மான்செஸ்டர் குண்டுவெடிப்பு 2017

குண்டுவெடிப்பு நிகழ்வு

ஐக்கிய இராஜ்ஜியத்தின் மான்செஸ்டர் நகரில் இசைக்கச்சேரி நடந்த மான்செஸ்டர் அரீனா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 59 பேர் காயமடைந்தனர்.

குண்டு வெடிப்பு நடந்த இடம்.
மான்செஸ்டர் குண்டுவெடிப்பு 2017
மான்செஸ்டர் அரீனா 2010
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/United Kingdom Greater Manchester" does not exist.
நாள்22 மே 2017 (2017-05-22)
நேரம்22:33 ஐக்கிய ராஜிய கோடைகால நேரம் (சர்வதேச நேரம்+0100) [1]
இடம்மான்செஸ்டர் அரீனா
அமைவிடம்மான்செஸ்டர், ஐக்கிய இராஜ்ஜியம்
புவியியல் ஆள்கூற்று53°29′10.19″N 2°14′22.80″W / 53.4861639°N 2.2396667°W / 53.4861639; -2.2396667
வகைவெடிகுண்டு
இறப்புகள்22
காயமுற்றோர்~59

தாக்குதல் தொகு

22 மே, 2017 அன்று உள்ளூர் நேரப்படி 22:33 மணியளவில் 21,000 பார்வையாளர்களைக் கொண்ட இசைக்கச்சேரி முடிந்ததும் நடந்த இத்தாக்குதல் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என சந்தேகிக்கப்படுகிறது.[2]

பாதிக்கப்பட்டோர் தொகு

இத்தாக்குதலில் பொதுமக்கள் 22 மற்றும் தாக்குதல்தாரி ஒருவர் உட்பட 23 பேர் மரணமடைந்தனர். பொதுமக்களில் குழந்தைகள் உட்பட 59 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல்தாரி தொகு

இத்தாக்குதலை நடத்தியவர் லிபிய வம்சாவளியைச் சார்ந்த சல்மான் அபிடி (Salman Abedi), 22 வயதுடைய இவர் ஐக்கிய இராஜ்ஜியத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். தாக்குதல்தாரி தற்கொலைக் குண்டை வெடிக்கச் செய்ததின் மூலம் தனியாக இத்தாக்குதலை மேற்கொண்டார் என காவல்துறை தெரிவித்தது.[3]

பின் நிகழ்வுகள் தொகு

இக்குண்டுவெடிப்பை தீவிரவாதச் செயலாகக் கருதுவதாக காவலர்கள் தெரிவித்தனர். 7 ஜீலை 2005 ம் ஆண்டிற்குப் பின்னர் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகள் இத்தாக்குதலைத் தீவிரவாதத் தாக்குதலாகக் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.[4][5][6] தாக்குதல் நடந்த இடத்தின் அருகிலுள்ள மான்செஸ்டர் விக்டோரியா தொடருந்து நிலையம் அதன் சேவைகளை ரத்து செய்து, பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் உடனடியாக மூடப்பட்டது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Latest statement on incident at Manchester Arena". Greater Manchester Police. 23 May 2017. பார்க்கப்பட்ட நாள் 23 May 2017.
  2. "பிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 19 பேர் பலி". பிபிஸி. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2017.
  3. "Manchester Arena attack: 22 dead and 59 hurt". BBC News. 23 May 2017. http://www.bbc.co.uk/news/uk-england-manchester-40010124. பார்த்த நாள்: 23 May 2017. 
  4. Smith, Rory; Chan, Sewell (23 May 2017). "Explosion, Panic and Death at Ariana Grande Concert in England". The New York Times. https://www.nytimes.com/2017/05/22/world/europe/ariana-grande-manchester-police.html. 
  5. "At least 19 killed in blast at Ariana Grande concert in British arena". Reuters. 23 May 2017. http://www.reuters.com/article/us-britain-security-manchester-idUSKBN18I2OP. 
  6. CNBC (22 May 2017). "19 dead in possible suicide blast at Ariana Grande UK concert". CNBC. பார்க்கப்பட்ட நாள் 23 May 2017.
  7. "22 dead, 59 injured after reports of explosion at Ariana Grande concert at Manchester Arena: Police". ஏபிஸி நியூஸ். பார்க்கப்பட்ட நாள் 23 மே 2017.