7°13′0″N 80°58′45″E / 7.21667°N 80.97917°E / 7.21667; 80.97917

மினிப்பே

மினிப்பே
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°13′N 80°59′E / 7.22°N 80.99°E / 7.22; 80.99
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 152.7048 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
47760

மினிப்பே இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவாகும்.மினிப்பே என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இலங்கையின் நீண்ட ஆறான மகாவலி கங்கையின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்துக்கு அருகில் மகாவலி கங்கையின் நீரை விவசாயத்துக்காக திசைதிருப்பும் மினிப்பே அணைக்கட்டு இங்கு அமைந்துள்ளது. இதில் இருந்து மகாவலி வலதுகரை கால்வாய் ஆரம்பிக்கிறது. மினிப்பேக்கு அருகே இலங்கையின் பெரிய நீரைக்கொண்டுச் செல்லும் நீர்ப்பாலம் அமைந்துள்ளது. இதனைச் சூழவுள்ள பெரும்ப்பாலான பிரதேசங்கள் அதியுயர் பாதுகப்பு வலயமாகவோ வனவிலங்கு சரணலாயமாகவோ காணப்படுகிறது.

புவியியலும் காலநிலையும் தொகு

மினிப்பே அண்சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் மத்திய மலைநாட்டின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 152.7048 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள் தொகு

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 47760 47373 40 21 317 0 9
கிராமம் 47760 47373 40 21 317 0 6

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 47760 47277 27 326 75 55 0
கிராமம் 47760 47277 27 326 75 55 0

கைத்தொழில் தொகு

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை, சோளப்பயிர்செய்கை இடத்தை பெருகிறது.

குறிப்புகள் தொகு


உசாத்துணைகள் தொகு


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்  
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினிப்பே&oldid=2228655" இலிருந்து மீள்விக்கப்பட்டது