மலாய் தீவுக்கூட்டம்

மலாய் தீவுக்கூட்டம் (Malay Archipelago, மலாய்: Kepulauan Melayu அல்லது Nusantara, இந்தோனேசிய மொழி: Kepulauan Melayu ) பெருநிலத் தென்கிழக்காசியாவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையேயான தீவுக்கூட்டம் ஆகும். இது மலாய் உலகம், இந்தோ-ஆத்திரேலியத் தீவுக்கூட்டம், கிழக்கிந்தியத் தீவுகள் எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. 19ஆவது நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் மலாய் இனத்தினரைக் குறித்து கொண்டிருந்த கருத்தியல்படி இப்பெயர் இடப்பட்டுள்ளது.[2]

மலாய் தீவுக்கூட்டம்
மலாய் தீவுக்கூட்டத்தை உலக நிலப்படத்தில் எடுப்பாய் காட்டப்பட்டுள்ளது. புது கினியாவும்—சில வரையறுப்புகளில் மலாய் தீவுக்கூட்டத்தில் சேர்க்கப்படுவதில்லை—சேர்க்கப்பட்டுள்ளது.
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா, ஓசியானியா
மொத்தத் தீவுகள்25,000
முக்கிய தீவுகள்மலாய் தீபகற்பம், போர்னியோ, சாவகம் (தீவு), லூசோன், மிண்டனாவோ, நியூ கினி, சுலாவெசி, சுமாத்திரா
பரப்பளவு2,000,000 km2 (770,000 sq mi)[1]
நிர்வாகம்
பெரிய குடியிருப்புபண்டர் செரி பெகாவான்
பெரிய குடியிருப்புடிலி
Largest settlementஜகார்த்தா
Largest settlementகோலாலம்பூர்
Largest settlementமார்சுபி துறைமுகம்
பெரிய குடியிருப்புமணிலா
Largest settlementசிங்கப்பூர்
மக்கள்
மக்கள்தொகை380,000,000 [3]
இனக்குழுக்கள்ஆஸ்திரோனேசியர்கள், மலாய் இனத்தினர், வெளிநாடுவாழ் சீனர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள்

இந்திய, அமைதிப் பெருங்கடல்களுக்கிடையே அமைந்துள்ள 25,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இத்தீவுக்குழுமம் இப்பகுதியின் மிகப்பெரும் தீவுக்கூட்டமாகவிளங்குகின்றது; உலகின் மிகுந்த தீவுகளை உடைய தீவுக்கூட்டங்களில் தீவுகளின் எண்ணிக்கையின்படி நான்காவதாக உள்ளது. புரூணை, கிழக்கு மலேசியா, கிழக்குத் திமோர், இந்தோனேசியா, சிங்கப்பூர், மற்றும் பிலிப்பீன்சு நாட்டுத் தீவுகளை உள்ளடக்கியுள்ளது.[4] பொதுவாக மலாய் தீவுக்கூட்ட வரையறுப்புகளில் நியூ கினி விலக்கப்பட்டாலும் இந்தோனேசியாவைச் சேர்ந்த, தீவின் மேற்குப் பகுதி சேர்க்கப்படுகின்றது.[4] இந்த வரையறுப்பு பெரிதும் கடல்சார் தென்கிழக்காசியாவுடன் இயைந்துள்ளது.[5]

சொற்தோற்றமும் கலைச்சொற்களும் தொகு

இந்தப் பெயர் மலாய் இனத்தவர் குறித்த ஐரோப்பியக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது.[2] ஐரோப்பியர்கள் தற்கால புரூணை, கிழக்குத் திமோர், (மேற்கு நியூ கினியா தவிர்த்த) இந்தோனேசியா , மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பீன்சு நாட்டு மக்களை மலாய் இனத்தவர் எனக் குறிப்பிட்டனர். சுமாத்திராவில் நிலைபெற்றிருந்த மலாய் இனப் பேரரசான சிறீவிஜயத்தின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய நாடுகாண் பயணிகள் இத்தகைய இனஞ்சார்ந்த கருத்தியலை முன்வைத்திருந்தனர்.[6]

19ஆவது-நூற்றாண்டு இயற்கை அறிவியலாளர் ஆல்ஃவிரடு வாலேசு இப்பகுதி குறித்த தனது தாக்கம் மிகுந்த ஆய்வு நூலிற்கு "மலாய் தீவுக்கூட்டம்" என்ற தலைப்பிட்டார். வாலேசு இப்பகுதியை "இந்தியத் தீவுக்கூட்டம்" என்றும் "இந்தோ-ஆத்திரேலிய" தீவுக்கூட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.[7] அவற்றின் இயல்வரைவை ஒட்டி சொலமன் தீவுகளையும் மலாய் தீபகற்பத்தையும் இந்தப் பகுதியில் சேர்த்திருந்தார்.[7] வாலேசின் குறிப்பின்படி,[8] பப்புவா நியூ கினியை விலக்குவதற்கு பண்பாட்டு, புவியியல் காரணங்கள் இருப்பதாகக் கூறினார்: இப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள பிற நாடுகளின் பண்பாட்டை விட பப்புவா நியூகினியின் பண்பாடு மாறானது. சுந்தா கண்டத் திட்டு தீவுகள் போலன்றி நியூ கினி புவியியல்படி ஆசியக் கண்டத்தில் இல்லை; (பார்க்க ஆத்திரேலியா).

16ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஐரோப்பிய குடியேற்றக் காலத்தில் இத்தீவுக்கூட்டம் "கிழக்கிந்தியா"[9] எனப்பட்டது. இப்போதும் சிலநேரங்களில் அவ்வாறே குறிப்பிடப்பட்டாலும்,[4] "கிழக்கிந்தியா" என்பதன் விரிவான பயன்பாடாக இந்தோசீனாவும் இந்தியத் துணைக்கண்டமும் சேர்க்கப்படுகின்றன. இந்தப் பகுதி இந்தோனேசிய மொழியில் "நுசான்தரா" எனப்படுகின்றது.[10] தவிரவும் இப்பகுதி "இந்தோனேசியத் தீவுக்கூட்டம்" என்றும் குறிப்பிடப்படுகின்றது.[11][12] "கடல்சார் தென்கிழக்காசியா" என்ற சொல் இதே பொருளுடையது; தென்கிழக்காசியாவின் தீவுகளையும் மலாய் தீபகற்பத்தில் காணப்படும் தீவினர் போன்ற சமூகங்களையும் உள்ளடக்கியது.[13]

புவியியல் தொகு

இத்தீவுக்கூட்டத்தின் கடல் பகுதியும் நிலப்பகுதியும் சேர்ந்த பரப்பளவு 2 மில்லியன் கிமீ2க்கும் கூடுதலானது.[1] The more than 25,000க்கும் கூடுதலான இத்தீவுக்கூட்டத்தில் பல சிறு தீவுத்தொகுதிகளும் அடங்கியுள்ளன.[14][15][16]

பெரும் குழுமங்களாக உள்ளவை:

நியூ கினி, போர்னியோ, சுமாத்திரா, சுலாவெசி, சாவகம், லூசோன் ஆகியன ஆறு மிகப் பெரும் தீவுகளாகும்.

புவியியலில் உலகின் மிகவும் துடிப்பான எரிமலை வலயங்கள் இங்குள்ளன. புவித்தட்டு மேல்நோக்கி நகர்தலால் மலேசியாவின் சபாவிலுள்ள 4,095.2 மூ உயரமுள்ள சிகரமான கினபாலு மலை, இந்தோனேசிய பப்புவாவிலுள்ள 4,884 m (16,024 அடி) உயரமுள்ள புன்காக் ஜெயா போன்ற பெரிய மலைகள் உருவாகியுள்ளன. இத்தீவுக்கூட்டத்தில் உள்ள மற்ற உயர்ந்த மலைகள் இந்தோனேசியாவின் 4,760 m (15,617 அடி) உயரமுள்ள புன்காக் மண்டாலாவும் 4,750 m (15,584 அடி) உயரமுள்ள புன்காக் டிரைக்கோராவும் ஆகும்.

நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால் இத்தீவுக்கூட்டம் முழுவதிலும் வெப்பமண்டல வானிலை நிலவுகின்றது.

இதனையும் காண்க தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Eldridge M. Moores; Rhodes Fairbridge (1997). Encyclopedia of European and Asian regional geology. Springer. பக். 377. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-412-74040-0. http://books.google.com/?id=aYRup5mRcGsC&pg=PA377&dq=%22malay+archipelago%22+2+million+km%C2%B2#v=onepage&q=. பார்த்த நாள்: 30 November 2009. 
  2. 2.0 2.1 2.2 Alfred Russel Wallace (1869). The Malay Archipelago. London: Macmillan and Co. பக். 1. https://archive.org/details/in.ernet.dli.2015.55221. 
  3. Department of Economic and Social Affairs Population Division (2006) (பி.டி.எவ்). World Population Prospects, Table A.2. 2006 revision. United Nations. பக். 37–42. http://www.un.org/esa/population/publications/wpp2006/WPP2006_Highlights_rev.pdf. பார்த்த நாள்: 2007-06-30. 
  4. 4.0 4.1 4.2 பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2006. Chicago: Encyclopædia Britannica, Inc.
  5. "Maritime Southeast Asia பரணிடப்பட்டது 2007-06-13 at the வந்தவழி இயந்திரம்." Worldworx Travel. Accessed 26 May 2009.
  6. Reid, Anthony. Understanding Melayu (Malay) as a Source of Diverse Modern Identities. Origins of Malayness, Cambridge University Press, 2001. Retrieved on March 2, 2009.
  7. 7.0 7.1 Wallace, Alfred Russel (1863). "On the Physical Geography of the Malay Archipelago". Archived from the original on 17 சனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 30 November 2009.; Alfred Russel Wallace (1869). The Malay Archipelago. London: Macmillan and Co. பக். 2. https://archive.org/details/in.ernet.dli.2015.55221. 
  8. http://www.papuaweb.org/dlib/bk/wallace/race.html பரணிடப்பட்டது 2012-10-16 at the வந்தவழி இயந்திரம்

    "If we draw a line ... commencing along the western coast of Gilolo, through the island of Bouru, and curving round the west end of Mores, then bending back by Sandalwood Island to take in Rotti, we shall divide the Archipelago into two portions, the races of which have strongly marked distinctive peculiarities. This line will separate the Malayan and all the Asiatic races, from the Papuans and all that inhabit the Pacific; and though along the line of junction intermigration and commixture have taken place, yet the division is on the whole almost as well defined and strongly contrasted, as is the corresponding zoological division of the Archipelago, into an Indo-Malayan and Austro-Malayan region."

  9. ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி முதல் பதிப்பு இந்தோசுத்தான், தொலை இந்தியா, அதற்கும் கடந்த தீவுகள் அடக்கிய புவியியற் சொல் முதலில் 1598இல் பயன்படுத்தப்பட்டது
  10. Echols, John M.; Shadily, Hassan (1989). Kamus Indonesia Inggris (An Indonesian-English Dictionary) (6th ). Jakarta: Gramedia. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:979-403-756-7. ; Eldridge M. Moores; Rhodes Fairbridge (1997). Encyclopedia of European and Asian regional geology. Springer. பக். 377. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-412-74040-0. http://books.google.com/?id=aYRup5mRcGsC&pg=PA377&dq=%22malay+archipelago%22+2+million+km%C2%B2#v=onepage&q=. பார்த்த நாள்: 30 November 2009. 
  11. Friedhelm Göltenboth (2006) Ecology of insular Southeast Asia: the Indonesian Archipelago Elsevier, ISBN 0-444-52739-7, ISBN 978-0-444-52739-4
  12. Modern Quaternary Research in Southeast Asia, Volume 1
  13. Shaffer, Lynda (1996). Maritime Southeast Asia to 1500. M.E. Sharpe. பக். xi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56324-144-7. http://books.google.com.au/books?id=X58tqsLz0dIC&printsec=frontcover&dq=Maritime+Southeast+Asia+to+1500#v=onepage&q=&f=false. 
  14. Philippines : General Information. Government of the Philippines. Retrieved 2009-11-06
  15. அனைத்துலக நாணய நிதியம்(April 2006). "World Economic Outlook Database". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2006-10-05.
  16. "Indonesia Regions". Indonesia Business Directory. பார்க்கப்பட்ட நாள் 2007-04-24.

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாய்_தீவுக்கூட்டம்&oldid=3918994" இலிருந்து மீள்விக்கப்பட்டது