பொள்ளிலூர் போர் (1780)

பொள்ளிலூர் போர் (Battle of Pollilur), அல்லது புள்ளலூர் போர் அல்லது பேரம்பாக்கம் போர், இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போரின் அங்கமாக செப்டம்பர் 10, 1780இல் காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடைபெற்ற போர் ஆகும். இது திப்பு சுல்தான் தலைமையேற்ற மைசூர் படைகளுக்கும் கர்னல் வில்லியம் பெய்லி தலைமையேற்ற பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனப் படைகளுக்கும் இடையே நடந்தது. பிரித்தானிய படை பேரிழப்புகளை சந்தித்ததுடன் சரணடைந்தது. துணைக்கண்டத்திலேயே அதுவரை பிரித்தானியர்கள் இந்தப் போரில்தான் மிகமோசமான தோல்வியை எதிர்கொண்டனர். (இதற்கு பின்னரே சிலியன்வாலாவில் இதைவிட மோசமானத் தோல்வியைத் தழுவினர்.)[5]

பொள்ளிலூர் போர்
இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் பகுதி

திப்புவின் வேனிற்கால அரண்மனை சுவரிலுள்ள பொள்ளிலூர் போர் குறித்த சுவர் ஓவியம்.
நாள் செப்டம்பர் 10, 1780
இடம் பொள்ளிலூர், காஞ்சிபுரம், இந்தியா
மைசூர் வெற்றி
பிரிவினர்
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மைசூர் அரசு
தளபதிகள், தலைவர்கள்
வில்லியம் பெய்லி  (கைதி) திப்பு சுல்தான்
பலம்
4,000[1] - 7,000[2]2,000–3,000 குதிரைப்படை & ஏவூர்தியாட்கள்[3]
இழப்புகள்
3000 கொல்லப்பட்டனர்,[4]
200[4] - 7,000[2] சிறைபிடிப்பு
தெரியவில்லை

திப்பு குண்டூரில் கர்னல் பெய்லியை காஞ்சிபுரம் செல்லமுடியாது தடுத்திருக்க திப்புவின் தந்தை ஐதர்அலி ஆற்காட்டை தொடர்ந்து முற்றுகையிட்டார். படுகொலைக்குப் பிறகு பெய்லியின் தலைமையின் கீழிருந்த 3853 பிரித்தானியத் துருப்புகளில் 50 அதிகாரிகளும் 200 வீரர்களும் மட்டுமே சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். பெய்லி ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.[6]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Gott, Richard (2000). Britain's Empire: Resistance, Repression and Revolt. London: Verso Books. பக். 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84467-738-9. https://books.google.co.uk/books?id=sNoz_F_wQPkC&pg=PA76. பார்த்த நாள்: 8 February 2012. 
  2. 2.0 2.1 William Dalrymple (historian) (1 October 2005). "ASSIMILATION AND TRANSCULTURATION IN EIGHTEENTH-CENTURY INDIA: A Response to Pankaj Mishra". Common Knowledge 11 (3): 445–485. doi:10.1215/0961754X-11-3-445. http://commonknowledge.dukejournals.org/content/11/3/445.citation. பார்த்த நாள்: 8 February 2012. "As late as 1780, following the disastrous British defeat by Tipu Sultan of Mysore at the Battle of Pollilur, 7,000 British men, along with an unknown number of women, were held captive by Tipu in his sophisticated fortress of Seringapatam.". 
  3. Jaim, H M Iftekhar; Jaim, Jasmine (1 October 2011). "The Decisive Nature of the Indian War Rocket in the Anglo-Mysore Wars of the Eighteenth Century". Arms & Armour 8 (2): 131–138. doi:10.1179/174962611X13097916223244. http://www.ingentaconnect.com/content/maney/aaa/2011/00000008/00000002/art00005. பார்த்த நாள்: 8 February 2012. "Captain Munro noted: 'Around two or three thousand horse and rocket-men kept hovering round our main army, in order to conceal his enterprise from us'.". 
  4. 4.0 4.1 Jasanoff, Maya (2005). Edge of empire: lives, culture, and conquest in the East, 1750-1850 (1. ). New York: Knopf. பக். 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4000-4167-8. https://books.google.co.uk/books?id=1zgpAAAAYAAJ. "Some three thousand Company soldiers were killed, while Baillie and two hundred Europeans, fifty of them officers, were carried off to Seringapatam in chains." 
  5. Ramaswami, N.S. (1984). Political History of Carnatic under the Nawabs. New Delhi: Abhinav Publications. பக். 225. https://archive.org/details/politicalhistory0000nsra. 
  6. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. பக். 173–174. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131300343. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொள்ளிலூர்_போர்_(1780)&oldid=3737356" இலிருந்து மீள்விக்கப்பட்டது