பெரியீசி

எசுபார்த்தாவின் குடியுரிமை வழங்கப்படாத சுதந்திர சமூகத்தினர்

பெரியீசி அல்லது பெரியோய்கோய் (Perioeci அல்லது Perioikoi கிரேக்க மொழி: Περίοικοι, /peˈri.oj.koj/) என்பவர்கள் பண்டைய கிரேக்க சமூக வகுப்பினர் ஆவர். இவர்கள் லாகோனியா மற்றும் மெசீனியாவின் குடியுரிமை அளிக்கப்படாத குடியினர் ஆவர். இவர்கள் எசுபார்த்தாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளிலும், கடலோர மற்றும் மேட்டு நிலப்பகுதிகளில் வாழ்ந்துவந்தனர். Περίοικοι என்ற பெயரின் பொருள் "சுற்றி/அருகில் வசிப்பவர்கள்" என்பதாகும். περί, பெரி, "சுற்றுப்புரங்களில்", மற்றும் οἶκος, ஓய்கோஸ், "குடியிருப்பு, வீடு" ஆகிய சொற்களின் சேர்க்கையாக உருவானது.

இவர்கள் எசுபார்த்தாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். வர்த்தகம் மற்றும் வணிகத்தில் இவர்களின் பங்கு இருந்தது. அத்துடன் கைவினைப்பொருட்கள் உற்பத்திக்கு பொறுப்பானவர்களாக இருந்தனர். எசுபார்டன் இராணுவத்துக்கான ஆயுதங்கள், கவசங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வது உட்பட பணிகள் இவர்களுக்கானவை. [1] எசுபார்டன் நாட்டு எல்லைகளுக்கு வெளியே சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கப்பட்ட ஒரே மக்கள் குழுவினர் பெரியோசிகள் மட்டுமே.

தோற்றம் தொகு

இவர்கள் எசுபார்ட்டன்களுடன் நகர அரசுக்குள் ஒருங்கிணைக்க முடியாத அல்லது எலட்களாக அடிமைப்படுத்த முடியாதவர்களான அந்த பகுதியில் ஏற்கனவே இருந்த சமூகங்கள் பெரியோசி ஆயினர். [2] இவர்கள் எசுபார்ட்டன்களைப் போன்றறே ஏடோரியன்களில் இருந்து தோன்றியவர்களா அல்லது பெலோபொன்னீசசில் டோரியன்களுக்கு முந்தைய மக்களில் இருந்து வந்தவர்களா என்பது தெரியவில்லை.

நிலை தொகு

பெரியோசி எலட்களைப் போலன்றி சுதந்திர மக்கள். ஆனால் முழு எசுபார்டன் குடிமக்களுக்கான உரிமை வழங்கப்படவல்லை. இவர்கள் பெரியோசில் தங்கள் சொந்த குடியிருப்புகளில் வாழ்ந்தனர், இது பண்டைய எழுத்தாளர்களால் போலிஸ் என்று விவரிக்கப்பட்டது. [3] [4] [5] இந்தக் குடியேற்றங்கள் பெரும்பாலும் எசுபார்தன் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. [6] ஆனால் உள்நாட்டுப் பிரச்சினைகளில் சுயாட்சியுடன் இருந்தனர். [7]

பெரியோசிகள் எசுபார்டன்களின் வெளியுறவுக் கொள்கையையே பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். மேலும் எசுபார்டான் இராணுவத்தில் சண்டையிட ஆட்களை வழங்கினர். homoioi ( கிரேக்கம்: ὅμοιοι‎ , முழு ஸ்பார்டன் குடிமக்கள்) போலவே, பெரியோசியும் இராணுவத்தில் எப்லைட்டுகளாகப் போரிட்டனர், அநேகமாக அதே பிரிவுகளில். [8] பெரியோசிக்கு நிலத்தை சொந்தமாக வைத்திருக்கும் உரிமை இருந்தது. [9]

செவ்வியல் காலத்தில், எசுபார்டியேட்கள் பொருளாதார ரீதியாக எந்த உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. எனவே எசுபார்த்தாவின் உற்பத்திக்கு பெரியோசிகள் பொறுப்பேற்றனர். ஆயுதங்கள் மற்றும் கவசங்களை உற்பத்தி செய்தல் மற்றும் எசுபார்த்தன் நாட்டுக்கு தேவையான வர்த்தகத்தை நடத்துதல் உட்பட்ட பணிகளில் ஈடுபட்டனர். [10] உதாரணமாக, ஆர்ட்டெமிஸ் ஆர்தியாவின் சிற்றாலய இடத்தில் அர்ப்பணிக்கப்பட்ட ஏராளமான முகமூடிகள் மற்றும் சிலைகள் பெரியோசிக் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம். [11]

அரிஸ்டாட்டிலின் அரசியலில் தொகு

பெரியோசிகள் அரிஸ்டாட்டிலின் பாலிடிக்ஸ் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால் எசுபார்டன் இராச்சியத்துக்குள் இருப்பதை விட மிகவும் பொதுவான பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இலட்சிய அரசை விவரிக்கும்போது, அரிஸ்டாட்டில் உண்மையான குடிமக்களாக அரசின் உறுப்பினர்கள் ஆட்சியாளர்கள், போர்வீரர்கள் (ஆயுதங்களை ஏந்த அனுமதிக்கப்பட்டவர்கள்), அரசியல்வாதிகள், பூசாரிகள் இருக்க வேண்டும் என்று நம்பினார். ஆனால் இயந்திரவியல் போன்ற தொழில் வணிகங்களைச் செய்பவர்கள், கைவினைஞர்கள், உழவர்கள் அடிமைகளாகவோ அல்லது பெரியோசியாகவோ இருக்க வேண்டும், ஏனென்றால் அத்தகைய தொழில்கள் இழிவானவை, நல்லொழுக்கத்தை உருவாக்காதவை என்று அவர் கூறுகிறார். அந்த வகையில், பெரியோசி என்பது அனைத்து இலட்சிய ஹெலனிக் அரசுகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இவர்கள் ஒரு வகையான நடுத்தர வர்க்கத்தினர். குடிமக்களுக்குக் கீழே ஆனால் அடிமைகளுக்க் மேலே இருந்தனர் என்று தெரிகிறது. இவர்கள் சுதந்திரமான மனிதர்கள். ஆனால் வாக்களிக்கவோ, அரசு பதவியில் இருக்கவோ, அரசில் அல்லது சட்டங்களில் வேறு எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்தவோ அனுமதிக்கப்படவில்லை. அரிஸ்டாட்டில் இவர்களைக் குறிப்பிடும்போது, அவர் சில சமயங்களில் "காட்டுமிராண்டிகள்" என்று குறிப்பிடுகிறார். மேலும் அத்தகைய குடியுரிமை இல்லாத சுதந்திர மனிதர்கள் ஹெலனிக் அல்லாத வெளிநாட்டவர் என்று குறிப்பிடுகிறார். [12]

மேலும் பார்க்கவும் தொகு

  • எலட்கள், எசுபார்டாவில் சுதந்திரமற்ற மக்கள்

குறிப்புகள் தொகு

  1. Cartledge, Paul (2002). The Spartans: An Epic History. Macmillan. பக். 68. 
  2. Toynbee, Arnold J. (1913). "The Growth of Sparta". The Journal of Hellenic Studies 33: 247. 
  3. Herodotus, Histories, VII.234
  4. Thucydides, History of the Peloponnesian War, V.54.1
  5. Xenophon, Hellenica, VI.5.21
  6. Cartledge, Paul (2002). The Spartans: An Epic History. Macmillan. பக். 67. Cartledge, Paul (2002). The Spartans: An Epic History. Macmillan. p. 67.
  7. Hammond, N.G.L. (1970). The Cambridge Ancient History. Cambridge University Press. பக். 333. https://archive.org/details/cambridgeancient04camb. 
  8. Figueira, Thomas J. (1986). "Population Patterns in Late Archaic and Classical Sparta". Transactions of the American Philological Association 116: 167. 
  9. Ridley, R.T. (1974). "Economic Activities of the Perioikoi". Mnemosyne 27 (3): 188. doi:10.1163/156852574X00070. 
  10. Cartledge, Paul (2002). The Spartans: An Epic History. Macmillan. பக். 68. 
  11. Cartledge, Paul (2002). The Spartans: An Epic History. Macmillan. பக். 99. 
  12. Aristotle, Politics, VII.IX

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியீசி&oldid=3794216" இலிருந்து மீள்விக்கப்பட்டது