போளூர் வட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வருவாய் கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு வட்டம்

போளூர் வட்டம் (Polur Taluk), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டத்தில் ஒன்றாகவும் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக போளூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 111 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

போளூர்
வருவாய் வட்டம்
போளூர் is located in தமிழ் நாடு
போளூர்
போளூர்
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை மாவட்டம்
அரசு
 • வருவாய் கோட்டம்ஆரணி வருவாய் கோட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,51,655
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-97

போளூர் வட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 2012-இல் கலசப்பாக்கம் வட்டம் மற்றும் சமுனாமரத்தூர் வட்டம் மற்றும் சேத்துப்பட்டு வட்டம் உருவாக்கப்பட்டது.

போளூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

உள்வட்டம் தொகு

இந்த வட்டத்தில் ஐந்து உள்வட்டங்கள் அமைந்துள்ளது.

  1. போளூர்
  2. கேளூர்
  3. சந்தவாசல்
  4. மொடையூர்
  5. மண்டகொளத்தூர்

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,51,655 ஆகும். அதில் 1,25,827 ஆண்களும், 1,25,128 பெண்களும் உள்ளனர். 68766 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 86.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [2] இவ்வட்டத்தின் எழுத்தறிவு 71.74% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 997பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50222 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 917 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 78,138 மற்றும் 35,230 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.02%, இசுலாமியர்கள் 2.35%, கிறித்தவர்கள் 3.32%, சமணர்கள் 0.17% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[3]

வருவாய் கிராமங்கள் தொகு

இந்த வட்டத்தில் 111 வருவாய் கிராமங்கள் உள்ளன.[4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போளூர்_வட்டம்&oldid=3460690" இலிருந்து மீள்விக்கப்பட்டது