பூமிபுத்திரா (மலேசியா)

பூமிபுத்திரா (Bumiputra) என்பது மலேசியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மலேசியத் தீவுக்கூட்டங்களில் வாழும் மலாய் மக்களைக் குறிக்கும் ஓர் மலாய் சொல்லாகும். சமசுகிருத வேர்கொண்ட இந்தச் சொல்லின் பொருள் மண்ணின் மைந்தர் என்பதாகும்.

1970களில் மலேசிய அரசு பூமிபுத்திராக்களுக்கு வாய்ப்புகளை கூட்டும்விதமாக (பொதுக்கல்வியில் இட ஒதுக்கீடு உட்பட) பல கொள்கைகளை வகுத்தது. இது 1969ஆம் ஆண்டில் ஏற்பட்ட 13 மேயில் மலேசிய சீனர்களின் மீது நடந்த வன்முறைகளை அடுத்து இன வேறுபாடுகளை சமன்படுத்த இந்தக் கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டன. [1] இந்தக் கொள்கைகளால் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து நகரப்புறங்களில் மலாய் நடுத்தர மக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் சிற்றூர்ப் பகுதிகளில் வறுமையை ஒழிப்பதில் இவை வெற்றி பெறவில்லை. சில ஆய்வாளர்கள் இந்தக் கொள்கைகள் ஒதுக்கப்பட்ட மலேசிய சீனர் மற்றும் மலேசிய இந்தியர் சமூகங்களில் கசப்புணர்வை வளர்த்துள்ளதாக கருதுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "The slaughter of sacred cows". The Economist. 3 April 2003. http://www.economist.com/node/1677328. பார்த்த நாள்: 22 July 2011. 

வெளி உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமிபுத்திரா_(மலேசியா)&oldid=3574267" இலிருந்து மீள்விக்கப்பட்டது