பேட்வா ஆறு (Betwa River) வட இந்தியாவில் ஓடும் ஆறு ஆகும். இது யமுனை நதியின் கிளை ஆறு ஆகும். இதன் மறு பெயர் வெட்ராவதி (Vetravati) ஆறு ஆகும். இது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. இந்த ஆறானது கடைசியில் கென் ஆற்றுடன் இணைகிறது.

பேட்வா ஆறு
ஆறு
பேட்வா ஆறு
நாடு இந்தியா
மாநிலங்கள் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம்
நகரம் விதிஷா
உற்பத்தியாகும் இடம் விந்தியப் பகுதி
 - அமைவிடம் ஹோஸ்கங்காபாத் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
கழிமுகம் யமுனா
 - அமைவிடம் ஹமிர்பூர், உத்தரப் பிரதேசம்
 - ஆள்கூறு 25°55′N 80°12′E / 25.917°N 80.200°E / 25.917; 80.200

வரலாறு தொகு

சமஸ்கிருதத்தில் பேட்வா என்றால் வெட்ராவதி என்று பொருள். இந்த ஆற்றைப் பற்றி மகாபாரதத்தில் குறிப்புகள் உள்ளன. வெறாவதி என்பதற்கு சுக்திமதி என்று பொருள். இந்த நதிக் கரையானது இடம்பெயரும் நீர்ப் பறவைகளுக்கு முக்கிய நீர் நிலையாக விளங்குகிறது.[1]

நதி நீர் வாரியம் தொகு

இந்த ஆறானது மொத்தம் 590 கிலோமீட்டர்கள் நீளமுடையது. இதில் 232 கிலோமீட்டர்கள் மத்தியப் பிரதேசத்திலும் மீதி 358 கிலோமீட்டர்கள் உத்திரம் பிரதேசத்திலும் ஓடுகிறது. உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் அரசுகளுக்கு இடையேயான உடன்படிக்கையின் படி 1973 ஆம் ஆண்டு பேட்வா நதிநீர் வாரியம் அமைக்கப்பட்டது.[2]

நதிகள் இணைப்பு தொகு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் இந்த ஆறானது கென் ஆற்றுடன் இணைக்கப்பட்டது. இதில் கட்டப்பட்டுள்ள மடாடிலா அணையானது மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் நிருவாகத்தின் கீழ் வருகிறது.[3]

அணைகள் தொகு

இந்த ஆற்றின் குறுக்கே,

ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Shukla, D.C. 1994 Habitat characteristics of wetlands of the Betwa Basin, India, and wintering populations of endangered waterfowl species. Global wetlands, pp. 863-868
  2. Betwa River Board இந்திய நீர் ஆற்றல் அமைச்சகத்தின் இணையதளம்.
  3. Betwa River Board இந்திய நீர் ஆற்றல் அமைச்சகத்தின் இணையதளம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்வா_ஆறு&oldid=3444837" இலிருந்து மீள்விக்கப்பட்டது