மிர்பூர் தாணா

மிர்பூர் (Mirpur,வங்காள மொழி: মীরপুর/মিরপুর) வங்காளதேசத்தின் தலைநகர் தாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றாகும். இதனைச் சுற்றி வடக்கில் பல்லவி தாணா, தெற்கில் மொகமதுப்பூர் தாணா, கிழக்கில் காஃப்ருல் தாணா, மற்றும் மேற்கில் சாவார் உள்ளன.[1]

மிர்பூர்
মীরপুর (মিরপুর)
உள் மாவட்டம் (தாணா)
A picture of Grameen Bank situated in Mirpur
கிராமின் வங்கியின் கோபுரம் மிர்பூரின் வான்வெளியில் ஆதிக்கம் செலுத்துகிறது
நாடு வங்காளதேசம்
கோட்டம்தாக்கா கோட்டம்
மாவட்டம்தாக்கா மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்58.66 km2 (22.65 sq mi)
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்10,74,232
 • அடர்த்தி16,838/km2 (43,610/sq mi)
நேர வலயம்வ.சீ.நே (ஒசநே+6)
அஞ்சல் குறியீடு1216
இணையதளம்மிர்பூர் தாணாவின் அலுவல்முறையான நிலப்படம்

புவியியல் தொகு

 
மிர்பூரின் அகலப்பரப்பு காட்சி

மிர்பூர் 23°48′15″N 90°22′00″E / 23.8042°N 90.3667°E / 23.8042; 90.3667இல் அமைந்துள்ளது. 58.66 km2 (22.65 sq mi) பரப்பளவில் டாக்கா நகரத்தின் வட-கிழக்கில் இது அமைந்துள்ளது.

மக்கள்தொகையியல் தொகு

அசரத் ஷா அலி போக்தாதி மிர்பூரின் குறிப்பிடத்தக்க மனிதர் ஆவார். பாக்தாத் நகரிலிருந்து இங்கு புலம் பெயர்ந்தவர். 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 1,074,232 ஆகும். இதில் ஆண்கள் 54.15% பெண்கள் 45.85% ஆகும்.[2] 610,270 நபர்கள் 18 அகவைக்கு மேலானவர்கள். சராசரி கல்வியறிவு 68.9% (7+ அகவைகள்) ஆக உள்ளது; இது தேசிய சராசரியான 48.6%ஐ விடக் கூடுதலாக உள்ளது. அண்மையில்தான் மிர்பூர் தாணா சீரமைக்கப்பட்டு ஷா அலி, பல்லவி மற்றும் காஃப்ருல் என மூன்று தாணாக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.[3]

மேற்சான்றுகள் தொகு

  1. Md. Abu Hasan Farooque (2012). "Mirpur Model Thana". in Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh இம் மூலத்தில் இருந்து 2013-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131217225024/http://www.banglapedia.org/HT/M_0316.htm. பார்த்த நாள்: 2014-03-22. 
  2. 2000 Census of Bangladesh
  3. "Population Census Wing, BBS". Archived from the original on 2005-03-27. பார்க்கப்பட்ட நாள் November 10, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்பூர்_தாணா&oldid=3575742" இலிருந்து மீள்விக்கப்பட்டது