மாரியப்பன் தங்கவேலு

மாரியப்பன் தங்கவேலு (Mariyappan Thangavelu, பிறப்பு: சூன் 28, 1995) இந்திய மாற்றுத்திறனாளர் தடகள விளையாட்டு வீரர் ஆவார். தமிழ்நாட்டு விளையாட்டு வீரரான இவர் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார்.[1]

மாரியப்பன் தங்கவேலு
தனித் தகவல்கள்
பிறந்த நாள்28 சூன் 1995 (1995-06-28) (அகவை 28)
பிறந்த இடம்பெரிய வடக்கம்பட்டி, ஓமலூர், சேலம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகள விளையாட்டு
நிகழ்வு(கள்)மாற்றுத்திறனாளர் உயரம் தாண்டுதல் T42
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை1.89 மீ இரியோ ஒலிம்பிக்சு, 2016
 
பதக்கங்கள்
நாடு  இந்தியா
மாற்றுத் திறனாளர் ஆண்கள்
உயரம் தாண்டுதல் டி42
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் இரியோ 2016 உயரம் தாண்டுதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல்
மாற்றுத் திறனாளர் ஆண்கள்
உயரம் தாண்டுதல் டி63
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2019 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், துபாய் உயரம் தாண்டுதல்

இரியோ டி செனீரோவில் நடந்த 2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி42 வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.[2]

2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[3]

2017 சனவரி 25 ஆம் தேதி, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது. இந்திய அரசு இவருக்கு ஆகஸ்டு, 2020-இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரைத்துள்ளது.[4][5]

வாழ்க்கை வரலாறு தொகு

தமிழ்நாட்டிலுள்ள, சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடக்கம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். தந்தை ஆரம்பத்தில் குடும்பத்தை கைவிட்டார். தாயார் சரோஜா குழந்தைகளை வளர்த்தார். தாயார் செங்கல் தூக்கும் தொழிலாளியாகவும் மரக்கறி விற்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை வளர்த்தெடுத்தார்.[6] தனது ஐந்தாவது அகவையில் பள்ளி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் வலது காலில் பேருந்து ஏறியதால், முழங்காலுக்குக் கீழே உள்ள கால் பகுதியை இழந்தார்.[7] இந்தப் பின்னடைவிலும், அவர் இரண்டாம்நிலைப் பள்ளியை நிறைவு செய்தார்.[6]

தனது காலை இழந்தநிலையிலும் மாரியப்பனுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது. இவரது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன் பரிந்துரைப்படி, இவர் உயரம் தாண்டுவதில் பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது 14ஆவது வயதில் நற்தேகம் உடையவர்களும் கலந்துகொண்ட போட்டியில் இரண்டாவதாக வந்தார். 2013 தேசிய மாற்றுத்திறனாளர் போட்டிகளில் கலந்து கொண்ட மாரியப்பனை கண்ட பயிற்றுநர் சத்தியநாராயணா தமது பயிற்சிக்கு ஏற்றுக் கொண்டார். 2015இல் பெங்களூருவில் அவரது பயிற்சி மையத்தில் இணைந்தார்.[1]

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தூனிசியாவில் நடந்த ஐபிசி கிராண் பிரீ போட்டியில் 1.78 மீ தாண்டி இரியோ மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றார். தங்கம் வென்ற இவருக்கு இந்தியாவில் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.[8]

தங்கப் பதக்கம் வென்றதால் இவருக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்க இருக்கிறது. அத்துடன் தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது.[9] தனக்கு அறிவிக்கப்படும் பரிசுத்தொகைகளிலிருந்து தான் படித்த அரசு பள்ளிக்கூடத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.[10]

தொழில்முறை வாழ்க்கை தொகு

நவம்பர் 2019இல் , துபாயில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கத்தை வென்றார்.[11]

அஞ்சல் தலை தொகு

மை ஸ்டாம்ப் என்ற திட்டத்தின்கீழ் சேலம் தபால் துறை சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.[12]

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 [http://sportingindia.com/content/mariyappan-thangavelu] Mariyappan Thangavelu பரணிடப்பட்டது 2016-09-13 at the வந்தவழி இயந்திரம், sportingindia.com,
  2. "Rio Paralympics: M. Thangavelu Clinches Gold, Varun Bhati Bronze in High Jump". என்டிடிவி இசுபோர்ட்சு. 10 செப்டம்பர் 2016. Archived from the original on 10 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archive-date= (help)
  3. டோக்யோ பாராலிம்பிக் 2020: மாரியப்பனின் தொடர் சாதனைகள்
  4. மாரியப்பனுக்கு 'கேல் ரத்னா': மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழகத்தின் மாரியப்பன், ரோஹித் ஷர்மாவுக்கு கேல் ரத்னா விருது!
  6. 6.0 6.1 Stalin, J. Sam Daniel (10-09-2016). "Paralympian Mariyappan Thangavelu's Golden Leap From Poverty". NDTV Sports இம் மூலத்தில் இருந்து 2016-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160910123616/http://sports.ndtv.com/othersports/news/262708-paralympian-mariyappan-thangavelu-s-golden-leap-from-poverty. பார்த்த நாள்: 10-09-2016. 
  7. Chidananda, Shreedutta (20 மே 2016). "It’s not beyond me, even gold is possible: Mariyappan". தி இந்து. http://www.thehindu.com/sport/other-sports/its-not-beyond-me-even-gold-is-possible-mariyappan/article8622655.ece. பார்த்த நாள்: 10-10-2016. 
  8. 'தங்கமகன்' மாரியப்பனுக்கு மோடி முதல் சச்சின் வரை பெருமித ட்வீட்! தி இந்து தமிழ் 10 செப்டம்பர் 2016
  9. "பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக இளைஞர்: 'தி இந்து' தமிழ் நாளிதழின் கணிப்பு பலித்தது". தி இந்து தமிழ். 11 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  10. "தான் படித்த அரசு பள்ளிக்கு பரிசுத்தொகையில் 30 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய மாரியப்பன்". மாலைமலர். 12 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  11. "Dubai 2019 - Schedule & Results". International Paralympic Committee.
  12. "தங்கமகன் மாரியப்பன் சிறப்பு தபால் தலை வெளியீடு". ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 25, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள், அணுக்கம் 04-04-2017

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரியப்பன்_தங்கவேலு&oldid=3688191" இலிருந்து மீள்விக்கப்பட்டது