பொது மூலதனம்

பொது மூலதனம் என்பது அரசாங்கத்திற்குச் சொந்தமான பொது சொத்துக்களின் மொத்தப் பகுதியாகும், இது ஒரு நாட்டின் உற்பத்தித் திறனுக்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] அத்தகைய சொத்துகள் பரந்த வரம்பை உள்ளடக்கியது: நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், சாலைகள், போக்குவரத்து அமைப்புகள் மற்றும் இரயில்வே போன்ற பெரிய சொத்துக்கள்; உள்நாட்டுக் கல்வி, பொது மருத்துவமனைகள், போலிஸ் மற்றும் தீ பாதுகாப்பு, சிறைச்சாலைகள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற நகராட்சிப் பிரிவுகள். நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள், பொது மின் மற்றும் எரிவாயு பயன்பாடுகள், மற்றும் தொலைத் தொடர்பு போன்ற முக்கிய சொத்துக்கள்,[2] இவையாவும் பெரும்பாலும், பொது மூலதனம் என்றழைக்கப்படுகிறது. மேலும் அரசு செலவினமாக, பணம் அடிப்படையில், மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படையில், சொத்துக்களின் பங்கு வரையறுக்கப்படுகிறது.

பொது மூலதன முயற்சிகள் தொகு

ஐக்கிய அமெரிக்கா தொகு

அமெரிக்காவில் பொதுப்பணி அமைப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பு 1935 ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி பிராங்க்ளின் ரூசவெல்ட் மேற்கொண்ட புதிய ஒப்பந்த முயற்சிகள், குறிப்பாக படைப்புகள் முன்னேற்ற நிர்வாகத்தின் (WPA) உருவாக்கம் காரணமாக இருக்கலாம் என்ற அறியப்படுகிறது. அந்த காலகட்டத்தில் நிலவிவந்த ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் நேரத்தில் WPA திட்டத்தின் மூலம் 3.35 மில்லியன் வேலைவாய்ப்பற்ற வீடுகளின் குடும்பத் தலைவர்களுக்கு, நாட்டை மறுசீரமைக்கும் வேலை கொடுக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் பலனாக, மில்லியன் கணக்கான சாலைகள், பாலங்கள், பூங்காக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மற்றும் வெள்ளத் தடுப்புக் கரைகள் ஆகியவற்றை கட்டமைக்க முடிந்தது மேலும் கல்வி உதவித் திட்டங்கள், குழந்தை பராமரிப்பு, வேலை பயிற்சி மற்றும் மருத்துவ சேவைகள் ஆகியவற்றையும் வழங்க உதவியது. அந்த நேரத்தில் உருவான அபூர்வமான இந்தத் திட்டத்தின் மொத்த பொது செலவின அளவு, 4.8 பில்லியன் டாலர் (2008 ஆண்டின் கண்க்கின்படி டாலரில் 76 பில்லியன் டாலர்கள்), மற்றும் பொதுப்பணித் திட்டங்களின் மூலம் நாட்டின் பொருளாதாரம் தூண்டுவதற்கு உதவியது.[3]

.

பிறநாடுகள் தொகு

உலகளவில், மாற்றத்தக்க பொது மூலதன முதலீடுகள் நடைபெற்று வருகின்றன. சீனாவின் அதிவேக ரயில் திட்டமானது மொது மூலதனத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டுக்குள் 18,000 கி.மீ. தூரத்திற்கு நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டின் முடிவில், சீனா நாட்டில் சுமார் 24,000 தொடர் வண்டிகளை மெற்றிருக்கும், மேலும் உலகிலேயே அதிக இருப்புப் பாதையும், அதிவேக அதிவிரைவு இரயில் சேவையும் மற்றும் உலகில் அதிக நீலமான இருப்புப் பாதை கொண்ட நாடாகவும் இருக்கும்.[4] வடக்கு ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன், டென்மார்க் மற்றும் பிற நாடுகளும் பால்டிக் கடல் மற்றும் வட கடலைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில், காற்றாலைகளின் விரிவாக்கத்தை பொது மூலதனத்தின் மூலம் தொடர்ந்து செய்து வருகின்றன.[5] விமான முனையங்களின் தொடர்ச்சியான விரிவாக்கம் மற்றும் நாட்டின் விரிவான போக்குவரத்து அமைப்பு தொடர்பாக, ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் உலகின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் கட்டடக்கலை திட்டங்களில் ஒன்றாக உள்ளது.[6] கடந்த பத்தாண்டுகளில், சிலி நாட்டில் ஐந்து இணைப்பு சுழல் மின் உற்பத்தி நிலையங்களை (CCGT) தனது நாட்டின் வளரும் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய நிறுவியுள்ளது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. Aschauer, D. A. (1990). Why is infrastructure important? Conference Series [Proceedings]. Federal Reserve Bank of Boston. Pp. 21-68.
  2. Tatam, J. A. (1993). The Spurious Effect of Public Capital Formation on Private Sector Productivity. Policy Studies Journal, Vol. 21.
  3. Gabriel, J. (2008). A Twenty-First Century WPA. Social Policy, 38(2), 38-43.
  4. Felon, C, Ramella, F, and Zuger, H. (2009) China’s Rail Revolution. ABB Review: Railways and Transportation. Vol. 2, Issue 10. Pp. 19-24.
  5. "Archived copy". Archived from the original on 2011-07-25. பார்க்கப்பட்ட நாள் 2011-07-14.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. http://www.hongkongairport.com/eng/business/about-the-airport/welcome.html
  7. "Archived copy". Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2014-04-13.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_மூலதனம்&oldid=3793075" இலிருந்து மீள்விக்கப்பட்டது