மலாய் மக்களின் நாட்டுப்புறவியல்

மலாய் நாட்டுப்புறவியல் (Malay folklore) என்பது கடல்சார் தென்கிழக்காசியாவில் வாழும் அம்மண்ணின் மக்களின் இடையே வழிவழியாக சந்ததி சந்ததியாக வழங்கப்படும் வாய் வழிs சொல்லாக அல்லது எழுதப்பட்ட அல்லது குறியீட்டு வடிவில் வரும் தொடர்ச்சியான பாரம்பரியம் குறித்த அறிவு ஆகும். இது குறிப்பிட்ட இனமாகிய மலாய் மக்கள் அல்லது அப்பகுதியில் உள்ள அவர்களுக்கு தொடர்பான மலாய் மக்களைக் குறித்ததான கருத்துக்கள் அல்லது அவர்களை குறித்த அறிவு தொடர்புடையதாகும்.

சிங்கப்பூரில் பாரம்பரிய மலாய் குணப்படுத்துபவர், 1890

இந்த அமைப்பில் உள்ள நாட்டுப்புறவியலில் காணப்படும் கதைகளானது மலாய் புராணங்களின் ஒரு பகுதியான இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீகp பொருட்கள் மற்றும் மாய உருவங்களை அடிக்கடி உள்ளடக்கி எழுதப்படுகிறது. மற்றவைகள் படைப்பு புராணங்கள்,வரலாற்று மனிதர்கள் மற்றும் நிகழ்ச்சிகளோடு தொடர்புடைய இடங்களின் பெயர்களுக்கான மரபுக்கதைகள் உடையதாகும். குணப்படுத்த கூடிய பழங்கால சடங்குகள், பாரம்பரிய மருந்துகள் மற்றும் சிக்கலான ஆரோக்கியம் மற்றும் மருந்து தொடர்புரடைய தத்துவங்களும் கூட இவற்றில் காணப்படும்.

வாய்வழிப் பாரம்பரியம் தொகு

நாட்டுப்புறவியலின் பாரம்பரியம் ஆனது அநேக வேளைகளில் பெற்றோர் பொதுவாகத் தங்கள் குழந்தைகளுக்குக் கூறிய குழந்தைப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், திரையரங்கக் காட்சிகள் மற்றும் கதைகள் மூலம் பரப்பப்பட்டது. கோயில்கள், சந்தைகள் மற்றும் அரண்மனை வளாகங்களில் சுற்றித் திரியும் நாடோடி கதைசொல்லிகள் தங்கள் வாய்வழிச் சொற்கள் மூலமாக இந்தப் பாரம்பரியமான நாட்டுபுறவியல் ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு செல்ல முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் தாங்களே எழுதி வடிவமைத்த கவிதைகள் மற்றும் உரைநடைகள் வாயிலாக இதை பரப்பினர். இந்த நாட்டுப்புற பாடல்கள் மற்றும் உரைநடைகள் அநேக வேளைகளில் தார்மீக கருத்துகளைக் கொண்டதாக இருந்தது. மற்றும் சில கதைகள் விலங்குகள் பேசுவன போல காண்பிக்கப் பட்டுள்ளது.

நாடோடிப் பாடல்கள் தொகு

வாய்வழியாக பரப்பப்பட்ட நாட்டு புறவியலில் மற்ற எல்லா வடிவங்களைக் காட்டிலும் நாட்டுப் புற இசை மலாய் சமூகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. பழங்காலங்களில் பாடப்படும் பாடல்கள் மற்றும் இன்னிசைகள் மறுபடி மறுபடி திருமணம், மகப்பேறு மற்றும் குழந்தைப் பிறப்பு, பக்தியை வெளிப்படுத்தும் சடங்குகள் மேலும் சமூதாய மற்றும் மதம் சார்ந்த விழாக்களில் பாடப்பட்டு வருகின்றது. இவைகள் அரசத் திருமணங்கள், அரசரின் பட்டமளிப்பு விழா மற்றும் அரச பிறந்த நாள் விழாக்கள் போன்றவற்றில் அவ்வப்போது மாற்றப்பட்ட பதிப்பாக பாடப்பட்டு வந்தது.

ஒவ்வாரு பகுதியும் அல்லது மாவட்டமும் அவற்றிற்கான வாய்வழிப் பரப்புரைகளைக் கொண்டு இருந்தாலும் லாகு ராக்கியாட் (lagu rakyat) என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப் பாடலே இந்த நாட்டுப்புற வாய்மொழிப் பரப்புரையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய கிழக்குப் பகுதிகளின் தாக்கத்துக்கு உள்ளான காசல் தெற்கு மலேசிய மாநிலமாகிய சொகூர் முக்கியமாக மூவார் பகுதியில் பாடப்பட்டு வருகிறது. கவிஞர்களும் பாடகர்களும் பொதுவாக பெண்களே சிலவேளைகளில் ஆண்களும் சில பிரபலமான காதல் கவிதைகள் மற்றும் விடுகதைகளைப் பாடுவது உண்டு. இவைகள் பொதுவாக மலாய் கவிதை வடிவான பான்டன் எனும் வடிவில் இருக்கும். இந்த பான்டன் ஆனது ஆறு நாண்களைக் கொண்ட அரேபிய நாட்டு லூட், இந்திய தபேலா, மேற்கத்திய நாடுகளின் வயலின், துருத்தி வகை அக்கார்டியன், மற்றும் ஒலி உண்டாக்கும் மராக்கா எனும் கிலுகிலுப்பை போன்ற இசைக்கருவிகளுக்காக உருவாக்கப்பட்ட இசை வடிவ கவிதை ஆகும். [1]

குழந்தைப் பாடல்கள் மற்றும் தாலாட்டு போன்ற பாடல்கள் மலாய் மக்கள் மலாக்கா மாநிலத்திலும் மற்றும் மலாய் மொழி பேசும் பேரன்கான் மக்களிடையே நடைபெறும் திருமணங்கள் மற்றும் பண்பாட்டு விழாக்களிலும் பாடப்பட்டு வருகிறது. இப்பாடல்களின் பொருளடக்கம் பொதுவாக காதல் குறித்ததான ஆலோசனை, வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்ததாக இருக்கும். இப்பாடல்கள் அன்போடு "காதல் பாடல்கள்" என்று அர்த்தம் கொள்ளும் வகையில் டொன்டாங் சயாங் என்று அழைக்கப் படுகிறது

இந்த நாட்டுப்புற பாடல்களில் கருத்துகளும் கதைகளும் சொல்லப்படுகின்றன. இது ஒருவகையான முறைசாரா வகையில் பெரியவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் அனுபவம் மற்றும் அறிவு வாய்வழி மூலமாக கவிதை வடிவில் கடத்தப்படுகிறது.

  • பான்டன் – நான்கு பத்திகள் கொண்ட கவிதை, அவைகளில் இரண்டு பத்திகள் ஒன்றொடொன்று எதுகை யோடு காணப்படும்
  • சியேர் – நான்கு பத்திகள் கொண்ட கவிதைதான், எல்லாவற்றின் முடிவும் எதுகையோடு இருக்கும்
  • செலொகா– கவிதை, பான்டன் ஐ போன்றே இருக்கும்
  • மடா – ஒரு வகை எதுகை மோனயோடு உள்ள பேச்சு, கவிதை வழி உரைக்கோவை சொல்லாடல்
  • குரிண்டம் – கவிதை, இசையோடு இணைந்தது

நாட்டுப்புற பாடல்கள் தொகு

மலாய் வாய்வழி செய்திகள் மூலம் உருவான பண்பாட்டில் நாட்டுப்புற பாடல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பாடல்களில் கதைகள், கவிதைகள் மற்றும் மழலைக் கவிதைகளோடு பிணைக்கப்பட்டு இருக்கும். இந்நாட்டுப்புற பாடல்கள் தொடர்ந்து பாடப்பட்டு வருகின்றன. மேலும் இவற்றில் அநேக பாடல்கள் நவீன கால பாடல் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கு ஏற்ற வகையில் இவைகளின் இசை மற்றும் வரிகள் மாற்றப்பட்டு சிக்கலான இசை வடிவம் கொடுக்கப்பட்டு பெரும் இசைக் கலைஞர்களும் பாடகர்களும் பாடும் வகையில் இவற்றின் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Moore, Wendy. 1995. This is Malaysia. New Holland Publishers.
  • Werner, Roland. 2002. Royal Healer. Royal Asiatic Society.

வெளி இணைப்புகள் தொகு