போல்தாவா மாகாணம்

போல்தாவா மாகாணம் (Poltava Oblast) உக்ரைன் நாட்டில் மத்தியகிழக்கில் அமைந்த மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் போல்தாவா நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 13,71,529 ஆக இருந்தது. இதன் முக்கிய நகரங்கள் போல்தாவா, ஹோரிசினி மற்றும் கிரெமென்சுக் ஆகும்.

போல்தாவா மாகாணம்
Полтавська область
மாகாணம்
போல்தாவ்ஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 49°35′22″N 34°33′05″E / 49.58944°N 34.55139°E / 49.58944; 34.55139
நாடு உக்ரைன்
தலைநகரம்போல்தாவா
அரசு
 • ஆளுநர்டிமிட்ரோ லுனின்
 • மாகாணச் சட்டமன்றம்84 உறுப்பினர்கள்
 • தலைவர்ஒலேக்சந்தர் பிளிங்கி
பரப்பளவு
 • மொத்தம்28,748 km2 (11,100 sq mi)
பரப்பளவு தரவரிசை6-ஆம் இடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம் 13,71,529
 • தரவரிசை12-ஆம் இடம்
நேர வலயம்கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு36000-38999
பிரதேச குறியீடு+380-53
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-53
மாட்டங்கள்25
நகரங்கள் (மொத்தம்)15
• மண்டல நகரங்கள்5
நகர்புற குடியிருப்புகள்21
கிராமங்கள்1831
FIPS 10-4UP18
இணையதளம்www.oblrada-pl.gov.ua/

புவியியல் தொகு

28,800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட போல்தாவா மாகாணம் தினேப்பர் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் சுமி மாகாணம் மற்றும் செர்னிகிவ் மாகாணம், கிழக்கில் கார்கிவ் மாகாணம், தெற்கில் நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம், தென்மேற்கில் கிரோவோக்ராட் மாகாணம், மேற்கில் செர்கசி மாகாணம் உள்ளது.

2018-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 14,00,000 ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 49 பேர் வீதம் வாழ்கின்றனர்.[2]

பொருளாதாரம் தொகு

இம்மாகாணத்தில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு அதிகம் கிடைப்பதால் அது தொடர்பான ஆலைகள் அதிகம் உள்ளது. மேலும் இரும்பு கனிமங்கள் அதிக அளவில் உள்ளது.

இம்மாகாணத்தில் சர்க்கரை வள்ளி கிழங்கு, சூரியகாந்தி எண்ணெய், உருளைக்கிழங்கு, அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இறைச்சி, பால் பொருட்கள், முட்டை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள் தொகு

 
போல்தாவா மாகாணத்தின் மாவட்டங்கள்

இம்மாகாணம் 25 மாவட்டங்களும், 5 நகரங்களும், 21 நகர்புற குடியிருப்புகளும், 1862 கிராமங்களும் கொண்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia. ed. Toponymic Guidelines for Map and Other Editors for International Use. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-966-475-839-7. https://unstats.un.org/unsd/geoinfo/UNGEGN/docs/Toponymic%20guidelines%20PDF/Ukraine/Verstka.pdf. பார்த்த நாள்: 2020-10-06. 
  2. "Poltava Oblast, Ukraine Travel Guide". ukrainetrek.com. Archived from the original on 2019-09-04. பார்க்கப்பட்ட நாள் 2020-01-09.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்தாவா_மாகாணம்&oldid=3842738" இலிருந்து மீள்விக்கப்பட்டது