: पुरंदर चा तह) முகலாயப் பேரரசின் இராஜபுத்திர படைத்தலைவர் முதலாம் ஜெய் சிங் புரந்தர் கோட்டையை கைப்பற்றிய பிறகு, மராத்தியத் தலைவர் சிவாஜியுடன் 11 சூன் 1665 அன்று செய்து கொள்ளப்பட்ட உடன்படிககை ஆகும்.

முகலாயப் படைத்தலைவரும், ஆமபர் இராச்சிய மன்னருமான முதலாம் ஜெய் சிங், புரந்தர் உடன்படிக்கையில் கையெழுத்து இடுவதற்கு முந்தைய நாளான்று சிவாஜியை வரவேற்கும் காட்சி, நாள் 10 சூன் 1665

புரந்தர் உடன்படிக்கையின் குறிப்புகள் தொகு

  1. சிவாஜி தனது கட்டுப்பாட்டில் இருந்த 12 கோட்டைகள் முகலாயப் பேரரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
  2. முகலாயர்கள் கேட்கும் போது, சிவாஜியின் படைகள் முகலாயப் படைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
  3. சிவாஜியின் மகன் சம்பாஜி முகலாயப் படையில் 5,000 வீரர்களுடன் பணி செய்ய வேண்டும்.
  4. பிஜப்பூர் சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கொங்கணப் பகுதியை சிவாஜி கோரினால், அதற்கு 40 இலட்சம் முகலாய ஹோன்கள், முகலாயர்களுக்கு செலுத்த வேண்டும்.

இந்த உடன்படிக்கையை சிவாஜி ஏற்றுக் கொண்டதுடன், அரசியல் பேச்சுவார்த்தைக்கு ஆக்ரா சென்று அவுரங்கசீப்பைச் சந்தித்தார்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Stewart, S. (1993), Gordan Stewart (ed.), The Marathas 1600-1818 (vol 2) Pg No. 73-74., Cambridge University Press, ISBN 9780521268837.
  2. John Murray, S. (1841), Mountstuart Elphinstone (ed.), The History of India (Vol. 2) Pg No. 475-476..
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரந்தர்_உடன்படிக்கை_(1665)&oldid=3027948" இலிருந்து மீள்விக்கப்பட்டது