போபத் அருவி

போபத் நீர்வீழ்ச்சி சபரகாமுவாகா மாகாணத்தில் குருவிட்டை நகருக்கு அண்மையில் கொழும்பு - இரத்தினபுரி பெருந்தெருவில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. களுகங்கையின் முக்கிய கிளையாறான குருகங்கையில் அமைந்துள்ள போபத் நீர்வீழ்ச்சி மொத்தம் 30 மீட்டர் (100 அடி) பாய்கிறது. இதன் பெயர் இதன் வடிவத்தைக் கொண்டு வருவதாகும் (போபத் என்பது சிங்கள மொழியில் அரசமர இலை என்பதைக் குறிக்கும்). இந்நீர்வீழ்ச்சியை குருவிட்டை நகரில் இருந்து தெவிபாகலை கிராமத்துக்குச் செல்லும் பாதையூடாக அணுகலாம். நீர்வீழ்ச்சிக்கருகே உல்லாசப் பிரயாணிகளுக்கான வசதிகள் காணப்படுகின்றன. கொழும்பில் இருந்து 2 மணித்தியாலத்துக்குள் இந்நீர்வீழ்ச்சியை அடையலாம் என்பதால் உள்நாட்டு உல்லாசப்பிரயானிகளிடையே பிரசித்தமான இடமாக காணப்படுகிறது.

போபத் நீர்வீழ்ச்சி
போபத் நீர்வீழ்ச்சி
Map
அமைவிடம்இலங்கை சபரகாமுவாகா மாகாணம்
ஏற்றம்325 மீட்டர்
மொத்த உயரம்30 மீட்டர் (100 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை2
நீர்வழிகுரு ஆறு (களு கங்கை)
"https://ta.wikipedia.org/w/index.php?title=போபத்_அருவி&oldid=3846482" இலிருந்து மீள்விக்கப்பட்டது