மீக்குளிர்வு

மீக்குளிர்வு (Supercool) என்பது, ஒரு நீர்மத்தை அது திண்மம் ஆகாமல் அதன் உறைநிலைக்குக் கீழ் குளிர்விக்கும் ஒரு செயற்பாடு ஆகும். இவ்வாறு அதன் உறைநிலைக்குக் கீழ் குளிர்விக்கப்படும் ஒரு நீர்மத்தில் சிறு பளிங்கு ஒன்று இடப்படும்போது அதனைச் சுற்றிப் பளிங்கு அமைப்பு உருவாகின்றது. இவ்வாறான ஒரு பளிங்குக் கரு இல்லாவிட்டால், ஓரகத் திண்மநிலை (homogeneous nucleation) ஒன்று எட்டும் வெப்பநிலை வரை அது நீர்ம நிலையிலேயே இருக்கும்.

நீரின் உறைநிலை 273.15 K (0 °C அல்லது 32 °F) ஆகும். ஆனால் நீரை அது ஓரகத் திண்மமாகும் வரை ஏறத்தாழ 231 K (−42 °C) வெப்பநிலைவரை நீர்மநிலையிலேயே மீக்குளிர்விக்க முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீக்குளிர்வு&oldid=2223116" இலிருந்து மீள்விக்கப்பட்டது