பெருஞ்சிவப்புப் பிரதேசம்

பெருஞ்சிவப்புப் பிரதேசம் அல்லது பெருஞ்சிவப்புப் பகுதி (Great Red Spot) என்பது சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனில், தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்கும் மாபெரும் புயல் மேகத்தைக் குறிக்கும். 300 ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருகிறது. இது வியாழனுக்கு ஒரு மிகப்பெரிய சிவப்புக்கண் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. 26,000 கிமீ நீளமும் 12,000 கிமீ அகலமும் உடைய இந்த பெருஞ்சிவப்புப் பகுதியில் இரண்டு பூமிகளை வைக்கலாம்! இதன் சிவப்பு நிறம் கருங்கல் சிவப்பிலிருந்து பழுப்பு வரை மாறிக்கொண்டே இருக்கும்.

பெருஞ்சிவப்புப் பிரதேசத்துடன் புவியை ஒப்பிடல்

பெரும் சிவப்புப் புள்ளியை 1664 ஆம் ஆண்டில் இராபர்ட் ஊக் (Robert Hooke) என்ற பிரித்தானிய அறிவியலாளர் முதன் முதலில் அவதானித்தார்.