மால்வா சுல்தானகம்

வட இந்தியாவில் இடைக்காலத்தின் பிற்பகுதி இராச்சியம்

மால்வா சுல்தானகம் ( Malwa Sultanate ) 1392 முதல் 1562 வரை இன்றைய இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் தென்கிழக்கு இராஜஸ்தானை உள்ளடக்கிய மால்வா பிராந்தியத்தில் இருந்த ஒரு பிற்பகுதி இடைக்கால சுல்தானமாகும். இது தில்லி சுல்தானகத்தின் ஆப்கானிய ஆளுநரான திலாவர் கான் என்பவரால் நிறுவப்பட்டது.[2] கான் 1392-க்குப் பிறகு தில்லிக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தினார்.[3] தைமூரின் படையெடுப்பு மற்றும் தில்லி சுல்தானகத்தின் சிதைவைத் தொடர்ந்து, 1401-02 இல், திலாவர் கான் மால்வாவை ஒரு சுதந்திர சாம்ராச்சியமாக மாற்றினார்.[2]

مالوہ سلطنت
மால்வா சுல்தானகம்
1392–1561/2
1525 இல் மால்வா சுல்தானகம், கோண்ட்வானா பழங்குடியினரை அவர்களின் துணைக் கிளையாகக் கொண்டது.[1]
1525 இல் மால்வா சுல்தானகம், கோண்ட்வானா பழங்குடியினரை அவர்களின் துணைக் கிளையாகக் கொண்டது.[1]
தலைநகரம்தார் நகரம் (ஆரம்ப காலம்)
மாண்டு
சமயம்
சுன்னி இசுலாம் இசுலாம்
அரசாங்கம்சுல்தானகம்
சுல்தான் 
• 1392 - 1406
திலாவர் கான்(முதல்)
• 1555 - 1562
பாஸ் பகதூர் (கடைசி)
வரலாறு 
• தொடக்கம்
1392
• முடிவு
1561/2
முந்தையது
பின்னையது
[[தில்லி சுல்தானகம்]]
குசராத்து சுல்தானகம்
[[முகலாயப் பேரரசு]]
தற்போதைய பகுதிகள்இந்தியா

வரலாறு தொகு

 
மால்வாவின் சுல்தானான கியாத் அல்- தினுக்கு மாண்டுவில் வடை தயாரித்தல்

மால்வாவின் சுல்தானகம் 1392-இல் தனது சுதந்திரத்தை உறுதிப்படுத்திய தில்லி சுல்தானகத்திற்காக மால்வாவின் ஆளுநரான திலாவர் கான் குரி என்பவரால் நிறுவப்பட்டது. ஆனால் உண்மையில் 1401 வரை அரச அடையாளங்களை ஏற்கவில்லை. ஆரம்பத்தில் தார் நகரம் புதிய இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, ஆனால் விரைவில் அது மாண்டுவுக்கு மாற்றப்பட்டது. இது ஷாதியாபாத் (மகிழ்ச்சியின் நகரம்) என மறுபெயரிடப்பட்டது. இவரது மரணத்திற்குப் பிறகு, இவரது மகன் அல்ப் கான், ஹோஷாங் ஷா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். திலாவர் கான் குரி என்பவரால் நிறுவப்பட்ட குரித் வம்சம், 1436 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி தன்னை அரசனாக அறிவித்த முதலாம் மஹ்மூத் ஷா என்பவரால் மாற்றப்பட்டது. அவரால் நிறுவப்பட்ட கல்ஜி வம்சம் 1531 வரை மால்வாவை ஆட்சி செய்தது. முதலம் மஹ்மூத் கல்ஜிக்குப் பிறகு அவரது மூத்த மகன் கியாஸ்-உத்-தின் பதவியேற்றார். கியாஸ்-உத்-தினின் கடைசி நாட்கள் அவரது இரண்டு மகன்களுக்கிடையில் சிம்மாசனத்திற்கான போராட்டத்தால் மனவேதனை அடைந்தன. நசீர்-உத்-தின் அலா-உத்-தின் மீது வெற்றிபெற்று 1500 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி அரியணை ஏறினார். கடைசி ஆட்சியாளர் இரண்டாம் மஹ்மூத் ஷா 25 மே 1531 இல் மாண்டு கோட்டை வீழ்ந்த பிறகு குசராத்தின் சுல்தானான பகதூர் ஷாவிடம் சரணடைந்தார்.[4]

பொ.ச.1531 - 1537 இல் பகதூர் ஷாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, இருப்பினும் முகலாயப் பேரரசர் உமாயூன் 1535-36-இல் குறுகிய காலத்திற்கு அதைக் கைப்பற்றி வைத்திருந்தார். 1537 இல், முந்தைய கல்ஜி வம்ச ஆட்சியாளர்களின் முன்னாள் அதிகாரியான காதிர் ஷா, பழைய இராச்சியத்தின் ஒரு பகுதியை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். ஆனால் 1542 இல், சேர் சா சூரி இராச்சியத்தை கைப்பற்றி, அவரை தோற்கடித்து, ஷுஜாத் கானை ஆளுநராக நியமித்தார். அவரது மகன் பாஸ் பகதூர் 1555-இல் தன்னை சுதந்திரமாக அறிவித்தார்.

1561 ஆம் ஆண்டில், பேரரசர் அக்பர் ஆதாம் கான் மற்றும் பீர் முஹம்மது கான் தலைமையிலான முகலாய இராணுவத்தை அனுப்பினார். இது மால்வாவைத் தாக்கி, 29 மார்ச் 1561 அன்று சாரங்பூர் போரில் பாஸ் பகதூரைத் தோற்கடித்தது. இது மால்வாவை முகலாய வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அக்பர் விரைவில் ஆதம் கானை திரும்ப அழைத்துக்கொண்டு பீர் முஹம்மதுவிடம் படை நடத்துமாறு கட்டளையிட்டார். பீர் முஹம்மது காந்தேஷைத் தாக்கி புர்ஹான்பூர் வரை சென்றார். ஆனால் அவர் காந்தேஷின் மீரான் இரண்டாம் முபாரக் ஷா, பெரார் சுல்தான் துஃபல் கான் மற்றும் பாஸ் பகதூர் ஆகியோரின் மூவர் கூட்டணியால் தோற்கடிக்கப்பட்டார். இப்போரில் பீர் முஹம்மது இறந்தார். கூட்டமைப்பு இராணுவம் முகலாயர்களைப் பின்தொடர்ந்து அவர்களை மால்வாவிலிருந்து வெளியேற்றியது. பாஸ் பகதூர் சிறிது காலத்திற்கு தனது இராச்சியத்தை மீண்டும் பெற்றார். 1562 இல், அக்பர் உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த அப்துல்லா கான் தலைமையில் மற்றொரு படையை அனுப்பினார், அது இறுதியாக பாஸ் பகதூரைத் தோற்கடித்தது.[5] அவர் சித்தூருக்கு தப்பி ஓடினார். இது முகலாயப் பேரரசின் மால்வா சுபா (உயர்மட்ட மாகாணம்) ஆனது. உஜ்ஜைனில் இருக்கையுடன் அப்துல்லா கான் அதன் முதல் ஆளுநரானார்.

கலையும் கட்டிடக்கலையும் தொகு

 
நசீர்-உத்-தின் ஷாவின் ஆட்சியின் போது முடிக்கப்பட்ட நிமத் நாமாவின் கையெழுத்துப் பிரதியிலிருந்து ஒரு காட்சி

மால்வா ஓவியம் தொகு

சுல்தானகத்தின் காலத்தில் பல குறிப்பிடத்தக்க விளக்கப்பட கையெழுத்துப் பிரதிகள் தயாரிக்கப்பட்டன. கல்ப சூத்ரா (1439) (தற்போது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது) ஒரு விளக்கப்பட கையெழுத்துப் பிரதி முதலாம் மஹ்மூத் ஷாவால் மாண்டுவில் தயாரிக்கப்பட்டது.[6] ஆனால் நிமத் நாமா என்ற சமையல் கையெழுத்துப் பிரதி மிகவும் சுவாரசியமானதாகும். இது கியாஸ்-உத்-தின் ஷாவின் பல உருவப்படங்களைக் கொண்டுள்ளது. ஆனால் வெளியீட்டாளராக நசீர்-உத்-தின் ஷாவின் பெயரைக் கொண்டுள்ளது. இந்த காலகட்டத்தின் மற்ற குறிப்பிடத்தக்க விளக்கப்பட கையெழுத்துப் பிரதிகள், அரிய சொற்களின் அகராதியான மிஃப்தா-உல்-ஃபுசாலா, 'ஹாஜி மஹ்மூத்' மற்றும் 'அஜாயிப்-உஸ்-சனாதி' (1508) வரைந்த 'புஸ்தான்' (1502) ஆகும். 'அன்வர்-இ-சுஹைலி'யின் மற்றொரு கையெழுத்துப் பிரதியும் (தற்போது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது) இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தது.[7]

மால்வா கட்டிடக்கலை தொகு

 
மால்வா சுல்தானகத்தின் தலைநகரான மாண்டுவில் உள்ள இராணி ரூபமதியின் அரண்மனை
 
ஜஹாஸ் மகால்
 
இராணி ரூபமதியின் அரண்மனை
 
பாஸ் பகதூரின் அரண்மனை

சுல்தான் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட மாண்டு நகரில் குவிந்துள்ளன. ஆரம்பகால நினைவுச்சின்னங்கள் இசுலாமிய திட்டம் மற்றும் மரபு படி, முந்தைய இந்து கோவில்களின் பொருட்களிலிருந்து சேகரிக்கப்பட்டன. ஆனால் அவர்களின் அத்தியாவசிய இந்து தோற்றத்தை மறைக்கவோ அல்லது மாற்றவோ எதுவும் செய்யப்படவில்லை. அவற்றில் குறிப்பிடத்தக்கவை 'கமால் மௌலா பள்ளிவாசல்' (சுமார்1400), லால் பள்ளிவாசல் (1405), 'திலாவர் கானின் பள்ளிவாசல்' (சுமார்1405) மற்றும் மாண்டுவில் உள்ள மாலிக் 'முகிஸின் பள்ளிவாசல்' (1452).[8]

ஆட்சியாளர்கள் தொகு

குரித்/கோரி வம்சம் (1401-36) தொகு

  1. திலாவர் கான் 1401–1406
  2. உசம்-உத்-தின் ஹோஷாங் ஷா 1406–1435
  3. முதலாம் தாஜ்-உத்-தின் முகமது ஷா 1435-1436

கல்ஜி வம்சம் (1436–1531) தொகு

  1. முதலாம் அலா-உத்-தின் மஹ்மூத் ஷா 1436-1469
  2. கியாஸ்-உத்-தின் ஷா 1469-1500
  3. நசீர்-உத்-தின் ஷா 1500-1510
  4. இரண்டாம் சிஹாப்-உத்-தின் மஹ்மூத் ஷா 1510-1531

இடைநிலை தொகு

  1. பகதூர் ஷா (குசராத்து சுல்தான்) 1531-1537
  2. நசிருதீன் உமாயூன் (முகலாயப் பேரரசர்) 1535-1540

பிற்கால ஆட்சியாளர்கள் தொகு

  1. காதிர் ஷா 1540–1542
  2. சுஜாத் கான் (சேர் சா சூரியின் ஆளுநர்) 1542–1555
  3. பாஸ் பகதூர் 1555–1561

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. For a map of their territory see: Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. பக். 147, map XIV.4 (a). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0226742210. https://dsal.uchicago.edu/reference/schwartzberg/pager.html?object=186. 
  2. 2.0 2.1 "Mālwā". The Encyclopaedia of Islam, New Edition, Volume VI: Mahk–Mid. (1991). Leiden: E. J. Brill. ISBN 90-04-08112-7. 
  3. Islam, Riazul; Clifford Edmund Bosworth (1998). "Delhi Sultanate". History of civilizations of Central Asia, v. 4: The Age of achievement, A.D. 750 to the end of the fifteenth century; Pt. I: the historical, social and economic setting. UNESCO Publishing. பக். 285. 
  4. Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp.173-86
  5. Majumdar, R.C. (ed.) (2007) The Mughul Empire, Mumbai: Bharatiya Vidya Bhavan, வார்ப்புரு:Listed Invalid ISBN, pp.112-3
  6. Khare, M.D. (ed.) (1981). Malwa through the Ages, Bhopal: the Directorate of Archaeology & Museums, Government of M.P., pp.193-5
  7. Majumdar, R.C. (ed.) (2007). The Mughul Empire, Mumbai:Bharatiya Vidya Bhavan, வார்ப்புரு:Listed Invalid ISBN,pp.804-5
  8. Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai:Bharatiya Vidya Bhavan, pp.702-9

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்வா_சுல்தானகம்&oldid=3877234" இலிருந்து மீள்விக்கப்பட்டது