புக்கர் பரிசு

(மான் புக்கர் பரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புக்கர் பரிசு (Booker Prize, முன்னர் புனைவுகளுக்கான புக்கர் பரிசு (1969–2001), மான் புக்கர் பரிசு (2002–2019)) என்பது ஆங்கில மொழியில் எழுதப்பட்டு ஐக்கிய இராச்சியம் அல்லது அயர்லாந்து நாடுகளில் வெளியிடப்பட்ட சிறந்த முழுநீளப் புதினங்களுக்கு வழங்கப்படும் ஓர் இலக்கியப் பரிசாகும். புக்கர் பரிசை வென்றவர் பொதுவாக விற்பனையை அதிகரிக்கும் ஒரு பன்னாட்டு விளம்பரத்தைப் பெறுகிறார்.[1] இப்பரிசு முதன் முதலாக தோற்றுவிக்கப்பட்ட போது, இது பொதுநலவாய நாடுகள், அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா (பின்னர் சிம்பாப்வே) நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இப்பரிசைப் பெறத் தகுதி பெற்றிருந்தனர்; 2014 ஆம் ஆண்டில், இது எந்த ஆங்கில மொழிப் புதினமாகவும் விரிவுபடுத்தப்பட்டது.[2] எழுத்தாளர்கள், நூலகர்கள், இலக்கிய முகவர்கள், வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் ஆகியோரால் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழு புக்கர் பரிசு அறக்கட்டளையால் நியமிக்கப்பட்டுள்ளது.

புக்கர் பரிசு
The Booker Prize
விருது வழங்குவதற்கான காரணம்ஆங்கில மொழியில் எழுதப்பட்ட சிறந்த புதினம்
Locationஇலண்டன், இங்கிலாந்து
நாடுஐக்கிய இராச்சியம் Edit on Wikidata
வழங்குபவர்
  • புக்கர் குழுமம் (1969–2001)
  • மான் குழுமம் (2002–2019)
  • கிராங்க்சுடார்ட் (2019 முதல்)
வெகுமதி(கள்)£50,000
முதலில் வழங்கப்பட்டது1969; 55 ஆண்டுகளுக்கு முன்னர் (1969)
இணையதளம்www.thebookerprizes.com

பிரித்தானியப் பண்பாட்டின் ஓர் உயர்ந்த இலக்கிய விருதான புக்கர் பரிசு மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்கப்படுகிறது.[3] குறுகிய பட்டியலில் சேர்க்க அல்லது "நீண்டபட்டியலுக்கு" பரிந்துரைக்கப்படுவதற்கு புதின ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு தனிச்சிறப்புக் குறி என்று இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.[1]

இப்பரிசுடன் இணைந்ததாக பன்னாட்டு புக்கர் பரிசு ஆங்கில மொழிக்கு பொழிபெயர்க்கப்பட்டு ஐக்கிய இராச்சியம் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்பட்ட புதினத்துக்கு வழங்கப்படுகிறது.[4]


பின்னணி தொகு

அறுபதுகளின் இறுதியில், ஜொனதன் கேப் (Jonathan Cape) என்னும் பிரித்தானியப் பதிப்பகத்தைச் சேர்ந்த டொம் மாஸ்ச்லெர் (Tom Maschler) என்பவர், அக்காலத்தில் நூல் வெளியீடுகள் மூலம் நிறைந்த வருமானம் பெற்றுவந்த புக்கர் பிரதர்ஸ் என்னும் நிறுவனத்தை அணுகி, எழுத்தாளர்களுக்கான பரிசொன்றை நிறுவுவதற்கு இசையச் செய்தார். ஆரம்பத்தில் இது புக்கர்-மக்கொன்னெல் பரிசு என வழங்கப்பட்டது எனினும் பொதுவில் புக்கர் பரிசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டில் இப் பரிசுக்கான பொறுப்பை, மான் குரூப் என்னும் நிதி முதலீட்டு நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டது. எனினும், புக்கர் என்னும் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பிய அவர்கள், பரிசின் பெயரை புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு என மாற்றினர்.

முன்னர் £21,000 ஆக இருந்த பரிசுத்தொகை, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் £50,000 ஆக உயர்த்தப்பட்டது.

வெற்றியாளர்கள் தொகு

ஆண்டு நூலாசிரியர் தலைப்பு வகை நாடு
1969 பி. எச். நியூபி[5] Something to Answer For புதினம் ஐக்கிய இராச்சியம்
1970 பெர்னிசு ரூபென்சு[6] The Elected Member புதினம் ஐக்கிய இராச்சியம்
1971 வி. சூ. நைப்பால்[7] In a Free State புதினம் ஐக்கிய இராச்சியம்
டிரினிடாட் மற்றும் டொபாகோ
1972 யோன் பெர்கர்[8] G. பரிசோதனைப் புதினம் ஐக்கிய இராச்சியம்
1973 ஜே. ஜி. பாரெல்[9] The Siege of Krishnapur புதினம் ஐக்கிய இராச்சியம்
அயர்லாந்து
1974 நாடின் கார்டிமர்[10] The Conservationist புதினம் தென்னாப்பிரிக்கா
இசுடான்லி மிடில்ட்டன்[11] Holiday புதினம் ஐக்கிய இராச்சியம்
1975 ரூத் பிராவர் ஜாப்வாலா Heat and Dust வரலாற்றுப் புதினம் ஐக்கிய இராச்சியம்
செருமனி
1976 டேவிட் இசுட்டோரி[12] Saville புதினம் ஐக்கிய இராச்சியம்
1977 பவுல் இசுக்கொட்[13] Staying On புதினம் ஐக்கிய இராச்சியம்
1978 ஐரிசு மெர்டொக்[14] The Sea, the Sea மெய்யியல் புதினம் ஐக்கிய இராச்சியம்
அயர்லாந்து
1979 பெனிலோப் பிட்சுசெரால்டு[15] Offshore புதினம் ஐக்கிய இராச்சியம்
1980 வில்லியம் கோல்டிங்[16] Rites of Passage புதினம் ஐக்கிய இராச்சியம்
1981 சல்மான் ருஷ்டி[17] Midnight's Children மந்திர யதார்த்தவாதம் ஐக்கிய இராச்சியம்
1982 தாமஸ் கெநீலி[18] Schindler's Ark சுயசரிதப் புதினம் ஆத்திரேலியா
1983 ஜே. எம். கோட்ஸி[19] Life & Times of Michael K புதினம் தென்னாப்பிரிக்கா
1984 அனித்தா புரூக்னர்[20] Hotel du Lac புதினம் ஐக்கிய இராச்சியம்
1985 கெரி ஊல்மே[21] The Bone People மர்மப் புனைவு நியூசிலாந்து
1986 கிங்சுலி ஆமிசு[22] The Old Devils நகைச்சுவைப் புதினம் ஐக்கிய இராச்சியம்
1987 பெனிலோப் லைவ்லி[23] Moon Tiger புதினம் ஐக்கிய இராச்சியம்
1988 பீட்டர் கேரி[24] Oscar and Lucinda வரலாற்றுப் புதினம் ஆத்திரேலியா
1989 கசுவோ இசுகுரோ[25] The Remains of the Day வரலாற்றுப் புதினம் ஐக்கிய இராச்சியம்
1990 ஏ. எசு. பயாட் Possession வரலாற்றுப் புதினம் ஐக்கிய இராச்சியம்
1991 பென் ஒக்ரி[26] The Famished Road மந்திர யதார்த்தவாதம் நைஜீரியா
1992 மைக்கேல் ஒண்டாச்சி[27] The English Patient வரலாற்றுப் புதினம் கனடா
பாரி அன்சுவர்த்[28] Sacred Hunger வரலாற்றுப் புதினம் ஐக்கிய இராச்சியம்
1993 ரொடி டொயில் Paddy Clarke Ha Ha Ha புதினம் அயர்லாந்து
1994 யேம்சு கெல்மன்[29] How Late It Was, How Late புதினம் ஐக்கிய இராச்சியம்
1995 பாட் பார்க்கர்[30] The Ghost Road போர் புனைவு ஐக்கிய இராச்சியம்
1996 கிரகாம் சுவிஃப்டு[31] Last Orders புதினம் ஐக்கிய இராச்சியம்
1997 அருந்ததி ராய் த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் புதினம் இந்தியா
1998 இயன் மெக்எவன்[32] Amsterdam புதினம் ஐக்கிய இராச்சியம்
1999 ஜே. எம். கோட்ஸி[33] Disgrace புதினம் தென்னாப்பிரிக்கா
2000 மார்கரெட் அட்வுட் The Blind Assassin வரலாற்றுப் புதினம் கனடா
2001 பீட்டர் கேரி True History of the Kelly Gang வரலாற்றுப் புதினம் ஆத்திரேலியா
2002 யான் மார்ட்டெல் லைஃப் ஆஃப் பை கனவுருப்புனைவு, சாகசப் புதினம் கனடா
2003 டிபிசி பியேர் Vernon God Little நகைச்சுவை ஆத்திரேலியா
2004 அலன் ஒலிங்கர்சுட் The Line of Beauty வரலாற்றுப் புதினம் ஐக்கிய இராச்சியம்
2005 யோன் பான்வில் The Sea புதினம் அயர்லாந்து
2006 கிரண் தேசாய் தி இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ் புதினம் இந்தியா
2007 ஆன் என்ரைட் The Gathering புதினம் அயர்லாந்து
2008 அரவிந்த் அடிகா[34] The White Tiger புதினம் இந்தியா
2009 இலரி மான்டெல் Wolf Hall வரலாற்றுப் புதினம் ஐக்கிய இராச்சியம்
2010 அவார்டு யேக்கப்சன் The Finkler Question நகைச்சுவைப் புதினம் ஐக்கிய இராச்சியம்
2011 யூலியன் பார்னசு The Sense of an Ending புதினம் ஐக்கிய இராச்சியம்
2012 இலரி மான்டெல் Bring Up the Bodies வரலாற்றுப் புதினம் ஐக்கிய இராச்சியம்
2013 இலினோர் காட்டன் The Luminaries வரலாற்றுப் புதினம் நியூசிலாந்து
2014 ரிச்சர்டு ஃபிளானகன் The Narrow Road to the Deep North வரலாற்றுப் புதினம் ஆத்திரேலியா
2015 மர்லோன் ஜேம்ஸ் A Brief History of Seven Killings வரலாற்றுப் புதினம் யமேக்கா
2016 பால் பேட்டி The Sellout நகைச்சுவைப் புதினம் ஐக்கிய அமெரிக்கா
2017 சியார்ச் சோன்டர்சு Lincoln in the Bardo வரலாற்றுப் புதினம் ஐக்கிய அமெரிக்கா
2018 அன்னா பர்ன்சு Milkman புதினம் ஐக்கிய இராச்சியம்
2019 மார்கரெட் அட்வுட் The Testaments புதினம் கனடா
பெர்னார்டீன் எவரிசுட்டோ Girl, Woman, Other பரிசோதனைப் புனைவு ஐக்கிய இராச்சியம்
2020 டக்லசு இசுட்டுவர்ட் Shuggie Bain புதினம் ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
2021 தேமன் கால்கட் The Promise புதினம் தென்னாப்பிரிக்கா
2022 செகான் கருணாதிலக்க[35] The Seven Moons of Maali Almeida புதினம் இலங்கை

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Sutherland, John (9 October 2008). "The Booker's Big Bang". New Statesman. http://www.newstatesman.com/books/2008/10/booker-prize-british-literary. 
  2. "'A surprise and a risk': Reaction to Booker Prize upheaval". BBC News. 18 September 2013. https://www.bbc.co.uk/news/entertainment-arts-24126882. 
  3. Hoover, Bob (10 February 2008). "'Gathering' storm clears for prize winner Enright". Pittsburgh Post-Gazette. http://old.post-gazette.com/pg/08041/855698-44.stm. 
  4. "The Booker Prizes". Booker Prize Foundation.
  5. Jordison, Sam (21 November 2007). "Looking back at the Booker: PH Newby". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2007/nov/21/lookingbackatthebookerph. 
  6. Jordison, Sam (12 December 2007). "Looking back at the Booker: Bernice Rubens". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2007/dec/12/lookingbackatthebookerber. 
  7. Jordison, Sam (21 December 2007). "Looking back at the Booker: VS Naipaul". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2007/dec/21/lookingbackatthebookervs. 
  8. Jordison, Sam (9 January 2008). "Looking back at the Booker: John Berger". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2008/jan/09/lookingbackatthebookerjoh. 
  9. Jordison, Sam (23 January 2008). "Looking back at the Booker: JG Farrell". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2008/jan/23/lookingbackatthebookerjg. 
  10. Jordison, Sam (27 February 2008). "Looking back at the Booker: Nadine Gordimer". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2008/feb/27/lookingbackatthebookernad. 
  11. Jordison, Sam (13 March 2008). "Looking back at the Booker: Stanley Middleton". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2008/mar/13/holidaystanleymiddleton. 
  12. Jordison, Sam (18 November 2008). "Booker club: Saville". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2008/nov/18/david-storey-monty-python. 
  13. Jordison, Sam (22 December 2008). "Booker club: Staying On". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2008/dec/19/booker-india. 
  14. Jordison, Sam (11 February 2009). "Booker club: The Sea, the Sea". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2009/feb/10/iris-murdoch-sea-booker. 
  15. Jordison, Sam (13 March 2009). "Booker club: Offshore". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2009/mar/13/booker-prize-fitzgerald-offshore. 
  16. Jordison, Sam (15 April 2009). "Booker club: Rites of Passage". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2009/apr/14/booker-william-golding-rites-passage. 
  17. Jordison, Sam (10 July 2008). "Midnight's Children is the right winner". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2008/jul/10/bestofbooker. 
  18. Jordison, Sam (15 May 2009). "Booker club: Schindler's Ark". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2009/may/15/booker-club-schindlers-ark-keneally. 
  19. Jordison, Sam (16 June 2009). "Booker club: Life and Times of Michael K". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2009/jun/16/booker-club-jm-coetzee. 
  20. Jordison, Sam (5 August 2009). "Booker club: Hotel du Lac". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2009/aug/05/booker-club-hotel-du-lac. 
  21. Jordison, Sam (20 November 2009). "Booker club: The Bone People by Keri Hulme". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2009/nov/19/booker-club-bone-people. 
  22. Jordison, Sam (16 February 2010). "Booker club: The Old Devils". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2010/feb/15/booker-old-devils-kingsley-amis. 
  23. Jordison, Sam (19 March 2010). "Booker club: Moon Tiger". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2010/mar/19/booker-club-moon-tiger. 
  24. Jordison, Sam (28 May 2008). "Looking back at the Booker: Peter Carey". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2008/may/28/lookingbackatthebookerpet. 
  25. Jordison, Sam (26 November 2010). "Booker club: The Remains of the Day". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2010/nov/26/booker-club-remains-day. 
  26. Jordison, Sam (20 January 2011). "Booker club: The Famished Road". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2011/jan/20/booker-club-famished-road. 
  27. Jordison, Sam (4 March 2011). "Booker club: The English Patient". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2011/mar/04/booker-club-english-patient-ondaatje. 
  28. Jordison, Sam (10 June 2011). "Booker club: Sacred Hunger". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2011/jun/10/booker-club-sacred-hunger-barry-unsworth. 
  29. Jordison, Sam (14 September 2011). "Booker club: How Late It Was, How Late by James Kelman". The Guardian. https://www.theguardian.com/books/2011/sep/14/booker-club-james-kelman-how-late. 
  30. Jordison, Sam (6 June 2008). "Looking back at the Booker: Pat Barker". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2008/jun/06/lookingbackatthebookerpat. 
  31. Jordison, Sam (24 July 2012). "Booker club: Last Orders by Graham Swift". The Guardian. https://www.theguardian.com/books/2012/jul/24/booker-club-graham-swift-last-orders. 
  32. Jordison, Sam (6 December 2011). "Booker club: Amsterdam by Ian McEwan". The Guardian. https://www.theguardian.com/books/2011/dec/06/booker-club-amsterdam-ian-mcewan. 
  33. Jordison, Sam (24 June 2008). "Looking back at the Booker: JM Coetzee". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2008/jun/24/lookingbackatthebookerjm. 
  34. Jordison, Sam (22 August 2008). "Booker Club: The White Tiger". The Guardian. https://www.theguardian.com/books/booksblog/2008/aug/22/theindianeconomicmiraclemi. 
  35. "The Seven Moons of Maali Almeida | The Booker Prizes". thebookerprizes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-17.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கர்_பரிசு&oldid=3579549" இலிருந்து மீள்விக்கப்பட்டது