பெர்னம்புகோ இட்டாய்பவா அரங்கம்

பெர்னம்புகோ இட்டாய்பவா அரங்கம் (Itaipava Arena Pernambuco) பிரேசிலின் ரெசிஃபி பெருநகரப் பகுதியின் மேற்குப் புறநகர்ப் பகுதியான சாவோ லோரென்சோ மாதாவில் புதியதாக கட்டப்பட்டு வரும் பன்னோக்கு அரங்கமாகும். கட்டி முடிக்கப்பட்ட பின்னர் இது பெரும்பாலும்r காற்பந்தாட்டங்களுக்கு, குறிப்பாக 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்திடப் பயன்படுத்தப்படும். இதன் கொள்ளளவு 46,160 பார்வையாளர்கள் ஆகும். 2012இல் ரெசிஃபி நகரத்தின் உள்ள மூன்று தொழில்முறை காற்பந்துக் கழகங்களில் ஒன்றான நௌடிக்கோ இதன் பகுதி உரிமையாளராக உடன்பாடு செய்து கொண்டுள்ளது. சூலை 2013 முதல் நௌடிக்கோ கப்பிபரிபி கழகத்தின் தாயக ஆட்டங்கள் இவ்வரங்கத்திலேயே நிகழும்.

ஆளுநர் கார்லோசு வில்சன் ரோச்சா டெ குயிரோசு கேம்போசு விளையாட்டரங்கம்
பெர்னம்புகோ இட்டாய்பவா அரங்கம்

அரீனா சிடாடெ டா கோப்பா
இடம் சாவோ லோரென்சோ டா மாதா, பெர்னம்புகோ, பிரேசில்
அமைவு 8° 2′ 24″ S, 35° 0′ 29″ W
எழும்புச்செயல் முடிவு அக்டோபர் 2010 - ஏப்ரல் 2013
திறவு மே 22, 2013
உரிமையாளர் ஓடெர்பிரெக்ட்/பெர்னம்புகோ அரசு
தரை புற்றரை
கட்டிடக்கலைஞர் தானியல் பெர்னான்டசு
குத்தகை அணி(கள்)
2014 உலகக்கோப்பை காற்பந்து
நௌடிக்கோ
அமரக்கூடிய பேர் 46,154
பரப்பளவு 105 x 68 மீ

புதிய அரங்கத்தின் கட்டுமானப் பணியை ஓடெர்பிரெக்ட் இன்ஃப்ராஸ்ட்ரெக்சுரா ஏற்றுக்கொண்டுள்ளது. முழுமையாக முடிந்த பின்னர் அரங்க வளாகத்தில் பல்கலைக்கழக வளாகம், உள்ளரங்கம், தங்குவிடுதி மற்றும் மாநாட்டு மையம் அமைவதுடன் வணிக, குடியிருப்பு கட்டிடங்களும் அங்காடி மையங்கள், திரையரங்கங்கள், மதுவகங்கள் மற்றும் உணவகங்களை உள்ளடக்கிய பெரிய மனமகிழ் வளாகமும் கொண்டிருக்கும்.

விளையாட்டரங்க உட்புறத்தின் அகல்பரப்புக் காட்சி

"பசுமை"யான அரங்கம்: ஓடெர்பிரெக்ட் எனர்ஜியாவும் நியோனர்ஜியாவும் இணைந்து இங்கு சூரியவாற்றல் மின்நிலையத்தை நிறுவி வருகின்றன. $ 13 மில்லியன் செலவில் கட்டமைக்கப்படும் இந்த சூரிய மின்நிலையம், 1 மெகாவாட் உற்பத்தி செய்யும். இது நாட்டின் சூரியவாற்றல் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் திட்டத்தின் அங்கமாக நிறைவேற்றப்படுகிறது. விளையாட்டரங்கத்திற்குத் தேவைப்படாதபோது இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றல் 6000 பேர் நுகருமாறு இருக்கும்.

2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி தொகு

நாள் நேரம் (UTC-03) அணி #1 முடிவு. அணி #2 சுற்று வருகைப்பதிவு
சூன் 16, 2013 19:00   எசுப்பானியா 2-1   உருகுவை குழு B 41,705
சூன் 19, 2013 19:00   இத்தாலி 4-3   சப்பான் குழு ஏ 40,489
சூன் 23, 2013 16:00   உருகுவை 8-0   பிரெஞ்சு பொலினீசியா குழு பி 22,047

2014 உலகக்கோப்பை காற்பந்து தொகு

நாள் நேரம் (UTC-03) அணி #1 முடிவு. அணி #2 சுற்று வருகைப்பதிவு
சூன் 14, 2014 22:00   ஐவரி கோஸ்ட் ஆட்டம் 6   சப்பான் குழு சி
சூன் 20, 2014 13:00   இத்தாலி ஆட்டம் 24   கோஸ்ட்டா ரிக்கா குழு டி
சூன் 23, 2014 17:00   குரோவாசியா ஆட்டம் 34   மெக்சிக்கோ குழு ஏ
சூன் 26, 2014 13:00   ஐக்கிய அமெரிக்கா ஆட்டம் 45   செருமனி குழு ஜி
சூன் 29, 2014 17:00 குழு டி வெற்றியாளர் ஆட்டம் 52 குழு சி இரண்டாதவர் பதினாறுவர் சுற்று

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arena Pernambuco
என்பதில் ஊடகங்கள் உள்ளன.