மஞ்சையா எகடே

தர்மஸ்தலம் மஞ்சய்யா எகடே (Dharmasthala Manjayya Heggade) (1889 – 1955) இவர் ஓர் இந்தியக் கல்வியாளரும், சட்டமன்ற உறுப்பினரும், அறப்பணிகளை செய்தவரும் ஆவார். இவர் 1918 முதல் 1955 வரை தர்மசாலா மஞ்சுநாதர் கோயிலின் பரம்பரை நிர்வாகி (தர்மதிகாரி) என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர். [1]

தர்மஸ்தலம் மஞ்சய்யா எகடே
சுய தரவுகள்
பிறப்பு
சமயம்சைனம்
பதவிகள்
Based inதர்மஸ்தலா, கருநாடகம், இந்தியா
பதவிக்காலம்1918–1955
முன் இருந்தவர்சந்தையா எகடே
பின் வந்தவர்இரத்னவர்ம எக்டே
Postதர்மசாலா கோவிலின்
தர்மதிகாரி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர், பெர்கடே என்ற ஒரு குடும்பத்தில் 1889 ஆம் ஆண்டு, தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலின் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கோயில் நகரமான தர்மஸ்தலாவின் நிலப்பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தார். மஞ்சய்யா மங்களூரில் தனது கல்வியை முடித்தார். இவரது மாமா சந்தய்யா எகடேவின் மரணத்திற்குப் பிறகு, 1918 இல் தனது 29 வயதில் மஞ்சுநாதர் கோயிலின் தர்மதிகார பதவிக்கு வந்தார். [1]

தொழில் தொகு

தர்மதிகாரி ஆனதும், மஞ்சய்யா மேற்கொண்ட முதல் பெரியப் பணி மலேரியாவை ஒழித்ததாகும். இது கோயில் நகரமான தர்மசாலாவில் பேரழிவை ஏற்படுத்தியது இவர் 1932 ஆம் ஆண்டில் ஒரு சர்வ தர்ம சபையைத் தொடங்கினார். [2] இவரது தொண்டு நடவடிக்கைகள் கல்வித்துறையிலும் விரிவடைந்தன. இவர் 1918 ஆம் ஆண்டில் பெள்தங்கடி வட்டத்தில் முதல் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கினார். மேலும் இந்த நோக்கத்திற்காக ஏராளமான நிலங்களையும் பணத்தையும் நன்கொடையாக வழங்கினார். இங்கு வழங்கப்படும் கல்வி தார்மீக மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று இவர் விரும்பினார். எனவே 1940 ஆம் ஆண்டில் சித்தவன குருகுலம் என்ற ஒரு நிறுவனத்தை அமைத்தார். தார்மீக பின்னணியுடன் ஆன்மீக கல்வியை உள்ளடக்கிய பண்டைய குருகுல அமைப்பின் மாதிரியில் இந்த நிறுவனம் கல்வியை வழங்கியது . இவர் தமிழ்நாடு சட்ட மேலவையின் உறுப்பினராகவும் பணியாற்றினார். மேலும் இவரது சொற்பொழிவுத் திறமைக்காக அறியப்பட்டார். 1955 ஆகத்து 31 அன்று இவர் இறந்தார். [1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Murthy, A. V. Narasimha. "Manjayya Hegde: A Noble Savant". Star of Mysore,Department of Ancient History & Archaeology, University of Mysore. Archived from the original on 22 June 2011.
  2. Staff Correspondent. "Sarva dharma sammelan' from Tuesday" இம் மூலத்தில் இருந்து 2007-09-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070913214746/http://www.hinduonnet.com/2004/12/05/stories/2004120500430500.htm. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சையா_எகடே&oldid=3305971" இலிருந்து மீள்விக்கப்பட்டது