பெரிலியம் மோனோ ஐதரைடு

பெரிலியம் மோனோ ஐதரைடு (Beryllium monohydride) என்பது BeH என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிமச் சேர்மம் ஆகும். மூலக்கூற்று ஆர்பிட்டால் கொள்கையின்படி பிணைப்பின் தரம் அரை என்ற மதிப்பைக் கொண்ட மூலக்கூறுக்கு BeH ஓர் எடுத்துக்காட்டாகும். வாயு நிலையில் மட்டும் அறியப்படுகின்ற சிற்றுறுதியான மோனோதனியுறுப்பு இனமாக பெரிலியம் மோனோஐதரைடு கருதப்படுகிறது. வாயு நிலையில் மட்டும் அறியப்படுகின்ற சிற்றுறுதியான மோனோதனியுறுப்பு இனமாக பெரிலியம் மோனோஐதரைடு கருதப்படுகிறது. பெரிலியம் மோனோஐதரைடில் பெரிலியத்தின் இணைதிறன் ஒன்று மற்றும் ஐதரசனின் இணைதிறனும் ஒன்றாகும்.

பெரிலியம் மோனோ ஐதரைடு
இனங்காட்டிகள்
13597-97-2 Y
ChemSpider 21865051 Y
InChI
  • InChI=1S/Be.H Y
    Key: AYBCUKQQDUJLQN-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [BeH]
பண்புகள்
BeH
வாய்ப்பாட்டு எடை 10.02012 கிராம் மோல்−1
தோற்றம் நிறமற்ற வாயு
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
321.20 கியூ மோல் −1
நியம மோலார்
எந்திரோப்பி So298
176.83 யூ கெல்வின்−1 மோல்−1
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.002 மில்லி கிராம்/மீ3
0.005 மில்லி கிராம்/மீ3 (30 நிமிடங்கள்), அதிகபட்ச உச்சம் 0.025 மில்லி கிராம்/மீ 3 (பெரிலியமாக)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca C 0.0005 மி.கி/மீ3 (பெரிலியமாக)[1]
உடனடி அபாயம்
Ca [4 மில்லி கிராம்/மீ3 (பெரிலியமாக)][1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பெரிலியம் ஐதரைடில் 5 எலக்ட்ரான்கள் மட்டுமே உள்ளன. இணைதிறன் கூடு முழுவதும் நிரப்பப்படாத நடுநிலை மூலக்கூறுக்கு எளிய உதாரணம் பெரிலியம் மோனோ ஐதரைடு ஆகும். முதல் கொள்கை முறைகளின் திறனளவிடலில் இச்சேர்மம் மிகமுக்கியப் பங்குவகிக்கிறது. இத்தகைய எளிய நிறையுடன் பார்ன்-ஓப்பனெய்மர் தோராய மதிப்பு முறிவை ஆய்வதற்கும் இது முக்கியமானதாகத் திகழ்கிறது. இதன் எளிமை காரணமாக வெளிக்கோள்களின் வளிமண்டலங்கள், குளிர்ந்த நட்சத்திரங்கள் மற்றும் விண்மீனிடை ஊடகம் போன்ற வானியல் சூழல்களில் இச்சேர்மம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இதுவரை நம் சூரியனில் மட்டுமே காணப்படுவதாக அறியப்படுகிறது. [2]. 11Be, 11BeH ஐசோடோப்புகளின் நீண்டகால அரைவாழ்நாள் காரணமாக, முதல் ஆலோ நியூக்ளியோனிக் மூலக்கூறு உருவாக்கத்திற்கான முன்னணிச் சேர்மமாகவும் இது கருதப்படுகிறது [3].

பெரிலியம் மோனோ ஐதரைடு நிறமாலையியல் ஆய்வுகளில் 1928 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 80 வகையான கோட்பாட்டு ஆய்வுகளில் ஆராயப்பட்டுள்ளது [3]. இச்சேர்மத்தின் பிணைப்பு நீளம் 134.2396 (3) பைக்கோ மீட்டர் ஆகும் [3]. பிரிகை ஆற்றல் 17702(200) செ.மீ−1 ஆகும் [3].

இருபடி மூலக்கூறான Be2H2 சேர்மமும் 10 கெல்வின் வெப்பநிலை ஆர்கான் அணியில் உணரப்பட்டது [4].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0054". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. https://www.academia.edu/12040610/Beryllium_monohydride_BeH_Where_we_are_now_after_86_years_of_spectroscopy
  3. 3.0 3.1 3.2 3.3 "Beryllium monohydride (BeH): Where we are now, after 86 years of spectroscopy". Journal of Molecular Spectroscopy 311: 76–83. doi:10.1016/j.jms.2014.09.005. Bibcode: 2015JMoSp.311...76D. http://www.sciencedirect.com/science/article/pii/S0022285214001945#. 
  4. Thomas J. Tague Jr., Lester Andrews (1993). "Reactions of beryllium atoms with hydrogen. Matrix infrared spectra of novel product molecules". J. Am. Chem. Soc. 115 (25): pp. 12111–12116. doi:10.1021/ja00078a057. .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிலியம்_மோனோ_ஐதரைடு&oldid=2544390" இலிருந்து மீள்விக்கப்பட்டது