பெனகல் ராமராவ்

இந்தியக் குடிமைப் பணி அதிகாரி

சர் பெனகல் ராமராவ், (Benegal RamaRau) (1 சூலை 1889 - 13 திசம்பர் 1969 [1] [2] ) இந்தியக் குடிமைப் பணி அதிகாரியான இவர், இந்திய ரிசர்வ் வங்கியின் நான்காவது ஆளுநராக 1949 ஜூலை 1 முதல் 1957 ஜனவரி 14 வரை இருந்தார்.[3]

பெனகல் ராமராவ்
இந்தியப் பேரரசின் ஆணை இந்தியக் குடிமைப் பணி
இந்திய ரிசர்வ் வங்கியின் நான்காவது ஆளுநர்
பதவியில்
1 சூலை 1949 – 14 சனவரி 1957
முன்னையவர்சி. து. தேஷ்முக்
பின்னவர்கே. ஜி. அம்பெகோகார்
ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான இந்தியத் தூதர்
பதவியில்
1948–1949
சப்பானுக்கான இந்தியத் தூதர்
பதவியில்
1947–1948
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1889-07-01)1 சூலை 1889
இறப்பு13 திசம்பர் 1969(1969-12-13) (அகவை 80)
முன்னாள் கல்லூரிகேம்பிரிட்ச் கிங்ஸ் கல்லூரி
வேலைஅரசு ஊழியர்
கையெழுத்து

இந்தியக் குடிமைப் பணி தொகு

சென்னை மாநிலக் கல்லூரியிலும், கேம்பிரிட்ச் கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார். 1919ஆம் ஆண்டில் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்த இவர், 1930ஆம் ஆண்டில் இந்தியப் பேரரசின் ஆணை எனவும் [4] 1939 இல் வீரத்திருத்தகை எனவும் கௌரவிக்கப்பட்டார்.[5] இந்தியக் குடிமைப் பணி உறுப்பினராக இருந்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இவர் மிக நீண்ட காலம் பதவியில் இருந்தபோது, நிதியமைச்சர் தி. த. கிருஷ்ணமாச்சாரியுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக தனது இரண்டாவது நீட்டிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்கு சிறுது காலம் முன்னரே பதவி விலகினார்.[3][6]

குடும்பம் தொகு

இவர், மங்களூரைச் சேர்ந்த கொங்கணி பேசும் சித்ராபூர் சரஸ்வத் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்.[7] இந்திய குடும்பக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் நிறுவனராகவும் அதன் தலைவராகவும் இருந்த காஷ்மீர பண்டிதர்கள் வம்சாவளியைச் சேர்ந்த தன்வந்தி ராமராவ் என்பவரை மணந்தார். ஒரு பயண எழுத்தாளரான இவர்களது மகள் சாந்தா ராமராவ் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். இவரது மூத்த சகோதரர் சர் பெனகல் நரசிங் ராவ், இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த புகழ்பெற்ற அரசு ஊழியரும், நீதிபதியும், அரசியலாளரும் ஆவார். இவரது தம்பி பெனகல் சிவராவ் ஒரு பத்திரிகையாளரும் அரசியல்வாதியுமாவார்.

மேற்கோள்கள் தொகு

  1. "World Chronology: 1969". Answers.com. பார்க்கப்பட்ட நாள் 2009-05-12.
  2. "Sir Benegal Rama Rau". Munzinger. பார்க்கப்பட்ட நாள் 2009-05-12.
  3. 3.0 3.1 "List of Governors". Reserve Bank of India. Archived from the original on 16 September 2008. பார்க்கப்பட்ட நாள் 2006-12-08.
  4. Gazette, 30 May 1930
  5. Tuesday 15 August 1939 London Gazette
  6. "Sir Benegal Rama Rau". SOUTH AFRICAN HISTORY ONLINE. Archived from the original on 17 December 2005. பார்க்கப்பட்ட நாள் 2006-12-09.
  7. Deccan Herald, 25 January
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனகல்_ராமராவ்&oldid=3191981" இலிருந்து மீள்விக்கப்பட்டது