மறைப்பணியாளர்

மறைப்பணி செய்ய அனுப்பப்பட்ட ஒரு மதக் குழுவின் உறுப்பினர்

மறைப்பணியாளர் (missionary) என்பவர் ஒரு சமயத்தின் நம்பிக்கைகளைப் பரப்புரை செய்வதற்காகவும், கல்வி, எழுத்தறிவு, சமூக நீதி, சுகாதாரப் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு போன்ற திருப்பணிச் சேவைகளுக்காகவும் நாடொன்றுக்கோ அல்லது ஒரு பிரதேசத்திற்கோ அனுப்பப்படும் ஒரு மதக்குழு உறுப்பினரைக் குறிக்கும்.[1][2]

1890-இல் இலங்கையில் அமெரிக்க மறைப்பணியாளர்கள்.

விவிலியத்தின் இலத்தீன் மொழிபெயர்ப்பில், இயேசு கிறிஸ்து தனது பெயரில் நற்செய்திகளைப் பிரசங்கிக்க சீடர்களை அனுப்பும்போது இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார். இச்சொல் பொதுவாக கிறிஸ்தவப் பணிக்காகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் எந்தச் சமயத்திற்கும் அல்லது சித்தாந்தத்திற்கும் இச்சொல்லைப் பயன்படுத்தப்படலாம்.[3]

1598 ஆம் ஆண்டு முதல் இயேசு சபை தனது உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியபோது, இலத்தீன் சொல்லான missionem ("மிசியோ" என்றால் 'அனுப்பும் செயல்') அல்லது மிட்டேர் mittere, 'அனுப்புதல்' என்று பொருளில் 'மிசனரி' என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள்.[4]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Missionary | Define Missionary at Dictionary.com. Dictionary.reference.com. Retrieved on 2019-05-16.
  2. Thomas Hale 'On Being a Missionary' 2003, William Carey Library Pub, ISBN 0-87808-255-7
  3. பௌத்தம் "உலக சமயங்களின் வரலாற்றில் முதல் பெரிய அளவிலான மறைப்பரப்பு முயற்சியை" கிமு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. (Richard Foltz, Religions of the Silk Road, Palgrave Macmillan, 2nd edition, 2010, p. 37 ISBN 978-0-230-62125-1)
  4. Online Etymology Dictionary. Etymonline.com. Retrieved on 2011-01-19.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைப்பணியாளர்&oldid=3627030" இலிருந்து மீள்விக்கப்பட்டது