மாயி பக்தாவர்

மாயி பக்தாவர் (Mai Bakhtawar) என்பவர் பாக்கித்தனைச் சேர்ந்த ஒரு பண்ணைத் தொழிலாளியாவார். இவர் ஒரு நில உரிமையாளர்களுக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையில் நடந்த மோதலின் போது கொலை செய்யப்பட்டார். இவரது மரணம் விவசாயிகளின் உரிமைகளை மேம்படுத்த சட்ட மாற்றங்களை கொண்டுவர உதவியது.

மாயி பக்தாவர் லஸ்ஹரி
பிறப்பு1880
தண்டோ பாகோ, பாதின் மாவட்டம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய பாக்கித்தான்)
இறப்பு22 சூன் 1947(1947-06-22) (அகவை 67)
பணிபண்ணை தொழிலாளி
அரசியல் இயக்கம்ஹரி இயக்கம்

ஆரம்ப நாட்களில் தொகு

பக்தாவர் பிரிட்டிசு இந்தியாவில் சிந்து மாகாணத்தில் பாதின் மாவட்டத்தில் தோடோகான் சர்கானி அருகேயுள்ள தன்டோ பாகோ என்ற கிராமத்தில் 1880-ல் பிறந்தார். இவர் முராத் கான் லஸ்ஹரி என்பவரின் ஒரே மகளாவார். 1898 ஆம் ஆண்டில், இவர், அகமதியா முஸ்லிம் தோட்டத்தில் வேலை செய்யும் விவசாயியான வாலி முகமது என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு முகமது கான், லால் புக்ச், முகமது சித்திக் என்ற மூன்று மகன்களும், ரஸ்தி என்ற ஒரு மகளும் இருந்தனர்.

விவசாயிகளின் உரிமைகளுக்கான இயக்கம் தொகு

இந்தியப் பிரிவினைக்கு முன்னர், சிந்துவில் விவசாயிகள் இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். லாகூரின் இந்து இராச்சியத்தைச் சேர்ந்த சில நில உரிமையாளர்கள் அரசியல் கையூட்டாக வழங்கப்பட்ட நிலங்களை வைத்திருந்தனர். விவசாயிகள் தங்கள் உழைப்புக்கு ஒரு சிறிய ஊதியத்தைப் பெற்று நிலத்தில் வேலை செய்து வந்தனர். விளைச்சல் நேரத்தில், நில உரிமையாளர்கள் பெரும்பாலான விளைச்சலை எடுத்துக் கொள்வார்கள். இதனால் விவசாயிகளுக்கு ஒரு சிறிய அளவே தானியம் கிடைத்தது.

பக்தாவரின் கிராமம் “அகமதி தோட்டம்” என்று அழைக்கப்படும் நாற்பதாயிரம் ஏக்கர் நிலத்தை வைத்திருந்த ஒரு அகமதியா முஸ்லீமின் சொத்தாகும். விவசாய ஆர்வலர், ஐதர் பக்ஸ் ஜடோய், என்பவர் விவசாயிகளின் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் விளைச்சலில் பாதிப் பங்கைப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஹரி மாநாடு 22 சூன் 1947 இல் ஜூடோவில் நடந்தது. [1] டோடோ கான் சர்கானியில் உள்ள அனைத்து ஆண்கள் உட்பட பத்தாயிரம் விவசாயிகளும் தொழிலாளர்களும் மாநாட்டிற்குச் சென்றனர்.

மோதல் தொகு

ஹரி மாநாட்டின் கடைசி நாளான 1949 சூன் 22 அன்று, அகமதியா முஸ்லிம்கள் குடியானி, தோடோகான் சர்கானியிடமிருந்து 1,20,000 கிலோகிராம் மாவு பறிமுதல் செய்ய முடிவு செய்தார். அகமதியா முஸ்லிம்களும் அவர்களது கூட்டத்தினரும் கிராமத்திற்கு வந்தபோது, அவர்களை பக்தாவர், ஒரு வயதான ஊனமுற்றோர் மற்றும் பிற பெண்களுடன் எதிர்கொண்டார். மாநாட்டிலிருந்து கிராம ஆண்கள் திரும்பும் வரை மாவு எடுக்க காத்திருக்குமாறு கிராம மக்கள் அவர்களைக் கேட்டுக்கொண்டனர்.

இதனால் கோபமுற்ற, சவுத்ரி சயீதுல்லா என்பவரும் அவரது மேலாளர் சவுத்ரி காலித் என்பவரும் தங்கள் ஆட்களில் ஒருவரை உடனடியாக மாய் பக்தாவரை சுடுமாறு கட்டளையிட்டனர். சுடப்பட்ட பக்தாவர் அங்கேயே இறந்து போனார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சமரோ நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மரணத்திற்குப் பிறகு வெற்றி தொகு

1950 ஆம் ஆண்டில், பாக்கித்தான் அரசாங்கத்தால் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இது நில உரிமையாளர்கள் தங்களிடம் பணிபுரியும் விவசாயிகளுக்கு விளைச்சலைக் கொடுக்க கட்டாயப்படுத்தியது. அப்போதைய பாக்கித்தான் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜாபருல்லா கானின் மருமகன் சயீதுல்லா மற்றும் காலித் ஆகியோருக்கு மாயி பக்தாவாரை கொலை செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கௌரவங்கள் தொகு

  • இஸ்லாம்கோட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு [2] இவரது பெயரிடப்பட்டது.
  • சம்பந்தப்பட்ட குன்ரி வட்டத்த்தின் ஊராட்சிக்கு சிந்து அரசு பக்தாவர் என்று பெயரிட்டுள்ளது
  • இரண்டு பள்ளிகளுக்கு இவரது பெயரிடப்பட்டுள்ளன.
  • அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தங்களது சிறந்த செயல்திறன் விருதுகளை மாயி பகதாவர் லஸ்ஹரி ஷாஹீத் பெயரில் வழங்குகின்றன. [3][4]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. https://www.thenews.com.pk/tns/detail/659187-mai-bakhtawar-a-forgotten-daughter-of-sindh
  2. https://www.dawn.com/news/1400801
  3. Correspondent, The Newspaper's Staff (23 June 2016). "Hari movement icon Mai Bakhtawar remembered".
  4. "بختاور شهيد : (Sindhianaسنڌيانا)". www.encyclopediasindhiana.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயி_பக்தாவர்&oldid=3120781" இலிருந்து மீள்விக்கப்பட்டது