மதுசூதன சரஸ்வதி

மதுசூதன சரஸ்வதி (Madhusūdana Sarasvatī) (c.1540–1640) இந்திய அத்வைத மரபில் வந்த வேதாந்த தத்துவாதி ஆவார். இவரது குருமார்கள் விஷ்வேஸ்வர சரஸ்வதி மற்றும் மாதவ சரஸ்வதியாவர். துவைத-அத்வைத தருக்கத்தில் தலைசிறந்து விளங்கியவர். இவரது படைப்புக்களில் தலைசிறந்து விளங்கும் அத்வைத சித்தி எனும் நூல், மத்துவரின் துவைத தத்துவங்களுக்கு அத்வைதிகள் பதிலடி தரும் வகையில் உதவுவதாக உள்ளது.

மதுசூதன சரஸ்வதி
பிறப்பு1540
வங்காளம், இந்தியா
இறப்பு1640
வங்காளம், இந்தியா
தத்துவம்அத்வைத வேதாந்தம்
இந்திய மெய்யிலாளர்

பிறப்பு மற்றும் கல்வி தொகு

வங்காளத்தில் பிறந்த மதுசூதன சரஸ்வதியின் இயற்பெயர் கமலாயனர். துவக்கத்தில் நியாயா சாத்திரங்களை கற்று, தலைசிறந்து விளங்கினார். மதுசூதன சரஸ்வதி, பின்னாளில் இல்லறத்தை துறந்து சந்நியாச வாழ்க்கை மேற்கொண்டு வாரணாசி சென்று, அத்வைத வேதாந்த சாத்திரங்களை கற்றறிந்தார்.

மதுசூதன சரஸ்வதியின் படைப்புகள் தொகு

மதுசூதன சரஸ்வதி 22 வேதாந்த சாத்திர நூல்கள் இயற்றியுள்ளார். அவைகளில் 12 தத்துவ நூல்கள் மற்றும் விளக்க உரை நூல்கள் ஆகும். மற்றவை தோத்திரங்களும் நாடகங்களும் ஆகும்.

  1. அத்வைத சித்தி (Advaita-siddhi (अद्वैतसिद्धिः) [1]
  2. அத்வைத மஞ்சரி (Advaita-manjari (अद्वैतमञ्जरी)
  3. அத்வைத-ரத்தின-ரக்சணாம் (Advaita-ratna-raksana (अद्वैतरत्नरक्षणम्) [2]
  4. ஆத்ம போத விளக்கம் (Atma-bodha-tika (आत्मबोधटीका)
  5. ஆனந்த மந்தாகினி ( Ananda-mandakini (आनन्दमन्दाकिनी)
  6. பிரஸ்தான போதம் ( Prasthanabheda (प्रस्थानभेदः) [3]
  7. பகவத் கீதை – குடார்த்த தீபிகா (Bhagavad-gita-gudhartha-dipika (भगवद्गीता-गूढार्थदीपिका)[4]
  8. வேதாந்த கல்ப லதிகா (Vedanta-kalpa-latika (वेदान्तकल्पलतिका) [5]
  9. சாஸ்திர சித்தாந்த லேச டீகா (Sastra-siddhanta-lesa-tika (शास्त्रसिद्धान्तलेशटीका)'
  10. சம்சேப சாரீரக சார சம்கிரஹ ( Samksepa-sariraka-sara-samgraha (सङ्क्षेपशारीरकसारसङ्ग्रहः)
  11. சிந்தாந்த தத்துவ பிந்து (Siddhanta-tatva-bindu (सिद्धान्ततत्त्वबिन्दुः / सिद्धान्तबिन्दुः)[6]
  12. பரமஹம்ச பிரியா (Pramahamsa-priya (परमहंसप्रिया - भागवताद्यश्लोकव्याख्या) [7]
  13. வேத ஸ்துதி டீகா (Veda-stuti-tika (वेदस्तुतिटीका)
  14. அஷ்ட விக்குருதி விவரணம் (Asta-vikriti-vivarana (अष्टविकृतिविवरणम्)
  15. ராஜானம் பிரிதிபோதம் (Rajanam-prtibodha(?)
  16. ஈஸ்வர பிரதிபத்தி பிரகாசம் (Isvara-pratipatti-prakasa (ईश्वरप्रतिपत्तिप्रकाशः)[8]
  17. பகவத் கீதை ரகசியம் (Bhagavata-bhakti-rasayana (भगवद्भक्तिरसायनम्)
  18. கிருஷ்ண குதூகலம் (Krishna-kutuhala-nataka (कृष्णकुतूहलम्)
  19. பக்தி சாமானிய நிருபணம் (भक्तिसामान्यनिरूपणम्)
  20. சாண்டியல் சூத்திர டீகா (Sandilya-sutra-tika (शाण्डिल्यभक्तिसूत्रटीका)
  21. ஹரி லீலா வாக்கியம் (Hari-lila-vakhya (हरिलीलाव्याख्या)
  22. சிவமகிமை ஸ்தோத்திரம் (shivamahimnastotra-TIkA (शिवमहिम्नःस्तोत्रटीका)

சைவ - வைணவ சமய இணைப்புப் பாலம் தொகு

மதுசூதன சரஸ்வதி அத்வைதியாக இருந்த போதும் கிருஷ்ணரிடம் பெரும் பக்தி கொண்டவர். ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை விளக்க உரை கருத்துக்களுக்கு மாற்றாக பல இடங்களில் விளக்க உரை எழுதியவர் மதுசூதன சரஸ்வதி. வட இந்தியாவில் அத்வைத தத்துவத்தையும், வைணவ தத்துவத்தையும் இணைக்கும் பாலமாக விளங்கியவர்.

தசநாமி மரபு தொகு

மதுசூதன சரஸ்வதி, அக்பரின் மதிப்பிற்குரியவர்களில் ஒருவராக விளங்கியவர். இந்தி மொழியில் இராமாயணம் எழுதிய துளசிதாசரின் நண்பர். இந்து சமயம், சாதுக்கள், இசுலாம், முல்லாக்கள் நடத்திய மன்றக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்.

சத்திரியர் மற்றும் வைசியர் சமூகத்திலிருந்து அதிகமான சந்நியாசிகளை அத்வைத தசநாமி மரபில் உருவாக்கி வேதாந்த சாத்திர பயிற்சி வழங்கியவர்.

ஆதாரத்திற்கும் மேலும் படிப்பதற்கும் தொகு

  • Karl H. Potter, "Madhusūdana Sarasvatī" (in Robert L. Arrington [ed.]. A Companion to the Philosophers. Oxford: Blackwell, 2001. ISBN 0-631-22967-1)
  • Sarvepalli Radhakrishnan, et al. [edd], History of Philosophy Eastern and Western: Volume One (George Allen & Unwin, 1952)

மேற்கோள்கள் தொகு

  1. [1][2][3]
  2. [4]
  3. [5]
  4. [6]
  5. [7][8][தொடர்பிழந்த இணைப்பு]
  6. [9]
  7. [10][தொடர்பிழந்த இணைப்பு]
  8. [11][தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுசூதன_சரஸ்வதி&oldid=3574419" இலிருந்து மீள்விக்கப்பட்டது