மண் அமைப்புகளின் அடிப்படையில், மண் வகை பொதுவாக ஒரு குறிப்பிட்ட மாதிரியில் உள்ள கனிம துகள்களின் வெவ்வேறு அளவுகளைக் குறிக்கிறது.மண்ணானது நுண்ணிய பாறைத்துகள் அவற்றிலுள்ள   மணல் மற்றும் வண்டல் அளவு மற்றும் கூடுதலாக களிமண் , அழுகிய தாவரம் போன்ற கரிமப் பொருள் போன்றவற்றின் அடிப்படையில் குழுவாக அமைக்கப்பட்டிருக்கும்.

மண் வகைகள்

ஒவ்வொரு கூறுகளும், அவற்றின் அளவுகளும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக, பெரிய துகள்கள், மணல் போன்றவை காற்றோட்டம் மற்றும் வடிகால் பண்புகளைத் தீர்மானிக்கின்றன, அதே நேரத்தில் நுண்ணிய, நுண் களிமண் துகள்கள், வேதிப்பண்புகளில் வீரியமுடன் நீர் மற்றும் தாவர ஊட்டச்சத்துகளுடன் பிணைக்கப்படுகின்றன. இந்த அளவுகளின் விகிதம் மண் வகையை நிர்ணயிக்கிறது: களிமண், கரிசல்,  வண்டல்  போன்றவை.

 கனிமக் கலவையின் கூடுதலாக மண்ணின், மட்கிய (கரிம பொருள்)  தன்மை மண் இயல்பு மற்றும் வளத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.  மண் கூழாங்கல் அல்லது சரளை போன்றவற்று டன்  அதிக அளவில் கலந்து காணப்படலாம். அனைத்து வகையான மண்ணும் தூய்மையான களிமண் போன்று ஊடுருவக்கூடியதாக இருப்பது இல்லை.

சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல அங்கீகரிக்கப்பட்ட மண் வகைப்பாடுகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்_வகை&oldid=3868171" இலிருந்து மீள்விக்கப்பட்டது