மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி

மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (human chorionic gonadotropin; hCG) என்னும் இயக்குநீரானது கருவுற்றபின், சூலுற்ற முட்டையின் பகுதியான பல்கருமுதலுரு சூல்முகையினால் (syncytiotrophoblast) உருவாக்கப்படுவதாகும். இளம்கருவளர்முண்டானது (blastocyst) கருப்பையகத்திற்குள் பொருந்தியபின் பல்கருமுதலுரு சூல்முகையிலிருந்து சூல்வித்தகம் (நஞ்சுக்கொடி) உருவாகிறது[1][2]. சில புற்றுக் கட்டிகளும் இந்த இயக்குநீரை உருவாக்குகின்றன; எனவே, ஒரு நோயாளி கருவுறாமல் அதிக அளவு இயக்குநீரைக் கொண்டிருப்பது புற்று நோய்க்கான அறிகுறியாகக் கருததப்படலாம். என்றாலும், இத்தகு அதிகமான இயக்குநீர் உற்பத்தி கட்டி உருவாவதற்கான காரணமா அல்லது கட்டியின் விளைவா என்பது இதுவரைக் கண்டறியப்படவில்லை. மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கியைப் போன்ற இயக்குநீரான லூட்டினைசிங் இயக்குநீர் எல்லா வயது ஆண்களிலும், பெண்களிலும் பிட்யூட்டரி சுரப்பியில் உருவாகிறது[1][3]. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஓமியோபதி மற்றும் மருந்து சீட்டில்லாத மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி இயக்குநீரைக் கொண்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யத் தடை விதித்துள்ளது. இத்தகுப் பொருட்கள் மோசடியானவை, சட்டவிரோதமானவை என்றும் அறிவித்துள்ளது[4][5][6].

கருவெளியுறை கருவகவூக்கி ஆல்ஃபா புரதக்கூறு
அடையாளம் காட்டிகள்
குறியீடு CGA
மாற்றுக் குறியீடுகள் FSHA, GPHa, GPHA1, HCG, LHA, TSHA
Entrez 1081
HUGO 1885
மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை 118850
RefSeq NM_000735
UniProt P01215
வேறு தரவுகள்
இருக்கை Chr. 6 q14-q21
கருவெளியுறை கருவகவூக்கி பீட்டா புரதக்கூறு
அடையாளம் காட்டிகள்
குறியீடு CGB
மாற்றுக் குறியீடுகள் CGB3
Entrez 1082
HUGO 1886
மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை 118860
RefSeq NM_000737
UniProt P01233
வேறு தரவுகள்
இருக்கை Chr. 19 q13.3

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Cole LA (2009). "New discoveries on the biology and detection of human chorionic gonadotropin". Reprod. Biol. Endocrinol. 7: 8. doi:10.1186/1477-7827-7-8. பப்மெட்:19171054. 
  2. Gregory JJ, Finlay JL (April 1999). "Alpha-fetoprotein and beta-human chorionic gonadotropin: their clinical significance as tumour markers". Drugs 57 (4): 463–7. பப்மெட்:10235686. 
  3. Hoermann R, Spoettl G, Moncayo R, Mann K (July 1990). "Evidence for the presence of human chorionic gonadotropin (hCG) and free beta-subunit of hCG in the human pituitary". J. Clin. Endocrinol. Metab. 71 (1): 179–86. doi:10.1210/jcem-71-1-179. பப்மெட்:1695224. 
  4. Gever, John (December 6, 2011). "FDA Yanks HCG Weight Loss Agents from Market". MedPage Today. http://www.medpagetoday.com/ProductAlert/OTC/30042?pfc=101&spc=230. பார்த்த நாள்: December 7, 2011. 
  5. "HCG Diet Products Are Illegal". FDA. December 6, 2011.
  6. "FDA, FTC act to remove 'homeopathic' HCG weight loss products from the market". FDA. December 6, 2011 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 8, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111208151849/http://www.fda.gov/NewsEvents/Newsroom/PressAnnouncements/ucm282334.htm. பார்த்த நாள்: December 7, 2011.