மதநீர் (Musth) என்பது ஆண் யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் நீர். இது இவைகளை மிகவும் ஆக்ரோசமாகவும் ஆபத்தாகவும் மாற்றும் தன்மையுடையது என்றும், இது ஆண்களின் பாலுணர்வினைச் சார்ந்ததென்றும் கூறுவர். இவ்வாறாக மதநீர் வழியும் காலத்தில் யானைக்கு மதம் பிடித்தல் என்று கூறுவர். பெண் யானைக்கு எக்காலத்திலும் மதநீர் சுரக்காது.

மதநீர் வழிதல்
மதம் கொண்ட ஆசிய யானை, இந்தியா
சங்கிலியிடப்பட்ட ஒரு ஆசிய யானை. மதநீர் சுரப்பதனை நோக்கவும்.

காரணம் தொகு

 
ஒட்டகச்சிவிங்கியை துரத்தும் மதம் கொண்ட யானை

டெஸ்டொஸ்டிரோன் என்ற ஹார்மோன் மதம் பிடிக்கா யானையை விட 60 மடங்கு அதிகமாக இருப்பதனை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனினும்

பரிமாற்றங்கள் தொகு

மதம் கொண்ட யானைகள் மனிதரிடமும் (நன்கு பழகிய பாகனிடத்தும்), மற்ற யானைகள் மற்றும் விலங்குகளுடனும் சரிவர பரிமாற்றம் செய்யாமல் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றன. மற்ற பிராணிகளை கொல்லவும் செய்கின்றன[1] .

பராமரிப்பு தொகு

 
தன் சங்கிலியை முறிக்க முயலும் மதயானை

எனவே இவை தன் மதம் பிடித்த நிலையிலிருந்து வெளியேறும் வரை தனித்து விடப்பட்டும், நன்றாக கட்டிப்போட்டும் பராமரிக்கப்படுகின்றன. மதம் பிடித்த தருவாயில் பணிகளை செய்ய விடமாட்டார்கள். மேலும்

சில ஆய்வுகள் தொகு

வயதில் முதிர்ந்த ஆண் யானைகளை புகுத்தினால் இளம் ஆண்கள் மதம் பிடிக்காதிருக்கின்றன என்றும் அவற்றின் அடங்கா குணமும் வெளிவராதென கண்டறிந்துள்ளனர்[2][3].

உசாத்துணை தொகு

  1. http://www.upali.ch/musth_en.html
  2. "Killing of black and white rhinoceroses by African elephants in Hluhluwe-Umfolozi Park, South Africa" பரணிடப்பட்டது 2007-10-25 at Archive-It by Rob Slotow, Dave Balfour, and Owen Howison. Pachyderm 31 (July–December, 2001):14–20. Accessed 14 September 2007.
  3. Siebert, Charles (2006-10-08). "An Elephant Crackup?". New York Times Magazine. பார்க்கப்பட்ட நாள் 2007-06-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதநீர்&oldid=3360944" இலிருந்து மீள்விக்கப்பட்டது