மரீ கோல்வின்

மரீ காத்தரீன் கோல்வின் (Marie Catherine Colvin, சனவரி 12, 1956 – பெப்ரவரி 22, 2012)[2] என்பவர் பிரித்தானிய செய்தித்தாளாகிய த சண்டே டைம்சு நிறுவனத்துக்காக 1985 முதல் பணியாற்றிய ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளர். இவர் சிரியாவில் நிகழும் உள்நாட்டு எழுச்சியில் ஓம்சு நகர் முற்றுகையில் இருந்தபொழுது கொல்லப்பட்டார்.

மரீ கோல்வின்
Marie Colvin
பிறப்புமரீ காத்தரீன் கோல்வின்
(1956-01-12)சனவரி 12, 1956
ஓய்சிட்டர் பே, நியூ யார்க்,அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 22, 2012(2012-02-22) (அகவை 56)[1]
ஓம்சு, சிரியா
தேசியம்அமெரிக்கர்
கல்வியேல் பல்கலைக்கழகம்
பணி
  • போர்க்களச் செய்தியாளர்

தொடக்கக் கால வாழ்க்கை தொகு

மரீ காத்தரீன் கோல்வின் ஐக்கிய அமெரிக்காவில், நியூயார்க் மாநிலத்தில், லாங்கு ஐலண்டில், நாசோ வட்டத்தில் உள்ள ஓய்சிட்டர் பே என்னும் இடத்தில் பிறந்தார். அங்கே ஒய்சிட்டர் பே உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்று 1974 இல் தேர்ந்த பிறகு, யேல் பல்கலைக்கழகத்தில் மாந்தவியல் துறையில் படித்து 1978 இல் இளநிலை பட்டம் பெற்றார்[3][4].

பணி தொகு

கோல்வின், யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்ற பின்பு ஓராண்டு கழித்து யுனைட்டடு பிரசு இண்டர்நேசனல் என்னும் நிறுவனத்தின் சார்பாக நியூ யார்க்கு நகரக் காவலர் செய்தியாளராகப் பணியாற்றினார்.[5] 1984 இல் யுனைட்டடு பிரசு இண்டர்நேசனலின் பாரிசு பியூரோவின் தலைவராக 1984 இல் பதவி ஏற்றார். 1985 இல் த சண்டே டைம்சு என்னும் பிரித்தானை செய்தியூடகத்தில் சேர்ந்தார். 1986 முதல் அச் செய்தித்தாளின் நடுகிழக்கு நாடுகள் செய்தியாளராக இருந்தார், பின்னர் 1995 இல் வெளியுறவு செய்தியாளராக இருந்தார். 1986 இல் இவரே இலிபியாவைச் சேர்ந்த மோமார் கடாஃவியை முதன்முதலாக நேர்காணல் கண்டார், அதுவும், அமெரிக்காவின் எல்டொராடோ கேன்யன் (எல்டொராடோ பள்ளத்தாக்கு) எனப் பெயர்சூட்டப்பட்ட படைத்துறை நடவடிக்கையில் இலிபியா மீது குண்டுபோடப்பட்ட பிறகு, கண்டார்[6]. நடுகிழக்கு நாடுகளைப் பற்றிய துறையிலேயே இவர் சிறப்புப் பட்டறிவு கொண்டவர் எனினும், செச்சனியா, கோசவோ, சியரா லியோன், சிம்பாபுவே, இலங்கை போன்ற பல நாடுகளில் நிகழ்ந்த உள்நாட்டுப் போராட்டங்கள் எழுச்சிகளைப் பற்றி செய்தி சேகரித்து எழுதியுள்ளார். இவர் கோசவோவிலும், செச்சனியாவிலும் மிக்வும் துணிவாக (நெஞ்சுறுதியுடன்) செய்தியறிந்து அறிவித்த பணிக்காக அனைத்துலக பெண்கள் ஊடக நிறுவனப் பரிசை வென்றார்.[7][8][9] இவர் பல ஆவணப்படங்களுக்கு வசனம் எழுதி உருவாக்கி இருக்கின்றார் -எடுத்துக்ககட்டாக பிபிசி-யுக்காக எடுத்த, அராபத்து-புனைவுருவுக்கு பின்னே (Arafat:Behind the Myth)[10] இவர் 2005 ஆம் ஆண்டு சாட்சியாக நிற்றல் (Bearing Witness) என்னும் ஆவணப்படத்தில் காட்சியாகியுள்ளார்.

இவர் இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த பொழுது செய்தியாளராகப் பணியாற்றியிருந்தார். இலங்கை அரசப் படையினரின் தாக்குதலில், 2001, ஏப்பிரல் 16 அன்று "RPG" வெடிப்பில் சிதறிய துண்டு ஒன்று கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டதில் இருந்து ஒரு கறுப்புக் கண்மூடி அணிகிறார். இவர் "பத்திரிகையாளர், பத்திரிகையாளர்" என்று கூவியதால் இவர் மீது தாக்குதல் நடந்தது,[11][12][13][14]

தான் ஒரு கண்ணை இழக்க நேர்ந்த தாக்குதலை பிற்பாடு மருத்துவமனையில் இருந்த போது இவ்வாறு விவரித்தார்:

"நான் கீழே விழுந்தவுடன் மறைவிடம் தேடி தரையில் படுத்தபடி நகர ஆரம்பித்தேன். என் மேல் யாரோ நகர்வது தெரிந்தது - என்னைப் பாதுகாக்கவா அல்லது அவரின் பதட்டமா என்று தெரிவில்லை. அப்புறம் நான் தனியானேன் - செடிகளின் பினனால். பத்து யார்டுகள் தள்ளி ஒரு மரம் இருந்தது ஆனால் அது வெகு தொலைவென பட்டது. வெடி வெடித்துக்கொண்டே இருந்தது. பார்க்க இயலாத ஒரு இராணுவக் கம்பமொன்றிலிருந்து வெளிச்சம் வந்த வண்ணம் இருந்தது. அங்கிருந்து வந்த ஒரு தோட்டா என்னைத் தாக்கியது. மிகுந்த வலி, சப்தம் மற்றும் தோல்வியினை என்னுள் செலுத்தியது. என் கண்கள் தாக்கப்பட்டுள்ளன என்று எண்ணினேன். என் விழியிலும் வாயிலும் இருந்து குருதி மண்ணில் வடிந்தது. இறக்கப் போகிறோம் என்பதில் மிகுந்த வருத்தம் அடைந்தேன். தலையில் அடிபட்டால் வெகு நேரம் கழித்தே இறப்பு நேரும் என்று தோன்றியது (என் கண்ணைத் தாக்கியது ஒரு கூரான பொருளாகும்). "ஆங்கிலம்... ஆங்கிலம் யாரேனும் அறிவீரா" என்று சப்தமிடத் தொடங்கினேன். இன்னும் வெடி வெடித்தது. அவை அனைத்தும் அரை மனதுடனேயே நிகழ்த்தப்பட்டன. உணர்ச்சிவயப்பட்டு அந்த ராணுவத்தினரும் கத்திக்கொண்டிருந்தனர். அவர்களும் என்னைப் போலவே பயந்திருந்தனர்." [15]

சிறீலங்காவில் நடந்த போரில் கடைசி நாட்களில் நிகழ்ந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களை கோல்வின் நேரில் பார்த்தவர்களில் ஒருவராவார். இருதரப்புக்கு இடையே இயங்கிய தொடர்பாளராகவும் இருந்தார்.[14]

2011 இல், லிபியாவில் நடந்த உள்நாட்டுப் போரைப் பற்றி அங்கிருந்து செய்தி அறிவித்த போது இவரையும், இவரோடு இருவரையும் முஆம்மர் கடாபி தன்னை நேர்காணல் செய்ய அழைத்திருந்தார். இவருடன் ஏபிசியைச் சேர்ந்த கிறித்தீன் அமான்ப்பூர்[16], பிபிசியைச் சேர்ந்த செரமி போவன் ஆகியோரையும் அழைத்துச் சென்றார்[17].

தனிவாழ்க்கை தொகு

கோல்வின் இருமுறை பத்திரிகையாளர் பாட்ரிக்கு பிசொப்பு என்பவரோடேயே திருமணம் செய்து மணவிலக்கு பெற்றார். பின்னர் பத்திரிகையாளர் உவான் கார்லோசு குமுசியோ என்பவரை மணந்தார், உவான் 2002 இல் தற்கொலை செய்துகொண்டார்[2]. பின்னர் இவர் இங்கிலாந்தில் மேற்கு இலண்டனில் ஆமர்சுமித்து என்ற புறநகரில் வாழ்ந்து வந்தார். இவருக்குக் குழந்தைகள் இல்லை[18].

இறப்பு தொகு

பெப்பிரவரி 2012 இல் கோல்வின், சட்டப்படி இல்லாமல் மோட்டோகிராசு ஈராழி உந்தில் சென்று சிரியா அடைந்தார். அங்கே நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்குச் சிரிய அரசு அனுமதி அளிக்கவில்லை. கோல்வின், சிரியாவின் ஓம்சு நகரத்தின் மேற்கு பாபா அமர் (Baba Amr) என்னும் இடத்தில் இருந்தார். அங்கிருந்தே அவர் செயற்கைத் துணைக்கோள் தொலைபேசிவழி தன் கடைசி செய்தி அலைபரப்பையும் பெப்பிரவரி 21 அன்று பிபிசி, சானல்4, சிஎன்என், ஐடிஎன் நியூசு ஆகியவற்றுக்குத் தந்தார்.[18]

கோல்வினும், பரிசுகள்-வென்ற பிரான்சிய ஒளிப்படக்கலைஞர் இரெமி ஓக்லிக்கும் (Rémi Ochlik) பெப்பிரவரி 22, 2012 அன்று சிரிய அரசின் ஏவுகனைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.[12][19][20] உடன் இருந்த, உயிர் தப்பிய, பத்திரிகையாளர் இழான் பியர் பெரென் கூற்றின்படி, அவர்கள் பயன்படுத்திய செயற்கைக்கோள் தொலைபேசியைக் கொண்டு இடத்தை அறிந்து சிரிய படைத்துறையினரால் தாக்கப்பட்டனர்.[21] பெப்ரவரி 22, 2012 அன்று மாலை ஓம்சு நகர் மக்கள் தெருக்களில் கோல்வின், ஓக்லிக்கு இறந்ததற்கு அஞ்சலி செலுத்துமாறு துக்கம் கடைப்பிடித்தனர்.[22].

2018 இல், கோல்வினின் வாழ்க்கை ஏ பிறைவேட் லைஃப் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ரோசமண்ட் பைக் கோல்வினாக நடித்திருந்தார்.[23][24][25][26][27]

பரிசுகளும் விருதுகளும் தொகு

  • 2000: சிறந்த ஊடகவியலாளர்: Foreign Press Association.
  • 2000: Courage in Journalism: International Women's Media Foundation.
  • 2001: British International Journalist of the Year award|Foreign Reporter of the Year:[[British Press Awards
  • 2010: British International Journalist of the Year award:British Press Awards (second award).

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் தொகு

  1. Nordland, Rod; Cowell, Alan (February 22, 2012). "Two Western Journalists Killed in Syria Shelling". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2012/02/23/world/middleeast/marie-colvin-and-remi-ochlik-journalists-killed-in-syria.html. 
  2. 2.0 2.1 Greenslade, Roy (22 February 2012). "Marie Colvin obituary". Guardian. http://www.guardian.co.uk/media/2012/feb/22/marie-colvin. 
  3. "Journalist Killed in Syria Attended Yale". NBC Connecticut. February 22, 2012. http://www.nbcconnecticut.com/news/local/Journalist-Killed-in-Syria-Attended-Yale--139988613.html. 
  4. "Colvin '78 killed in Syria". Yale Daily News. February 22, 2012 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 6, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130106065811/http://www.yaledailynews.com/news/2012/feb/22/colvin-78-killed-while-covering-syrian-strike/?cross-campus. 
  5. Ricchiardi, Sherry (April 2000). "Highway to the Danger Zone". American Journalism Review இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 23, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120223144924/http://www.ajr.org/article.asp?id=746. பார்த்த நாள்: February 22, 2012. 
  6. Miller, Judith (1997). God has Ninety-Nine Names: Reporting from a Militant Middle East. New York: Simon and Schuster. பக். 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0684832283. https://archive.org/details/godhasninetynine00mill_0. 
  7. "Woman Journalist Gets Her Story: In Spite of Grenade Attack, Marie Colvin Files Her Report" இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 25, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120225055903/http://www.antonnews.com/oysterbayenterprisepilot/2001/04/27/news/colvin.html. பார்த்த நாள்: February 22, 2012. 
  8. Walford, Charles (February 22, 2012). "Veteran Sunday Times journalist Marie Colvin 'killed in heavy shelling in Syria' just hours after broadcast on ITN News At Ten". Mail Online. http://www.dailymail.co.uk/news/article-2104711/Marie-Colvin-dead-Journalist-killed-Homs-Syria-hours-ITN-News-At-Ten-broadcast.html. பார்த்த நாள்: February 22, 2012. 
  9. Spillius, Alex (February 22, 2012). "Marie Colvin killed in Syria: life and times of distinguished war correspondent". த டெயிலி டெலிகிராப். http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/9098180/Marie-Colvin-killed-in-Syria-life-and-times-of-distinguished-war-correspondent.html. பார்த்த நாள்: February 22, 2012. 
  10. Fatima, Nazish (February 22, 2012). "Death of Marie Colvin, American journalist of war" இம் மூலத்தில் இருந்து July 31, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120731202740/http://www.allvoices.com/contributed-news/11570335-death-of-marie-colvin-american-journalist-of-war. பார்த்த நாள்: February 22, 2012. 
  11. Hodgson, Jessica (April 18, 2001). "Sunday Times journalist may lose sight". Guardian. http://www.guardian.co.uk/media/2001/apr/18/sundaytimes.pressandpublishing. 
  12. 12.0 12.1 Wardrop, Murray (February 22, 2012). "Syria: Sunday Times journalist Marie Colvin 'killed in Homs'". த டெயிலி டெலிகிராப். http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/9097762/Syria-Sunday-Times-journalist-Marie-Colvin-killed-in-Homs.html. பார்த்த நாள்: February 22, 2012. 
  13. Walt, Vivienne (February 22, 2012). "Syria: War Reporter Marie Colvin and Photographer Rémi Ochlik Are Killed". டைம். Archived from the original on பிப்ரவரி 22, 2012. பார்க்கப்பட்ட நாள் February 22, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. 14.0 14.1 Colvin, Marie (May 25, 2009). "Slain Tamil chiefs were promised safety". The Australian. பார்க்கப்பட்ட நாள் February 22, 2012.
  15. Charles Walford and Nabila Ramdani (February 23, 2012). "'She wanted one more story': Mother of veteran war reporter Marie Colvin said her daughter was due to leave Syria on SAME DAY she was killed in rocket attack". டெய்லி மெயில். பார்க்கப்பட்ட நாள் February 26, 2012.
  16. Christiane Amanpour (1 March 2011). "Col Gaddafi 'brushed off the international pressure'". ABC News. http://abcnews.go.com/International/christiane-amanpour-interviews-libyas-moammar-gadhafi/story?id=13019942. 
  17. Jeremy Bowen (1 March 2011). "Col Gaddafi 'brushed off the international pressure'". BBC News. http://www.bbc.co.uk/news/world-middle-east-12607475. 
  18. 18.0 18.1 "Veteran American war reporter Marie Colvin killed when Syrian army shells media center just hours after her last TV broadcast". டெய்லி மெயில். February 22, 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-02-22.
  19. "'Foreign journalists killed' in Homs shelling". Al Jazeera. February 22, 2012. http://www.aljazeera.com/news/middleeast/2012/02/201222291445322238.html. பார்த்த நாள்: February 22, 2012. 
  20. "Veteran war reporter Marie Colvin killed in Syria". சேனல் 4. February 22, 2012. http://www.channel4.com/news/veteran-war-reporter-marie-colvin-killed-in-syria. பார்த்த நாள்: February 22, 2012. 
  21. "Marie Colvin: Britain summons Syria ambassador over killing". The Telegraph. February 22, 2012. http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/9098511/Marie-Colvin-Britain-summons-Syria-ambassador-over-killing.html. பார்த்த நாள்: February 22, 2012. 
  22. யூடியூபில் حمص القصور مسائية 22-2-2012
  23. Carey, Matthew (December 22, 2017). "Director Matthew Heineman On His Oscar-Shortlisted Doc 'City Of Ghosts': "The Hardest Film I've Made By Far"". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் April 30, 2018. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  24. Galuppo, Mia (November 21, 2017). "Tom Hollander Joins Rosamund Pike in 'A Private War'". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் April 30, 2018. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  25. N'Duka, Amanda (November 21, 2017). "Tom Hollander Enlists In 'A Private War'". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் April 30, 2018. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  26. Mudano, Mike (January 18, 2018). "Stanley Tucci Joins Rosamund Pike in Forthcoming Biopic A Private War". Paste. பார்க்கப்பட்ட நாள் April 30, 2018. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  27. Brenner, Marie (August 2012). "Marie Colvin's Private War". vanityfair.com. பார்க்கப்பட்ட நாள் 2 November 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரீ_கோல்வின்&oldid=3582722" இலிருந்து மீள்விக்கப்பட்டது