மட்டக்குதிரை

ஒரு குதிரை வகை

மட்டக்குதிரை ஒரு வகையான சிறிய குதிரை (Equus ferus caballus). இது ஒரு குதிரைவண்டி குதிரைஆகும், சூழலைப் பொறுத்து தோராயமான உயரத்தில் காணப்படும். மனிதருடன் எளிதாக பழகக் கூடிய மனோபாவம் உடையதாகும். மட்டக்குதிரை பொதுவாக 14.2 அடி உயரத்தில் இருக்கும். இக்குதிரை வகையில் பல்வேறு இனங்கள் உள்ளன. மற்ற குதிரைகளுடன் ஒப்பிடும்போது, மட்டக்குதிரைக்கு தடித்த பிடரிமயிர் மற்றும் வால் உள்ளன. விகிதாசாரமாக அமைந்த குறுகிய கால்கள், வலிமையான எலும்பு, தடித்த கழுத்து, குறுகிய தலையில் பரந்த நெற்றியுடன் காணப்படும். போனி(pony) என்ற சொல் பழைய பிரெஞ்சு பவுலன் ஏட்டிலிருந்து உருவானது, போனி இதன் பொருள் இளங்குதிரைக் குட்டியாகும். இளம், மற்றும் முதிர்ச்சியற்ற குதிரை என்ற பொருளிலிலும் வரும். மட்டக்குதிரை முழுமையாக வளர்ந்தாலும் சிறியதாகவே இருக்கும். குதிரைகளுடன் அறிமுகமில்லாத நபர்கள் இந்த மட்டக்குதிரையைப் பார்க்கும் போது குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.பெரும்பாலான நவீன மட்டக்குதிரைகள் சிறிய உயரமுடையதாகவே இருந்தன.மூதாதையர்கள் இதையே வளர்த்து வந்தனர்.ஏனென்றால் அவர்கள் குதிரைகள் ஓரளவு வாழக்கூடிய வாழ்விடங்களிலேயே வாழ்ந்தனர்.

A Highland Pony, demonstrating the pony characteristics of sturdy bone, a thick mane and tail, a small head, and small overall size.

இந்த வகை சிறிய விலங்குகள் வடக்கு அரைக்கோளம் முழுவதும் பல்வேறு நோக்கங்களுக்காக வளர்க்கப்பட்டன.மட்டக்குதிரைகள் (போனிஸ்) வரலாற்று ரீதியாக வாகனம் ஓட்டுவதற்காகவும்,சரக்குப் போக்குவரத்துக்குகாகவும் பயன்படுத்தப்பட்டன.பொழுதுபோக்கு சவாரிகள்,குழந்தைகள் ஏற்றம்,பின்னர் போட்டியாளர்கள் போட்டிக்காகவும்,கலைஞர்கள் தங்கள் சொந்த உரிமைக்காகவும் வளர்த்தனர்.கிரேட் பிரிட்டனில் தொழில்துறை புரட்சி ஏற்பட்ட போது கணிசமான எண்ணிக்கையில் மட்டக்குதிரைகள் பயன்படுத்தப்பட்டன.இந்த வகை குதிரைகள் சுரங்கங்களில் நிலக்கரி சுமைகளை இழுத்துச் சென்றன.மட்டக்குதிரை புத்திசாலித்தனமாகவும் நட்பாகவும் பழகக்கூடியதாகும்.இவை சில நேரங்களில் பிடிவாதமாக அல்லது தந்திரமாக நடக்கின்றன.

ஒழுங்காக பயிற்சியளிக்கப்பட்ட மட்டக்குதிரை சவாரி செய்யக் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு பொருத்தமான குதிரை ஏற்றத்திற்காக பயன்படுகிறது.மட்டக்குதிரைகள் அவற்றின் அளவுக்கு ஏற்ப வலுவாக இருக்கும்.எனவே பெரிய மட்டக்குதிரைகள் பெரியவர்களால் ஓட்டப்பட்டன.நவீன பயன்பாட்டில், பல நிறுவனங்கள் மட்டக்குதிரையை முதிர்ச்சியடைந்த குதிரையாக வரையறுக்கின்றனர்.அவை 14.3 கைகளுக்கு (59 அங்குலங்கள், 150 செ.மீ) குறைவாக இருக்கும்.இதில் பல விதிவிலக்குகளும் உள்ளன.குதிரையின் அளவை கணக்கிடுவதில் கடுமையான அளவீட்டு மாதிரியைப் பயன்படுத்தும் வெவ்வேறு நிறுவனங்கள் 14 கைகள் (56 அங்குலங்கள், 142 செ.மீ) முதல் கிட்டத்தட்ட 14.3 கைகள் (59 அங்குலங்கள், 150 செ.மீ) வரை வேறுபடுகின்றன.

பல இனங்களில் ஒன்றான மட்டக்குதிரையை அதன் உயரம் மற்றும் வம்சாவளியை வைத்து பினோடைப்பின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றன.முழு அளவிலான குதிரைகளும் மட்டக்குதிரைகள் என அழைக்கப்படலாம்.மட்டக்குதிரை குழு மட்டக்குதிரைச் சரம் என அழைக்கப்படுகிறது.இந்த குறிப்பு 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஹார்லியின் கையெழுத்துப் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

குதிரைகள் மற்றும் மட்டக்குதிரை

பல வகையான போட்டிகளில் மட்டக்குதிரையின் உத்தியோகபூர்வ வரையறையானது 14.2 கைகளுக்கு (58 அங்குலங்கள், 147 செ.மீ) குறைவாக இருக்கும். நிலையான குதிரைகள் என்றால் 14.2 கை உயரம் இருக்கும்.குதிரையேற்ற விளையாட்டுக்கான சர்வதேச கூட்டமைப்பு,மட்டக்குதிரைக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு வெட்டுப்புள்ளியை வரையறுக்கிறது.காலணிகளுடன் 149 சென்டிமீட்டர் (58.66 இன்; 14.2 1⁄2 கைகள்) காலணிகளுடனும்,காலணிகள் இல்லாமல் 148 சென்டிமீட்டர் (58.3 இன்; 14.2 கைகள்) ஆகும்.இருப்பினும்,151 சென்டிமீட்டர் (59.45 இன்; 14.3 1⁄2 கைகள்) காலணிகளுடனும்,150 சென்டிமீட்டர் (59.1 இன்; 14.3 கைகள்) காலணிகள் இல்லாமலும் விளையாடலாம் என போட்டிக்கு அனுமதி வழங்கி மேலும் ஒரு எல்லையை வரையறுக்கிறது. [2]"போனி" என்ற சொல்லை எந்தவொரு குதிரைக்கும் அளவு,இனத்தைப் பொருட்படுத்தாமல் பொதுவாக,அன்பாக அழைக்க பயன்படுத்தலாம்.மேலும் சில குதிரை இனங்கள் முதிர்ச்சி அடைந்து காணப்பட்ட போதிலும்,மட்டக்குதிரை எனவே அழைக்கப்பட்டன.மேலும்,அவை போட்டிக்கும் அனுமதிக்கப்படுகின்றன.ஆஸ்திரேலியாவில், 14 முதல் 15 கைகள் (142 முதல் 152 செ.மீ; 56 முதல் 60 அங்குலங்கள்) அளவுள்ள குதிரைகள் "காலோவே"("galloway") என்று அழைக்கப்படுகின்றன.மற்றும் மட்டக்குதிரை ஆஸ்திரேலியாவில் 14 கைகளின் கீழ் (56 அங்குலங்கள், 142 செ.மீ) அளவிடப்படுகிறது. [3]

  1. Lipton, James (1991). An Exaltation of Larks: The Ultimate Edition of More Than 1,000 Terms. Viking. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780670300440. https://books.google.com/books/about/An_Exaltation_of_Larks.html?id=-pFZAAAAYAAJ. 
  2. "PONY MEASUREMENT 2007 30 January 2007 " Explanation of Article 3103.1, FInternational Federation for Equestrian Sport Web site, Accessed October 7, 2009 பரணிடப்பட்டது 26 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  3. Owlet, Lorna and Phlip Mathews, Ponies in Australia, Milsons Point: 1979
"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டக்குதிரை&oldid=3721915" இலிருந்து மீள்விக்கப்பட்டது