பொன்னேரி வட்டம்

பொன்னேரி வட்டம், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பொன்னேரி நகரம் உள்ளது.

இந்த வட்டம் 8 உள்வட்டங்களும், 200 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 389,862 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 195,181 ஆண்களும், 194,681 பெண்களும் உள்ளனர். 100,866 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 62.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 79.46% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 997 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 42,836 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 124,094 மற்றும் 7,942 ஆகவுள்ளனர். மக்கட்தொகையில் இந்துக்கள் 91.52%, இசுலாமியர்கள் 4.23%, கிறித்தவர்கள் 3.74% மற்றும் பிறர் 0.50% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னேரி_வட்டம்&oldid=3640426" இலிருந்து மீள்விக்கப்பட்டது