மகேஷ் பாபு

இந்தியாவின் பிரபல தென்னிந்திய நடிகர்

மகேஷ் பாபு (தெலுங்கு: మహేష్ ‌బాబు), (பிறப்பு - ஆகஸ்டு 9, 1975, சென்னை), தெலுங்கு மொழித் திரைப்பட நடிகர் ஆவார். மகேஷ் பாபு, முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார்.native place is Burripalem ,Guntur district இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மகேஷ் பாபுn

பிறப்பு ஆகத்து 9, 1975 ( 1975 -08-09) (அகவை 48)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
தொழில் திரைப்பட நடிகர்
நடிப்புக் காலம் 1999-தற்போது
துணைவர் நம்ரதா சிரோத்கர்
பிள்ளைகள் கௌதம் சித்தாரா
குறிப்பிடத்தக்க படங்கள் நந்து வில்''நந்தகோபால்'
தூக்குடு வில்''
அஜய் குமார்'
போக்கிரியில்'' பண்டு / கிருஷ்ண மனோகர்'

இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. போக்கிரி (திரைப்படம்) அதே பெயரில் தமிழாக்கப்பட்டது. மகேஷ் ஆறு நந்தி விருதுகளையும்,இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்தித் திரைப்பட நடிகை நம்ரதா ஷிரோத்கரை விரும்பி மணம் முடித்துள்ளார். இவர் தம்சப் , அமர்தாஞ்சன் , யுனிவர்செல் ஆகியற்றின் விளம்பரத் தூதராவார்.

ஆரம்பகாலம் தொகு

மகேஷ் பாபு ஆகஸ்ட் 9,1975 ஆண்டு சென்னை யில் சிவராம கிருஷ்ணா மற்றும் திருமதி.இந்திரா தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது இளைய சகோதரர் ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளராவார். இவர் தம் இளமை பருவத்தைத் தம் பாட்டி இல்லத்தில் கழித்தார். சிறு வயதிலேயே தம் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் பள்ளி பருவத்தில் தமிழ் நடிகர் கார்த்தி யின் வகுப்பு தோழர் ஆவார்.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஷ்_பாபு&oldid=3631783" இலிருந்து மீள்விக்கப்பட்டது