மனித வளர்ச்சி (பொருளியல்)

மனித வளர்ச்சி (Human development) அல்லது மனித மேம்பாடு என்பது எல்லா வயதுடைய மக்களின் வாழ்க்கை, எல்லா சூழ்நிலைகலுக்கும் ஏற்றவாறு எதனால் மற்றும் ஏன் மாறிக்கொண்டிருக்கிறார்களா? அல்லது எல்லா காலாத்திலும் மாறாமல் இருக்கிறார்களா? என்பதைப் புரிந்து கொள்ள முயலும் ஒரு அறிவியலாகும். இது மனித நிலை குறித்த முக்கியமாக மனிதனின் முக்கிய திறன் அணுகுமுறை பற்றிய ஆய்வுகளை உள்ளடக்கியது. மனித வளர்ச்சி அட்டவனையில் சமத்துவமின்மையையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஐ.நா சபையால் மனித வளர்ச்சியின் உண்மையான முன்னேற்றம் அளவீடு செய்யும் வழியாக பார்க்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கான ஒரு மாற்று அணுகுமுறை ஆகும், மேலும் சமூக நீதி மீது மேலும் கவனம் செலுத்துவதன் மூலம் முன்னேற்ற பாதையில் செல்கிறோமா? என்பதைப் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும்.

மனித வளர்ச்சி என்பது மனித திறமைகளின் விரிவாக்கம், தேர்வுதெடுப்புகளை விரிவுபடுத்துதல், சுதந்திரத்தை மேம்படுத்துதல், மற்றும் மனித உரிமைகளின் நிறைவேற்றம் ஆகியவற்றின் மூலம் விளக்கலாம். [1] இதை இன்னும் எளிமையாக இப்படிக் கூறலாம். அதாவது உங்களது வளர்ச்சி மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வளர்தல் மற்றும் வாழ்க்கையில் அனுபவங்களின் மூலமும் மற்றும் புதிய விசயங்களை கற்பதன் மூலமாகவும் வளர்த்துக்கொள்வது என்றும் கூறலாம்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மனித வளர்ச்சியை. மனிதர்களின் விருப்ப தெரிவுகளை விரிவுபடுத்தும் செயல்களை செய்வது என்று கூறுகிறது. அந்த விருப்பத் தெரிவுகள் மூலம் மனிதன் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும், கல்வி பயிலவும், ஒழுக்கமான வாழ்க்கை வாழவும், அரசியல் சுதந்திரம் , மற்றம் உத்தரவாதமளிக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் பல்வேறு வகையான சுய-மரியாதையுடன் வாழ்வது என்று விளக்குகிறது.[2]

அளவீடு தொகு

மனித வளர்ச்சி குறித்து அறிந்துகொள்ள அல்லது அளவீடு செய்வதற்கு ஐ.நா சபை ஏற்படுத்திய ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மூலம் உருவாக்கப்பட்டது தான் மனித வளர்ச்சி குறியீட்டு எண் Human Development Index (HDI).[3] இந்த குறியீட்டெண், பிறக்கும்போது கணிக்கப்படும் ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி கற்றல் குறியீடு (கல்வி கற்ற ஆண்டுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் கல்வி கற்கும் ஆண்டுகள் ஆகியவற்றின் சராசரி ஆண்டுகள்) மற்றும் மொத்த தேசிய வருமானத்தின் மூலதன சராசரி ஆகியவற்றின் மூலம் HDI கணக்கிடப்படுகிறது. இந்த அளவீடானது, மனித திறமைகளின் பங்களிப்பு குறித்து முழுமையாக கணக்கிடவில்லையென்றாலும், உலக நாடுகள் அனைத்திலும் உள்ள பல்வேறு சமூதாயத்தில் மனித திறனை அளவிடுவதற்கான தரநிலையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளை வளர்ப்பதற்காகும் செலவு அல்லது பண்டமாற்று பொருட்கள் / சேவைகள், அதே போல் தனிநபர்களின் சொந்த நல்வாழ்வு பற்றிய கருத்துக்கள் போன்றவைகள் மனித வளர்ச்சிக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாத வருவாயகள்.மனித வளர்ச்சியின் பிற நடவடிக்கைகளுக்கான அளவீடுகள் மனித வறுமை குறியீட்டெண் (HPI) மற்றும் பாலின அதிகாரமளிப்பு அளவையும் உள்ளடக்கியதாகும். இது வளர்ச்சிக்கு பல அம்சங்களை அளிக்கும்.

மனித வளர்ச்சி குறியீட்டு எண் தொகு

 
HDI trends
  OECD
  மத்திய and கிழக்கு ஐரோப்பா நாடுகள், மற்றும் பொதுநலவாய நாடுகள்

மனித வளர்ச்சி குறியீட்டு எண் என்பது உலகளாவிய நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அளவீடு ஆகும்.   இது நல்வாழ்வை அளவிடும் ஒரு மேம்பட்ட நிலையான வழிமுறையாகும், குறிப்பாக குழ்ந்தைகளின் நலணில், இதன் மூலம் மனித வளர்ச்சியைப் பெருக்குவது. இந்த குறியீடானது மனித வளர்ச்சியை எளிதாக்கும் முயற்சியாக இருந்தாலும், எந்தவொரு பிற குறியீடையும் விட மனித குறியீடு அளவீடு செயவது மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ளது.

மனித வறுமைகோடு குறியீட்டு எண் தொகு

மனித வளர்ச்சி குறியீட்டு எண் போண்று வறுமைல் அளவீடு செய்யவதற்காக ஐ.நா சபை உருவாக்கிய எண் தான் மனித வறுமைகோடு குறியீட்டு எண். இந்த எண் மூன்று பின்வரும் காரணிகளை கொண்டு அளவீடப்படுகிறது. அதாவது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை, அறிவு மற்றும் தரமான வாழ்க்கை. இந்த எண், மனித வளர்ச்சியிப் பற்றிய பரந்த பார்வையை வழங்குவதோடு, சமூக தவிர்புகளை வெளிப்படுத்த வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றதாக உள்ளது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. Abdulhadi Abba Kyari (2017). Aminu Saleh College of Education, Azare. Human Development இம் மூலத்தில் இருந்து 2018-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180510142353/https://www.facebook.com/abdulhadi.abba.5. 
  2. United Nations Development Programme (1997). Human Development Report 1997. Human Development Report. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-511996-1. https://books.google.com/books?id=0x7VOd6cRj4C&pg=PA15. 
  3. "Human Development". Human Development Reports (UNDP). 22 October 2009. Archived from the original on 15 April 2012.
  4. "World Health Organization- Poverty and Development". 22 October 2009. Archived from the original on 22 October 2008.