மார்க்கசு போர்சியசு கேட்டோ

ரோமானிய அரசியலாளர் படைத்தளபதி மற்றும் எழுத்தாளர்

மார்க்கசு போர்சியசு கேட்டோ ( Marcus Porcius Cato ) (கி.மு. 234–149) என்பவர் இரோமானியமானிய நாட்டில் விவசாய குடும்பத்தை சார்ந்தவர். வெளீரியஸ் பிளக்கஸ் அவர்களின் ஆலோசனைகளின் பெயரில் சட்டம் பயின்றார். பின் சிறந்த சட்ட நிபுணராகவும், அரசியல் வல்லுநராகவும், போர்த்தளபதியாகவும், பேச்சாளராகவும், திகழ்ந்தார்.

மார்க்கசு போர்சியசு கேட்டோ
மார்க்கஸ் போர்சியஸ் கேட்டோவின் மார்பளவு சிலை என்று கருதப்படுகிறது
பிறப்புகி.மு.234
உரோமைக் குடியரசு
இறப்புகி.மு.149 (வயது 85)
உரோமைக் குடியரசு
குறிப்பிடத்தக்க படைப்புகள்விவசாய அனுபவங்கள்
வாழ்க்கைத்
துணை
  • இலிசினியா
  • சலோனியா
பிள்ளைகள்
  • மார்க்கசு போர்சியசு கேட்டோ இலினிசியானசு
  • மார்க்கசு போர்சியசு கேட்டோ சலோனியசு
Military service
பற்றிணைப்புஉரோமைக் குடியரசு
போர்கள்/யுத்தங்கள்
  • இரண்டாம் பியூனிக் போர்
  • உரோம-சிரிய போர்

பெயர் காரணம் தொகு

நாட்டுப்பற்றுமிக்க கேட்டோ தன்னை போர்சியஸ் கேட்டோ என்று பெருமிதத்துடன் கூறிக்கொண்டார். "போர்சியஸ்" என்றால் பரம்பரையாக பன்றி வளர்ப்போர் குடும்பத்தை சார்ந்தவன் என்று பொருள். "கேட்டோ" என்றால் புத்திக்கூர்மையுடைய என்று பொருள்.[1] கேட்டோ தனது தாய்மொழியான லத்தின் மொழியில் தனது படைப்புக்களை எழுதினார்.[2]

படைப்புகள் தொகு

1. தோற்றம் ( Origines ) தொகு

ரோமின் தோற்றம், வளர்ச்சி, தொண்மை, பண்பாடு, நிறுவனங்கள் பற்றி விவரிக்கிறது. மேலும் இந்நூலில் தனிநபர் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு இடத்தில மட்டும் போர்க்களத்தில் துணிவுடன் போரிட்ட யானைக்கு சூரஸ் என்று பெயரிட்டுள்ளார்.

2. விவசாய அனுபவங்கள் ( De Agricultrual ) தொகு

விவசாய குடும்பத்தில் பிறந்ததால் தனது விவசாய அனுபவங்களை தொகுத்துள்ளார்.

ரோமானிய எழுத்து கலையில் புரட்சிகரமான திருப்புமுனையை ஏற்படுத்தியதால் கேட்டோவை ரோமானிய வரலாற்று வரைவியலின் தந்தை என்று அழைக்கலாம் என ஷேக் அலி கூறுகிறார்.

நூல் பட்டியல் தொகு

  • Dalby, Andrew (1998), Cato: On Farming, Totnes: Prospect Books, ISBN 0-907325-80-7

மேற்கோள்கள் தொகு

  1. வெங்கடேசன் .க. வரலாற்று வரைவியல். இராஜபாளையம்: வி.வி.பதிப்பகம். 
  2. (Dalby 1998, pp. 7–8).