மாயத்தோற்றம்

மாயத்தோற்றம் (Hallucination) என்பது மனதைத் தன்வயப்படுத்தி மதி மயங்கச் செய்யும் புலன் உணர்ச்சியாகும். மயக்க உணர்ச்சியை செயற்கையாகவும் தூண்டமுடியும். மாயத்தோற்றம் இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் உளவியல் முறையால் தூண்ட முடியும்.

இயற்பியல் முறை தொகு

தாளத்தோடு இசைக்கப்படும் பறை முழக்கம், பண்ணோடு இசைந்த பாடல், பெருங்கூட்டத்தின் சீரான கைத்தட்டல், பெருங்கூட்டத்தின் ஆவேச சத்தம், நடனம், ஒலி முழக்கம், சீரான அங்க அசைவுகள், மந்திர உச்சரிப்புக்கள், படிகக் கற்களைப் பார்த்துக் கொண்டே இருத்தல், போன்றவே மயக்க உணர்ச்சியை ஏற்படுத்த முடியும். இவை ஒருவரை தன்னிலை மறக்க வைத்து தன்னோடு ஈர்த்துக் கொள்கின்றன. வசீகரிக்கப்பட்ட நிலையில் அவற்றின் போக்கிலேயே மனிதன் இயக்கப்படுகிறான். பேயாட்டம், சாமி இறங்குதல், பரிசுத்த ஆவி வருதல போன்றவை இவ்வகை மயக்கமே என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். மூளையின் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளை மின் துடிப்புகள் (Electrical Impulse) மூலம் தூண்டிவிட்டு சினம், அச்சம், பசி, வருத்தம், துக்கம், துயரம், காதல், காமம், ஆர்வம், நட்பு, விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம் போன்ற உணர்வுகளை செயற்கையாக உருவாக்க முடியும் என்று அறிவியல் வல்லுனர்கள் நிருபித்திருக்கிறார்கள்.

வேதியல் முறை தொகு

கள், சாராயம், அபின், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை உடகொண்டு மயக்க உணர்ச்சிகளைத் தாமே ஏற்படுத்திக் கொள்ள முடியும். சில வகை மருந்துப் பொருட்களும் மயக்கம் தருகின்றன. இவை மனிதனது உடலில் வேதியல் மாற்றங்களை செய்து, கிளர்ச்சியடைய செய்கின்றது.

உயிரியல் முறை தொகு

உயிரிகளின் உடல்வாகுக்கும் சிந்தனை மற்றும் செயல்பாடுகளுக்கும் குரோமசோம்கள் காரணமாகும். வைட்டமின், அல்லது நொதிகளின் பற்றாக்குறை காரணமாக குரோமசோம்களில் ஏற்படும் குறைப்பாடு மயக்க உணர்ச்சிகளைத் தரலாம். வைட்டமின் குறைபாடால் பெரிபெரி, பெல்லாக்ரா போன்ற மனநோய்கள் உருவாகலாம், எண்டாக்கிரினல், பாராதைராய்டு போன்ற சுரப்பிகளில் ஏற்படும் குறைபாடுகளாலும் மயக்க உணர்ச்சி தோன்றலாம். இத்தகைய குறைபாடுகள் கொண்டவர்கள் தூக்கத்தில் நடப்பவர்களாக, கற்பனை உலகில் வாழ்பவர்களாக, அதிகம் கனவு காண்பவர்களாக இருப்பார்கள்.

உளவியல் முறை தொகு

கதையாடல்கள், கற்பிதங்கள் வழியாக நம்பிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. ஊட்டப்படும் உணர்வுகளுக்கு ஏற்ப உள்ளம் உருவாக்கம் பெறுகிறது. சமய உரைகள், புராணங்கள், இதிகாசங்கள், வழியாகத் தொடர்ந்து ஊட்டப்படும் கருத்துக்களும் பேய், பிசாசு, ஆவி தொடர்பான கருத்துக்களும், குழந்தைப் பருவத்திலிருந்தே மனத்தில் திணிக்கப்படுகின்றன. பேயாட்டம், சாமியாட்டம், அயல் மொழிகளில் பேசுதல், ஒய்வின்றி மந்திரங்களைப் புலம்பிக் கொண்டே இருத்தல் போன்றவை கற்பிக்கப்பட்ட நம்பிக்கைகளின் விளைவுகளேயாகும். புரியாத மொழியில் பேசுவது குளோசோலாலியா (Glossolalia) என்னும் மனநோய் என்று கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயத்தோற்றம்&oldid=2200628" இலிருந்து மீள்விக்கப்பட்டது