போல்கட்டி மாளிகை

போல்கட்டி அரண்மனை (Bolgatty Palace) என்பது கேரளத்தின் கொச்சியில் உள்ள போல்கட்டி தீவில் டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட ஒரு அரண்மனை ஆகும். ஹாலந்துக்கு வெளியே இருக்கும் மிகப் பழமையான டச்சு அரண்மனைகளில் ஒன்றான இந்த மாளிகை 1744 ஆம் ஆண்டில் டச்சு வணிகர்களால் கட்டப்பட்டது. பின்னர் இது விரிவாக்கப்பட்டு இதைச்சுற்றி தோட்டங்கள் அமைக்கபட்டன. முன்பு இந்த கட்டிடம் டச்சு மலபார் தளபதியின் ஆளுநரின் அரண்மனையாக இருந்தது. 1909 இல் ஆங்கிலேயர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பின்னர் இது பிரித்தானிய ஆளுநர்களின் இல்லமாக செயல்பட்டது, பிரித்தானிய அரசு காலத்தில் கொச்சின் அரச பிரதிநிதியின் அமைவிடமாக இருந்தது.

போல்கட்டி அரண்மனையானது, தற்காலத்தில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு பாரம்பரிய விடுதியாக உள்ளது

1947 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அரண்மனை அரசின் சொத்தாக மாறியது. பின்னர் பாரம்பரிய தங்கும் விடுதியாக மாற்றப்பட்டது. போல்கட்டி அரண்மனையில் நீச்சல் குளம், 9 குழிகள் கொண்ட கோல்ஃப் மைதானம், ஆயுர்வேத மையம் உள்ளன. மேலும் இங்கு தினசரி கதகளி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது சுற்றுலாப் பயணிகள் விடுமுறையில் தங்கி கழிக்கும் இடமாக உள்ளது. இங்கு சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது.   போல்கட்டி அரண்மனைக்குச் செல்ல சிறந்த சமயம் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை ஆகும். ஏனென்றால் இந்த காலகட்டத்தில் கொச்சியில் அற்புதமான வானிலை இருக்கும்.

படவரிசை தொகு


குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்கட்டி_மாளிகை&oldid=3618284" இலிருந்து மீள்விக்கப்பட்டது