பௌ-பீஜ் (Bhau-beej) அல்லது பாய் தூஜ் (Bhai Dooj) அல்லது பாய் போட்டா (Bhai Phota) என்றெல்லாம் குறிப்பிடப்படும் இந்துக்களின் விழா வட இந்தியாவில் தீபாவளித் திருநாளை அடுத்த வளர்பிறை இரண்டாம் நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தங்களின் அண்ணன் தம்பியரின் நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலனுக்காக சகோதரிகள் வேண்டுதல் நிகழ்த்துவதும் வெற்றித்திலகம் இடுவதும் சகோதரர்கள் தங்கள் பெண் உடன்பிறப்புகளுக்காக பரிசுகள் வாங்கிவருவதும் வழைமையாகும். இந்த விழா வங்காளம், மகாராட்டிரம், கொங்கண் பகுதிகளிலும் கர்நாடகம் மற்றும் கோவாவின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. நேபாளத்திலும் இது முதன்மையான சமயவிழாவாக உள்ளது.

தொகுப்பு பௌ-பீஜ்

இந்துத் தொன்மவியல் கதைகளின்படி தீபாவளித் திருநாளில் நரகாசுரனை வென்றபின்னர் கிருட்டினன் தனது தங்கை சுபத்திரையை காண வந்தபோது சுபத்திரை அவருக்கு விருந்துகள் அளித்து வெற்றித்திலகமிட்டதை நினைவு கூறுமுகமாக இந்தத் திருநாள் கொண்டாடப் படுவதாக்க் கூறப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌ-பீஜ்&oldid=3197378" இலிருந்து மீள்விக்கப்பட்டது