மாரியா கொலம்பகே

ரொமந்தி மாரியா கொலம்பகே (Romanthi Maria Colombage, மே 19, 1984) ஓர் இலங்கை அழகுராணியும், விளம்பர துறையைச் சேர்ந்தவரும், இலங்கையின் உலக அழகிப் பட்டம் பெற்றவரும் அவார்.[1] ஆடை வடிவமைப்பு வல்லுநரான கொலம்பகே சீனாவில் 2007 இல் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில், இலங்கையின் சார்பில் போட்டியிட்டு இலங்கை உலக அழகிப்பட்டம் வென்றார். கொலம்பகே இலங்கையின் மிகப் புகழ்பெற்ற விள்ம்பர அழகி ஆவார். ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளில் ஆடை அலங்கார நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

மாரியா கொலம்பகே
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்புரொமந்தி மாரியா கொலம்பகே
மே 19, 1984 (1984-05-19) (அகவை 39)
கொழும்பு, இலங்கை
பட்ட(ம்)ங்கள்இலங்கையின் உலக அழகி 2007

பின்னணி தொகு

கொலம்பகே இலங்கையின் கொழும்பில் பிறந்தவர். இவருக்கு ராப்தி என்ற ஒரு சகோதரி உள்ளார்.[2] கொழும்பில் ஹோலி ஃபேமிலி கான்வெண்டில் படிப்பைத் தொடங்கிய இவர் தனது 18 ஆம் வயதில் ஆடை வடிவமைப்பில் பட்டயக் கல்வியை முடித்தார். தனது இருபத்தொன்றாம் வயதில் சந்தைப்படுத்துதலில் பட்டயக் கல்வி பெற்றார். பின்னர் இங்கிலாந்தின் கார்டிஃப்-இல் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் மற்றும் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]

தனது பதினேழாம் வயதில் ஒரு நடன அமைப்பாளாரின் வேண்டுகோளுக்கிணங்கி, கொழும்பில் ஓர் ஆடை அலங்கார நிகழ்வில் கலந்துகொண்டார். அதன் பின்னரே ஐரோப்பிய ஆசிய நாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளத் தொடங்கினார். 2003 இல் இலங்கையின் குறிப்பிடத்தக்க ஆடை அடையாளப் பெயர்களுள் ஒன்றான “பெல்லூசி” என்ற நிறுவனம் வடிவமைக்கப்பட்ட படைப்புகளில் முக்கிய பங்காற்றினார். இது வால்ட் டிஸ்னி நிறுவனம் மற்றும் ஹால்மார்க் வடிவமைப்புகளுக்குப் பெயர்பெற்ற, ரோஷன் பெரேரா என்பவருடைய நிறுவனமாகும். ஆடை வர்த்தகத்தைப் பல்வகைப்படுத்துவதில் கொலம்பகே ஒரு கருவியாக இருந்து செயல்பட்டார்.[4]

பணி தொகு

கொலம்பகே இந்தியா மற்றும் இலங்கையில் பல்வேறு புகைப்படமெடுக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இவருடைய பதினெட்டாம் வயதில் துபாய், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் வடிவழகுகாக கலந்துகொண்டு திரும்பினார்.பின்னர் ஜெர்மனி, லண்டன், பாரிஸ் ஆகிய இடங்களில் அலங்கார நடை பயின்று மேடைகளில் தோன்றினார். மேலும் சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கும் சென்றார். விரைவிலேயே தன்னுடைய பெயரை நிலைநாட்டி தாயகமான இலங்கையின் சார்பில் அழகிப்போட்டியில் கலந்துகொண்டார். 2007 இல் உலக அழகிப்போட்டியில் இலங்கையின் சார்பில் கலந்துகொண்டு இலங்கையின் உலக அழகிப் பட்டம் சூட்டப்பெற்றார்.[5]

2008 இல் இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூருரைச் சேர்ந்த பிரசாத் பிட்டப்பா தனது நிறுவனத்திற்கான வடிவழகுகிற்காக நடிக்க இவரை அனுகினார். 2008 இல் அவருடைய அபஹரன் நகைக்கடைக்கான பெங்களூரின் புதியமுகமாக கொலம்பகே தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] அதன் பின்னர் இவர் இந்தியாவிலேயே ஆறு மாதங்கள் தங்கியிருந்து வடிவழகு செய்தார். 2008, 2009 களில் கொலம்பகே இலங்கையின் கொழும்பு நகைக்கடைகளின் விளம்பர அழகியாகத் தோன்றினார். 2010 புத்தி பத்தீக் என்ற நீச்சலுடை நிறுவனத்தின் பத் டங்களில் இடம்பிடித்தார்.[7] நேஷன் ட்ரஸ்ட் பேங்க், சிங்கர், ஆசியன் அலையன்ஸ் காப்பீடு ஆகிய நிறுவன விளம்பரஙகளில் தோன்ற கொலம்பகே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வாழ்க்கை தொகு

கொலம்பகே கியான் விஜெசின்ஹா என்ற இலண்டன் வங்கியாளரை ஜூலை 10, 2010 இல் மணந்தார். இவர்களுடைய திருமணம் மவுண்ட் லெவினியாவில் தாமஸ் தேவலயத்தில் நடைபெற்றது. அங்குள்ள தனியார் கடற்கரையில் உள்ள மவுண்ட் லெவினியா விடுதியில் இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. தற்பொழுது இவர் தனது கணவருடன் இலண்டனில் வசித்து வருகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. When beauty was crowned. http://www.island.lk/2007/09/30/leisure1.html
  2. Daily mirror March 5th 2007
  3. Miss Sri Lanka for Miss World 2007 Romanthi Maria Colombage in China for Miss World. Article from: Hi!! The Society Magazine Series 6 Volume 1 2008. Retrieved March 28, 2009
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-20. பார்க்கப்பட்ட நாள் 2019-01-23.
  5. inner.gif
  6. ABHARAN JEWELLERS - Bangalore's Leading Jewellers
  7. Alefiya Akbarally
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரியா_கொலம்பகே&oldid=3843431" இலிருந்து மீள்விக்கப்பட்டது