மிஸ்டர் பீன்

மிஸ்டர் பீன் (Mr. Bean), ரோவன் அட்கின்சன் மற்றும் ரிச்சர்ட் கர்டிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு பிரிட்டிஷ் நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது டைகர் ஆஸ்பெக்ட் புரொடக்சன்சால் தயாரிக்கப்பட்டதாகும். இதில் அட்கின்சன் தலைமைப் பாத்திரமான மிஸ்டர் பீன் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தார். இத்தொடர் கர்டிஸ் மற்றும் ராபின் டிரிஸ்கால் உடன் இணைந்து, எழுதிய 15 அத்தியாயங்களைக் கொண்டிருந்தது. இதன் முதல் அத்தியாயம் மட்டும் பென் எல்டன் என்பவர் ரோவன் அட்கின்சனுடம் சேர்ந்து எழுதினார். 15 பகுதிகளில் 14 பகுதிகள், ஐடிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 1 சனவரி 1990 அன்று முதல் 1995 திசம்பர் 15 வரை ஒளிபரப்பப்பட்டது. "ஒரு வயதுவந்த மனிதனுக்கு உள்ளேயுள்ள ஒரு குழந்தை" என்று மிஸ்டர் பீன் பாத்திரம் குறித்து அட்கின்சன் விவரித்தார். அன்றாட பணிகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க மிஸ்டர் பீன் எடுக்கும் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஏற்படும் சம்பவங்களாக இந்த தொடர் நாயகனின் கதை தொடர்கிறது.

மிஸ்டர் பீன்

மிஸ்டர் பீன் கதாபாத்திரம் அரிதாகவே பேசுகிறது. மேலும் தொடரின் பெரும்பகுதி நகைச்சுவையானது, அவருக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மற்றவர்களை போன்றல்லாமல் வழக்கத்திற்கு மாறாக அவர் அசாதாரணமாக தீர்வுகளைப் பெறுகிறார். ஜாக்குவெஸ் டாட்டி மற்றும் ஊமைத் திரைப்படங்களில் நடித்த பல காமிக் நடிகர்கள் போன்ற கலைஞர்களால் இந்தத் தொடர் பெரிதும் புகழப்பட்டது. அதன் ஐந்து வருட ஓட்டத்தில், 1992 ஆம் ஆண்டின் "தி ட்ரபிள் வித் மிஸ்டர் பீன்" (மிஸ்டர் பினின் தொல்லை) என்ற அத்தியாயமானது 18.74 மில்லியன் நேயர்களால் பார்க்கப்பட்டது. இந்த தொடர், ரோஸ் டி'ஆர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி 245 பிராந்தியங்களில் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரோவன் அட்கின்சன் லண்டன் 2012 கோடைக்கால ஒலிம்பிக் தொடக்க விழாவிலும், ஸ்னிக்கர்ஸ் சாக்கலேட்டின் விளம்பரத்திற்கும் மிஸ்டர் பீன் வேடத்தில் நடித்துள்ளார்.

விருதுகள் தொகு

மிஸ்டர் பீனின் முதல் அத்தியாயம் கோல்டன் ரோஸ் உள்பட மூன்று விருதுகளை 1991 மான்ட்ரக்ஸில் ரோஸ் டி ஓர் லைட் எண்டர்டெயின்மெண்ட் திருவிழாவில் பெற்றது. இங்கிலாந்தில் "தி கர்ஸ் ஆஃப் மிஸ்டர் பீன்"(மிஸ்டர் பீனின் சாபம்) எபிசோட் பல BAFTA விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 1991 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் "சிறந்த லைட் எண்டர்டெயின்மெண்ட் பெர்ஃபார்மென்ஸ்" விருதுக்காக அட்கின்சன் மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டார்.[1] 1991 இல் "சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி", "சிறந்த நகைச்சுவை" (திட்டம் அல்லது தொடர்) ஆகிய விருதுகளையும் மிஸ்டர் பீன் தொடர் பெற்றது.

கதாபாத்திரங்கள் தொகு

மிஸ்டர் பீன் தொகு

ரோவன் அட்கின்சன் நடித்த முக்கிய கதாபாத்திரம், குழந்தைத்தனமான விதூஷகன், அன்றாட பணிகளுக்கு பல்வேறு அசாதாரணமான திட்டங்களைக் கொண்டுவருகிறார். பிளாட் 2, 12 ஆர்பர் சாலை, ஹைபரி என்ற முகவரியில் தனியாக வாழ்கிறார். அவர் வழக்கமாக ஒரு டிஜிட்டல் கடிகாரத்தை அணிந்துள்ளார்.மிஸ்டர் பீன் கதாபாத்திரம் அரிதாகவே பேசுகிறது. மேலும் இத்தொடரின் பெரும்பகுதி நகைச்சுவையானது.

இர்மா கோப் தொகு

மிஸ்டர் பீனின் காதலி, இர்மா கோப், மூன்று அத்தியாயங்களில் தோன்றுகிறார். "தி கர்ஸ் ஆஃப் மிஸ்டர் பீன்" (மிஸ்டர் பீனின் சாபம்) மற்றும் "மிஸ்டர் பீன் கோஸ் டூ டவுன்" (மிஸ்டர் பீன் நகரத்திற்கு செல்கிறார்) ஆகியவற்றில், இந்த பாத்திரம் "காதலி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

டெடி தொகு

டெடி என்பது, மிஸ்டர் பீனின் கரடி பொம்மை. அது மிஸ்டர் பீனின் சிறந்த நண்பர். டெடி உயிரற்ற பொம்மேயாக இருந்தாலும், மிஸ்டர் பீன் அதை ஒரு உயிருள்ள நன்பனாக பாசாங்கு செய்கிறார்.. கரடி பொம்மையானது உயிருள்ளது போலவே மிஸ்டர் பீன் நடந்துகொள்கிறார். அவர் அப்பொம்மைக்கும் ஒரு கிறிஸ்துமஸ் பரிசு வாங்குகிறார். காலை நேரத்தில் அதை எழுப்ப முயற்சிக்கத்தயங்குவார்.

மேற்கோள்கள் தொகு

  1. "மிஸ்டர் பீன் வாங்கிய விருதுகள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்டர்_பீன்&oldid=2811819" இலிருந்து மீள்விக்கப்பட்டது