புவி வெப்ப மண்டலங்கள்

புவி வெப்ப மண்டலங்கள் (Geographical zones) என்பன அட்சக்கோட்டுப் பரவலைப் பொறுத்து மாறுபடும் வெப்பநிலையின் அடிப்படையில் புவிக்கோளத்தின் பிரிப்புகளாகும்.

புவியின் வெப்ப மண்டலங்கள்
சராசரி ஆண்டு வெப்பநிலை அடிப்படையிலான வரைபடம்.

ஐந்து பிரிவுகள் தொகு

  1. வடக்கு குளிர் மண்டலம் - 66.5 டிகிரி ஆர்டிக் வட்டத்திலிருந்து 90டிகிரி வடதுருவம் வரை பரவியுள்ளது. புவியின் பரப்பளவில் 4.12% பரவியுள்ளது
  2. வடக்கு மிதவெப்ப மண்டலம் - கடகரேகை என்று அழைக்கப்படும் 22.5டிகிரி வடஅட்சரேகையில் இருந்து ஆர்டிக் வட்டம் எனப்படும் 66.5டிகிரி வடஅட்சரேகை வரை பரவியுள்ளது - புவியின் பரப்பளவில் 25.99% பரவியுள்ளது.
  3. வெப்பமண்டலம் - இது நிலநடுக்கோட்டு வெப்பமண்டலம் என்றும் அழைக்கப்படும். 23.5டிகிரி வடஅட்சக்கோடு (கடகரேகை)யில் இருந்து 23.5டிகிரி தென் அட்சரேகை (மகரரேகை) வரை பரவியுள்ளது. புவியின் பரப்பளவில் 39.78% பரவியுள்ளது.
  4. தெற்கு மிதவெப்ப மண்டலம் - கடகரேகை என்று அழைக்கப்படும் 22.5டிகிரி தெற்குஅட்சரேகையில் இருந்து அண்டார்டிக் வட்டம் எனப்படும் 66.5டிகிரி தெற்குஅட்சரேகை வரை பரவியுள்ளது - புவியின் பரப்பளவில் 25.99% பரவியுள்ளது.
  5. தெற்கு குளிர் மண்டலம் - 66.5 டிகிரி அண்டார்டிக் வட்டத்திலிருந்து 90டிகிரி தென் துருவம் வரை பரவியுள்ளது. புவியின் பரப்பளவில் 4.12% பரவியுள்ளது

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவி_வெப்ப_மண்டலங்கள்&oldid=2367539" இலிருந்து மீள்விக்கப்பட்டது