மதுக்கரை

இது தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும்

மதுக்கரை (ஆங்கிலம்:Madukkarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை வட்டம் மற்றும் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இந்நகராட்சியில் உள்ள மக்கள் ஏசிசி சிமெண்ட் ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.

மதுக்கரை
—  ~ நகராட்சி ~  —
மதுக்கரை
இருப்பிடம்: மதுக்கரை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°54′N 76°58′E / 10.9°N 76.97°E / 10.9; 76.97
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மதுக்கரை வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

30,357 (2011)

1,414/km2 (3,662/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

21.47 சதுர கிலோமீட்டர்கள் (8.29 sq mi)

311 மீட்டர்கள் (1,020 அடி)

இணையதளம் www.townpanchayat.in/madukkarai

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல் தொகு

16 அக்டோபர் 2021 அன்று மதுக்கரை பேரூராட்சியை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]

நகராட்சி அமைவிடம் தொகு

இந்நகராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே ஒத்தக்கல்மண்டபம் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு தொகு

21.47 ச.கி.மீ. பரப்பும், 22 வார்டுகளும், 117 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி, கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகராட்சி 8,153 வீடுகளும், 30,357 மக்கள்தொகையும் கொண்டது.[7][8]

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 10°54′N 76°58′E / 10.9°N 76.97°E / 10.9; 76.97 ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 311 மீட்டர் (1020 அடி) உயரத்தில் இருக்கின்றது.

இதனையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. kumbakonam corporaon and 19 muniicipalites
  5. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  6. மதுக்கரை பேரூராட்சியின் இணையதளம்
  7. http://www.townpanchayat.in/madukkarai/population
  8. Madukkarai Town Panchayat Population Census 2011
  9. "Madukkarai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுக்கரை&oldid=3818342" இலிருந்து மீள்விக்கப்பட்டது