பெலும் குகை

பெலும் குகை (Belum Caves) இந்தியத் துணைக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய குகையும் இந்திய துணைக்கண்டத்தில் சமவெளியில் அமைந்த நீளமான குகையும் ஆகும். இது, இங்குள்ள கூரைப்படிகக் கூம்பு மற்றும் படிகப்புற்று அமைப்புகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறது. நீண்ட வழிகளும், பெரிய அறைகளும் நன்னீர் காட்சிகளும் வடிகுழாய்களும் இக்குழாயில் காணப்படுகின்றன. இது நிலத்தடி நீரோட்டத்தால் நிலத்திற்கடியிலமைந்த இயற்கைக் குகை. "பிலும்" என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து இக்குகையின் பெயர் அமைந்துள்ளது.[1] தெலுங்கில் இக்குகை "பெலும் குகாலு" என அழைக்கப்படுகிறது. இதன் நீளம் 3229 மீட்டர்கள் ஆகும்.

பெலும் குகையின் நுழைவாயில், கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேச பௌத்த நினைவுச் சின்னங்களின் வரைபடம்

1884 இல் பிரித்தானிய நிலவியல் ஆய்வாளரான இராபர்ட் புருசு ஃபூட்டால் இக்குகை கண்டறியப்பட்டது. 1982-84 இல் ஜெர்மானியக் குகை ஆய்வாளர் ஹெச். லேனியல் கெபார் (H Daniel Gebauer) தலைமையிலமைந்த குழுவால் மேலும் ஆய்வு செய்யப்பட்டது. அதன்பிறகு 1988 இல் ஆந்திரப்பிரதேச அரசால் பாதுகாக்கப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டது, 2002 இல், ஆந்திரப் பிரதேச அரசின் சுற்றுலாத்துறையால் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டது. 3.5 கிமீ நீளம் வரை குகை ஆய்வு செய்யப்பட்டிருப்பினும் 1.5 கிமீ வரைமட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். குகையில் 150 அடி ஆழத்தில் சிறிய அருவி உள்ளது. இதைப் பாதாள கங்கை என்கிறார்கள். குகைக்குள் பார்வையாளர்களின் வசதிக்காக மின் விளக்குகளும் மின் விசிறிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. குகை முழுவதும் இயற்கையின் பலவித உருவங்களும் பயணிகளை ஈர்ப்பதாக உள்ளன.[2]

அமைவிடம் தொகு

பெலும் குகை யின் ஆட்கூறுகள்: 15°06′08″N 78°06′42″E / 15.102346°N 78.111541°E / 15.102346; 78.111541 சில முக்கிய நகரங்களிலிருந்து பெலும் குகையின் தொலைவுகள்: கொலிமிகுண்டலாவிலிருந்து 4 கிமீ; பெல்லாரியிலிருந்து 144 கிமீ; கர்நூலிலிருந்து 106 கிமீ; திருப்பதியிலிருந்து 261 கிமீ; ஹைதராபாத்திலிருந்து 319 கிமீ; பெங்களூருவிலிருந்து 324 கிமீ; சென்னையிலிருந்து 392 கிமீ[3] தொலைவில், கர்நூல் மாவட்டத்தில் உள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் தொகு

பெலும் குகைகள் நிலவியல்சார்ந்தும் வரலாறுசார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இக்குகைகளில் சமண, புத்தத் துறவிகள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இங்கு காணப்பட்டுள்ளன. குகையினுள் கண்டெடுக்கப்பட்ட பல புத்தத் துறவிகளின் பொருட்கள் அனந்தபூர் காட்சிகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கப்பட்டப் மட்பாண்டங்களின் காலம் கிமு 4500 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[4]

இதனையும் காணக தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Underground adventure in Belum caves". Deccan Herald. 27 January 2008 இம் மூலத்தில் இருந்து 2 ஜூன் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080602003524/http://www.deccanherald.com/Content/Jan272008/sundayherald2008012648758.asp. 
  2. ஆம்பூர் மங்கையர்கரசி (17 சனவரி 2018). "பேலும் குகை". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2018.
  3. Reddy, K. Thimma (1976) Billasurgam: An Upper Palaeolithic Cave Site in South India
  4. [1] Show Caves of India: Belum Caves

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலும்_குகை&oldid=3577905" இலிருந்து மீள்விக்கப்பட்டது