பேறுபெற்றோர்

கிறித்தவத்தில் பேறுபெற்றோர் என்பது மத்தேயு நற்செய்தியில் உள்ள மலைப்பொழிவில் இடம் பெரும் எட்டு வகையான பேறுகளை பெறுவோரை குறிக்கும். இவற்றுள் நான்கு பேறுகள் லூக்கா நற்செய்தியில் உள்ள சமவெளிப் பொழிவிலும் இடம் பெறுகின்றன. மீதம் உள்ள நான்கு ஆசிகளும், இன் நற்செய்தியில் பரிசேயருக்கான சாபங்களாக இடம்பெறுகின்றன.

பேறுபெற்றோர் சொற்பொழிவு - ஜேம்ஸ் டிசோட், 1886-1896.

ஆக்ஸ்போர்டு கிறித்தவ திருச்சபைகளுக்கான அகராதியின் படி (The Oxford dictionary of the Christian church), லூக்கா நற்செய்தியில் உள்ள பேறுகள் வெளிபடையான துன்பங்களை படுவோருக்கு கிடைக்கும் பேறுகளாகவும், மத்தேயு நற்செய்தியில் உள்ளவை ஆன்மீக துன்பங்களுக்கான பேறுகளையும் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.[1]

உள்ளடக்கம் தொகு

மத்தேயு நற்செய்தி 5:3-10

3 ' ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
6 நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
 
கலிலேயக் கடலுக்கு அருகே பேறுபெற்றோர் சொற்பொழிவு இடம்பெற்ற இடத்தில் உள்ள கோவில்

லூக்கா நற்செய்தி 6:20-26

20'ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.
21 இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.
22 மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.
23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.
24 ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.
25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.
26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. "Beatitudes". Cross, F. L., ed. In the Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005

இவற்றையும் பார்க்கவும் தொகு


பேறுபெற்றோர்
இயேசுவின் வாழ்வும் பணிகளும் : மலைப்பொழிவு/சமவெளிப் பொழிவு
முன்னர்
திருத்தூதுப் பொழிவு
  புதிய ஏற்பாட்டு 
நிகழ்வு
பின்னர்
திருச்சட்டம் நிறைவேறுதல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேறுபெற்றோர்&oldid=2758637" இலிருந்து மீள்விக்கப்பட்டது