பூந்தோட்ட காவல்காரன்

செந்தில்நாதன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும், இதனை அறிமுக இயக்குநர் செந்தில்நாதன் இயக்கியிருந்தார். விஜயகாந்த், ராதிகா, ஆனந்த், வாணி விசுவநாத் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைக்க 1988 ஆம் ஆண்டு சூன் 10ஆம் தேதி வெளியானது.

பூந்தோட்ட காவல்காரன்
குறுந்தகுடு அட்டைப்படம்
இயக்கம்செந்தில்நாதன்
கதைலியாகத் அலிகான்
திரைக்கதைலியாகத் அலிகான்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா
ஆனந்த்
வாணி விசுவநாத்
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஜி.ஜெயசந்திரன்
விநியோகம்தமிழன்னை சினி புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடு10 சூன் 1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

செந்தில்நாதன், எம்.ஜி.ராமசந்திரனை வைத்து நம் நாடு படத்தை இயக்கிய ஜம்புலிங்கத்தின் மகன் ஆவார். எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் வி.அழகப்பன் ஆகியோரிடம் முன்னாள் உதவியாளராகப் பணியாற்றிய செந்தில்நாதன் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.

பாடல்கள் தொகு

இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். [1]

எண். பாடல்கள் பாடியவர்கள் எழுதியவர் நீளம் (m:ss)
1 என் உயிரே வா எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சித்ரா கங்கை அமரன் 04:31
2 அடி கானகருங்குயிலே கே. ஜே. யேசுதாஸ் 05:35
3 காவல்காரா காவல்காரா இளையராஜா 04:07
4 பாடாத தெம்மாங்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 05:32
5 பாராமல் பார்த்த நெஞ்சம் மனோ, சித்ரா 04:26
6 சிந்திய வெண்மணி கே. ஜே. யேசுதாஸ், பி.சுசீலா 04:22

வரவேற்பு தொகு

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமின்றி செந்தில்நாதன் இயக்கிய படங்களில் தலைசிறந்த படமாக இப்படம் கருதப்படுகிறது. 1980 களில் வந்த அதிரடி சார்ந்த படங்களில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடித்தது. விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகராக இப்படம் அறியச் செய்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "Poonthotta Kaavalkaaran Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-01-08.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தோட்ட_காவல்காரன்&oldid=3660517" இலிருந்து மீள்விக்கப்பட்டது