பென்சாயில் குளோரைடு

பென்சாயில் குளோரைடு (Benzoil chloride) என்னும் கரிமக் குளோரின் சேர்மம் பென்சீன்கார்பனைல் குளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது. இதனுடைய மூலக்கூறு வாய்பாடு C6H5COCl ஆகும். நிறமற்ற புகையும் நீர்மமான இது விரும்பத்தகாத நெடியுடையது. பெராக்சைடுகள் தயாரிப்பதற்கு பிரதானமாக இது பயன்பட்டாலும் பொதுவாக சாயங்கள், வாசனைத் திரவியங்கள்,மருந்துகள் மற்றும் பிசின்கள் தயாரிப்பிலும் பயன்படுகின்றது.

பென்சாயில் குளோரைடு
Benzoyl Chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Benzoyl chloride
வேறு பெயர்கள்
BzCl
இனங்காட்டிகள்
98-88-4 Y
ChemSpider 7134 Y
InChI
  • InChI=1S/C7H5ClO/c8-7(9)6-4-2-1-3-5-6/h1-5H Y
    Key: PASDCCFISLVPSO-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H5ClO/c8-7(9)6-4-2-1-3-5-6/h1-5H
    Key: PASDCCFISLVPSO-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C19168 Y
பப்கெம் 7412
வே.ந.வி.ப எண் DM6600000
SMILES
  • ClC(=O)c1ccccc1
  • c1ccc(cc1)C(=O)Cl
பண்புகள்
C7H5ClO
வாய்ப்பாட்டு எடை 140.57 g·mol−1
தோற்றம் colorless liquid
அடர்த்தி 1.21 g/mL, liquid
உருகுநிலை −1 °C (30 °F; 272 K)
கொதிநிலை 197.2 °C (387.0 °F; 470.3 K)
reacts
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS
ஈயூ வகைப்பாடு விஷம் T அரிக்கும் C
R-சொற்றொடர்கள் R34
S-சொற்றொடர்கள் (S1/2) S26 S45
தீப்பற்றும் வெப்பநிலை 72 °C (162 °F; 345 K)
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் benzoic acid, அமில நீரிலி, பென்சால்டிகைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

பென்சோ டிரை குளோரைடுடன் தண்ணீர் அல்லது பென்சோயிக் அமிலத்தை[1] பயன்படுத்தி வினைப்படுத்துவதன் மூலமாக பென்சாயில் குளோரைடு தயாரிக்கப்படுகிறது.

C6H5CCl3 + H2O → C6H5COCl + 2 HCl
C6H5CCl3 + C6H5CO2H → 2 C6H5COCl + HCl

மற்ற அசைல் குளோரைடுகளை அதனுடைய தாய் அமிலம் மற்றும் குளோரினேற்றக் கரணிகளான பாசுபரசு பெண்டா குளோரைடு அல்லது தையோனைல் குளோரைடுகளுடன் வினைப்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. முதன் முதலில் இது பென்சாயிக் அமிலத்துடன் குளோரினை [2] வினைப்படுத்தியதன் மூலமே தயாரிக்கப்பட்டது.

வேதி வினைகள் தொகு

அசைல் குளோரைடுகளுக்கு பென்சாயில் குளோரைடு ஒரு முன்மாதிரியானது ஆகும். ஆல்ககால்கள் மற்றும் அமீன்களுடன் வினைபுரிந்து அவற்றையொத்த எசுதர் மற்றும் அமைடுகளைக் கொடுக்கிறது. அரீன்களுடன் பிரைடல் கிராப்ட்சு அசைலேற்ற வினையில் ஈடுபட்டு பென்சோ பீனோன்களைத் தருகிறது. அதேபோல் தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரோ குளோரிக் காடி மற்றும் பென்சோயிக் அமிலத்தைத் தருகிறது.

C6H5COCl + H2O → C6H5CO2H + HCl

பென்சாயில் குளோரைடை ஐதரசன் பெராக்சைடு மற்றும் சோடியம் ஐதராக்சைடுடன் சேர்த்து தொழிற் முறையில் பென்சாயில் பெராக்சைடு:[3] தொகுக்கப்படுகிறது.

2 C6H5COCl + H2O2 + 2 NaOH → (C6H5CO)2O2 + 2 NaCl + 2 H2O

உற்பத்தி தொகு

பென்சாயில் குளோரைடைத் தயாரிக்கும் ஒரு மேம்படுத்தப்பட்ட வழிமுறையை இம்பீரியல் வேதியியல் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஜான் கார்நெட் பெர்சிவல் மற்றும் புரூசு வில்மாட் எண்டர்சன் என்பவர்களால கண்டறியப்பட்டு 29 மார்ச்சு 1932 வெளியீடு US1851832 உரிமையின் கீழ் காப்புரிமை பெற்றுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Takao Maki, Kazuo Takeda “Benzoic Acid and Derivatives” Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_555 10.1002/14356007.a03_555
  2. Friedrich Wöhler, Justus von Liebig (1832). "Untersuchungen über das Radikal der Benzoesäure". Annalen der Pharmacie 3 (3): 249–282. doi:10.1002/jlac.18320030302. 
  3. El-Samragy, Yehia (2004). "Benzoyl Peroxide" (PDF). 61st JECFA (Joint FAO/WHO Expert Committee on Food Additives): 1. http://www.fao.org/fileadmin/templates/agns/pdf/jecfa/cta/63/Benzoylperoxide.pdf. பார்த்த நாள்: 31 October 2013. 

வெளிஇணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சாயில்_குளோரைடு&oldid=1765233" இலிருந்து மீள்விக்கப்பட்டது