பெர்னார்டின் செபம்

பெர்னார்டின் செபம் அல்லது மிகவும் இரக்கமுள்ள தாயே (இலத்தீன்: Memorare, O piissima Virgo Maria, ஆங்கில மொழி: Remember O Most Gracious Virgin Mary ) எனத்துவங்கும் செபம் கத்தோலிக்க திருச்சபையில் தூய கன்னி மரியாவை நோக்கி சொல்லப்படும், மிகவும் புகழ் பெற்ற செபமாகும்.[1] இச்செபமானது இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் அதன் துவக்க வார்த்தைகளான Remember மற்றும் Memorare என்னும் வார்த்தைகளால் அறியப்படுகின்றது.

தூய கன்னி மரியா

இச்செபமானது 12ஆம்-நூற்றாண்டில் வாழ்ந்த சிஸ்டேரியன் சபைத் துறவியான புனித பெர்னார்டு (Saint Bernard of Clairvaux) என்பவரால் இயற்றப்பட்டது என பலராலும் தவறாக நம்பப்படுகின்றது. தமிழில் சிலர் முதன் முதலில் பெர்னதெத் சுபீரு கன்னிமரியிடம் வேண்டின செபம் இது எனவும் தவறாக நம்புகின்றனர். ஆயினும் இது உண்மையில் 17ஆம்-நூற்றாண்டில் வாழ்ந்த அருட்தந்தை கிலௌடு பெர்னார்டு என்பவரால் தன் தந்தையிடம் படிப்பினை பெற்று பலருக்கு அறிமுகம் செய்யப்பட்ட செபம் ஆகும்.

செபம் தொகு

இச்செபமானது திருத்தந்தை ஒன்பதாம் பயஸினால் பரிபூரண பலன் உடையதாக 1846இல் அறிவிக்கப்பட்டது.[2]

இலத்தீன் வடிவம் தொகு

MEMORARE, O piissima Virgo Maria,
non esse auditum a saeculo, quemquam ad tua currentem praesidia,
tua implorantem auxilia, tua petentem suffragia,
esse derelictum.
Ego tali animatus confidentia,
ad te, Virgo Virginum, Mater, curro,
ad te venio, coram te gemens peccator assisto.
Noli, Mater Verbi,
verba mea despicere;
sed audi propitia et exaudi.
Amen.

ஆங்கில வடிவம் தொகு

Remember, O most gracious Virgin Mary,
that never was it known that anyone who fled to your protection,
implored your help, or sought your intercession,
was left unaided.
Inspired with this confidence,
I fly to you, O Virgin of virgins, my Mother.
To you I come, before you I stand, sinful and sorrowful.
O Mother of the Word Incarnate,
despise not my petitions,
but in your mercy, hear and answer me.
Amen.[3]

தமிழ் வடிவம் தொகு

மிகவும் இரக்கமுள்ள தாயே!
உமது அடைக்கலமாக ஓடிவந்து,
உம்முடைய உபகார சகாயங்களை
இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும்
உம்மால் கைவிடப்பட்டதாக
ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை
என்று நினைத்தருளும்.
கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே!
தயையுள்ள தாயே!
இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு
உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம்.
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள்
உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம்.
அவதரித்த வார்த்தையின் தாயே
எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல்
தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே
ஆமென்

வழக்கமாக தமிழில் இச்செபத்தை கீழ்வறும் கூடுதல் செபத்தோடு முடிப்பர்:

ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - அருள்நிறைந்த (மூன்று முறை)

மேற்கோள்கள் தொகு

  1. Catholic Prayerbook: From Downside Abbey by David Foster 2001 ISBN 0-567-08669-0 page 153
  2. Raccolta, #339 (S. C. Ind., Dec. 11, 1846; S. P. Ap., Sept. 8, 1935) Encr. Ind. #32:
  3. Fti, Brother Anthony Josemaria (2008-11-30). The Blessed Virgin Mary in England Vol. 1: A Mary-Catechism with Pilgrimage to Her Holy Shrines. iUniverse. பக். 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780595500741. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னார்டின்_செபம்&oldid=2968423" இலிருந்து மீள்விக்கப்பட்டது